ரஜினியின் ஜோடியை முடிவு செய்த ரஞ்சித்-தனுஷ்.?

ரஜினியின் ஜோடியை முடிவு செய்த ரஞ்சித்-தனுஷ்.?

huma-qureshiஷங்கரின் 2.0 படத்தை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதற்கான போட்டோ ஷீட் ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ரஜினியே நேற்று ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியில் 15க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷி, அண்மையில் வெளியான ஜாலி எல்எல்பி படத்தில் அக்சய்குமாருடன் நடித்திருந்தார்.

Bollywood Actress Huma Qureshi is likely to play female lead in Rajinis Thalaivar 164

தளபதி61 படத்தின் விஜய்-சமந்தா சூட்டிங் தகவல்கள்

தளபதி61 படத்தின் விஜய்-சமந்தா சூட்டிங் தகவல்கள்

Atlee shoot Vijay and Samantha shots on June monthஅட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

இதில் விஜய் மற்றும் நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்பே படமாக்கிவிட்டார் அட்லி.

தற்போது ஐரோப்பாவில் விஜய் மற்றும் காஜல் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் அங்கு முடிவடைந்தபின் சென்னை திரும்பவுள்ளது படக்குழு,

வரும் ஜூன் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்கவுள்ளது.

இதில் விஜய், சமந்தா ஆகியோரின் காட்சிகளை படமாக்கவிருக்கின்றனர்.

இந்த விஜய் கேரக்டர் மேஜிக்மேன் கேரக்டர் என்பதை நம் தளத்தில் படித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘ரஜினி தொட்டதால் என் லேப்டாப்பை விற்கமாட்டேன்.’- அருண் வைத்யநாதன் நெகிழ்ச்சி

‘ரஜினி தொட்டதால் என் லேப்டாப்பை விற்கமாட்டேன்.’- அருண் வைத்யநாதன் நெகிழ்ச்சி

I wont sale my laptop since Rajini touched it says Arun Vaidyanathanபிரசன்னா-ஸ்நேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கி தயாரித்தவர் அருண் வைத்யநாதன்.

அதன்பின்னர் பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை தயாரித்தார்.

பின்னர் மோகன்லால் நடித்த பெருச்சாளி படத்தை மலையாளத்தில் இயக்கியிருந்தார்.

தற்போது அர்ஜீனின் 150வது படமாக நிபுணன் படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இதிலும் இவரின் ஆஸ்தான நாயகன் பிரசன்னா நடித்துள்ளார். மேலும் நாயகியாக வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் இதன் டீசரை 150 பிரபலங்கள் இன்று வெளியிட்டனர்.

ஓரிரு தினங்களுக்கு முன், இந்த டீசரை ரஜினியிடம் போட்டுக் காண்பித்தனர் என்பதை பார்த்தோம்.

அப்போது அருண்வைத்யநாதன் அவர்களின் லேப்டாப் ரஜினி தொட்டு பயன்படுத்தியுள்ளார்.

எனவே சூப்பர் ஸ்டார் தொட்ட என் லேப்டாப்பை நான் விற்கமாட்டேன். என்னுடன் வைத்துக் கொள்வேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Arun Vaidyanathan‏ @Arunvaid
What is SUPERSTAR watching 😉 P.S:- That’s my laptop, headphones & its not for sale anymore #NIBUNAN #VISMAYA #ARJUN150

I wont sale my laptop since Rajini touched it says Arun Vaidyanathan

nibunan team with rajini

ரஜினியுடன் போட்டோ எடுங்க, உறுதிமொழியும் எடுங்க.. – எஸ்பி முத்துராமன்

ரஜினியுடன் போட்டோ எடுங்க, உறுதிமொழியும் எடுங்க.. – எஸ்பி முத்துராமன்

Rajini SP Muthuramanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு இன்றுமுதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கான தொடக்க விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

“ரஜினிகாந்த் நடிகராக மட்டும் அல்ல, நல்ல நண்பராக உள்ளார்.

எங்களுக்குள் ஒரு சகோதர நட்பு என்றும் உள்ளது.

புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் பார்த்தபோது ரஜினி எப்படி பழகினாரோ இன்றும் அப்படியிருக்கிறார்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படிக்கும்போது ஒரு குடிசையில்தான் இருந்தார்.

இன்றும் அவர் வீட்டில் மேல் அதுபோன்ற ஒரு குடிசை இருக்கிறது. எதற்கு ரஜினி என்று கேட்டால், குடிசையில்தானே என் வாழ்க்கை ஆரம்பமானது.

அதை என்றும் மறக்க கூடாது என்றார். அவர் பழசை என்றும் மறக்காதவர்.

இன்று புகழின் உச்சத்தை எட்டிவிட்டாலும் அந்த புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதன் அவர்.

அவர் எப்போதும் பல உதவிகளை செய்துவருகிறார். அது யாருக்கும் தெரியாது. அவர் கொடுத்து பழக்கப்பட்டவர்.

நீங்கள் ரஜினியின் புகைப்படம் எடுக்கும்போது அவருடன் கைகொடுக்க வேண்டாம். அவரது காலில் விழக்கூடாது.

ரஜினியின் போட்டோ எடுப்பது முக்கியமில்லை. எடுத்துவிட்டோம் என்று மற்றவர்களிடம் காண்பிப்பது முக்கியமல்ல.

உங்கள் வீட்டில் அவரது போட்டோ இருக்கும்போது, அதை பார்க்கும்போது அவரைப் போல ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

அவரை நீங்கள் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இதை உறுதிமொழியாக எடுத்துக கொள்ளுங்கள்” என்றார்.

Fans must learn discipline from Thalaivar Rajini says SP Muthuraman

‘ரஜினி-கமலும்… தமிழக அரசியலும்…’ அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

‘ரஜினி-கமலும்… தமிழக அரசியலும்…’ அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

anbumani ramadossஇன்று ரசிகர்களிடையே ரஜினி பேசிய பேச்சு அரசியல் உலகிலும் சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் பேச்சு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதுரையில் உள்ள பா.ம.க. மாநில துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது…

தமிழ்நாட்டை சினிமாகாரர்கள் ஆட்சி செய்தது போதும்.

கமல் ஒரு தைரியமான நபர். அவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கிறார்” என ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் தன் கருத்தை தெரிவித்தார்.

Anbumani Ramadoss opinion about Rajini Kamals political stands

அரசியல் உலகில் மீண்டும் ரஜினி வாய்ஸ்; தமிழிசை என்ன சொல்கிறார்.?

அரசியல் உலகில் மீண்டும் ரஜினி வாய்ஸ்; தமிழிசை என்ன சொல்கிறார்.?

tamilisai-soundararajanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினாலும் பேசாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சு எப்போதும் மீடியா உலகில் இருந்துக் கொண்டே இருக்கும்.

அதுவும் இன்று ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய பேச்சு அரசியல் உலகில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்று நடிகனாக இருக்கும் நான். நாளை கடவுளால் வேறு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதில் உண்மையாக இருப்பேன். நேர்மையாக செயல்படுவேன் என்றார்.

மேலும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், தற்போது அதுபற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

இறுதியாக நான் அரசியலுக்கு வந்தால், ரசிகர்கள் என்றாலும் அவர்களுக்கு பணத்தாசை பிடித்திருந்தால் அவர்களை நெருங்க விட மாட்டேன் என மறைமுகமாக தன் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது…

ஊழலை எதிர்ப்பதாக ரஜினி குறிப்பிட்டு இருந்தார். அவரின் நிலைப்பாடும் பாஜகவின் கருத்தும் ஒன்றுதான்.

அவரது பேச்சின்மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார்.

நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து எனவும் தமிழிசை தெரிவித்தார்.

ரஜினியின் இந்த வாய்ஸ் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Tamilisai Soundararajan opinion about Rajinikanth entry into Politics

More Articles
Follows