தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லேடி சூப்பர் ஸ்டார் என அன்பாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரின் கால்ஷீட்டுக்கு கோலிவுட்டே தவம் கிடக்கிறது.
தனக்கு பிடித்த படங்களை ஒப்புக் கொண்டு நடித்தாலும் அப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்துக் கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் இவர்.
இந்நிலையில் தற்போது அந்த கொள்கையை ராம்சரண் தயாரிக்கு படத்திற்காக காற்றில் பறக்க விட்டுள்ளாராம்.
சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’.
இதில் அமிதாப் பச்சன், தமன்னா, விஜய்சேதுபதி, ஜெகபதி பாபு, ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் நயன்தாராவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவுமான ராம்சரண் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால், படத்தின் புரோமோஷனையும் பிரம்மாண்டமாக செய்ய உள்ளதாம் படக்குழு.
எனவே படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாம்.
இது தொடர்பாக நயன்தாராவிடம் ராம்சரண் பேச, அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
நாம் என்னதான் தலை கீழாக நின்றாலும் நம் பட விளம்பரங்களுக்கு நயன்தாரா முக்கியத்துவம் தருவதில்லையே என்ற கோபத்தில் உள்ளதாம் கோலிவுட் சினிமா.