அஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி

How Rajinikanth broke V and Thursday sentiment of Ajithவியாழன் கிழமையும் V என்ற எழுத்தும் நடிகர் அஜித்தின் சென்டிமெண்ட் விஷயங்களாகும்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் வி என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கி எம் எழுத்தில் முடிந்துள்ளது.

மேலும் இந்த படங்களின் பாடல்கள், டீசர்கள், போஸ்டர்கள் என அனைத்தையும் வியாழக்கிழமைகளில் வெளியிட்டு வந்தனர். இதை நள்ளிரவு சமயத்திலும் வெளியிட்டனர். (இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு கூட வெளியிட்ட கொடுமை கூட உண்டு)

இதை பலரும் விமர்சித்தாலும் படக்குழுவினர் கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் முன்னறிவிப்பு இல்லாமல் விஸ்வாசம் பட மோசன் போஸ்டரை திடீரென நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வெளியிட்டனர்.

வியாழக்கிழமை சென்டிமெண்ட்டை அஜித் டீம் ஏன் உடைத்தார்கள்? என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி பட செய்திகள் என்பதுதான் என தெரிய வந்துள்ளது.

பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைக்காலமாக ரஜினியின் பேட்ட படம் போஸ்டர்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.

சரி வியாழன் சென்டிமெண்ட் படி மோசன் போஸ்டரை வெளியிட்டாலும் நவம்பர் 29 வியாழன் அன்று 2.0 படம் ரிலீஸாகிறது.

அன்று மோசன் போஸ்டர் வந்தால் ரஜினி அலையால் அது வந்த சுவடே தெரியாமல் போய்விடும்.

மேலும் அதற்கு அடுத்த வாரம் முதல் பேட்ட பட சிங்கிள் & செகண்ட் பாடல்கள் வெளியீடு நடைபெறுகிறது.

அதற்கு அடுத்த வாரம் ரஜினி பிறந்தநாள் விழா வருகிறது.

எனவே விஸ்வாசம் மோசன் போஸ்டர் வெளியீடு தள்ளிக் கொண்டே போகும் என்பதால் இந்த திடீர் முடிவை விஸ்வாசம் படக்குழு எடுக்க வேண்டி இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

How Rajinikanth broke V and Thursday sentiment of Ajith

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…
...Read More

Latest Post