தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் உள்ள பல துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.
எனவே அவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட வேண்டும் என ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார்.
இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் 64வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் பிரிவையும் சேர்க்க அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்து விட்டாராம்.
மேலும் ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒளிப்பதிவாளர் ஆகியவற்றுக்கும் இனி தேசிய விருது வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய ‘சினிமா வீரன்’ என்ற குறும்படத்தை ஐஸ்வர்யா இயக்கி வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.








