தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்.
இந்த இரண்டு படங்களை அடுத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை எடுக்கவிருந்தார் ஐஸ்வர்யா. அது குறித்த அறிவிப்பும் வெளியானது.
அதன்பின்னர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளதாக பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.
ஆனால் அதுவும் கிடப்பிலேயே போடப்பட்டது.
இந்நிலையில், விரைவில் மற்றொரு புதிய படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறாராம் ஐஸ்வர்யா தனுஷ்.
அதில் தெலுங்கின் பிரபலமான நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளதாம்.
Aishwarya Dhanush teams up with Telugu Actor Dr Rajasekar