தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகர், இசையமைப்பாளர் என பவனி வந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக வெற்றி பவனி வருகிறார்.
‘புரூஸ் லீ, கடவுள் இருக்குறான் குமாரு, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.
இதில் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தில் ஆனந்தியுடன் டூயட் பாடவிருக்கிறார்.
இதில் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் வேடத்திலும் ‘கயல்’ ஆனந்தி நடிகை வேடத்திலும் நடிக்கவிருக்கிறார்களாம்.
இவர்களுடன் நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடிக்கிறது.