ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakashஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அடங்காதே, ஐங்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஐங்கரன் படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் சாட்டை, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-விமல்

மீண்டும் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vimalகேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தனர்.

அதன்பின்னர் விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தில் எதுக்கு மச்சான் காதலு என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் விமலுக்காக ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் `மன்னர் வகையறா’ படத்தில் நடித்து வருகிறார் விமல்.

இதில் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

`துருவங்கள் 16′ படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தில்தான் அந்த பாடல் இடம் பெற உள்ளதாம்.

சூர்யாவுடன் படையப்பா கூட்டம்… படம் வெளியானதால் பரபரப்பு

சூர்யாவுடன் படையப்பா கூட்டம்… படம் வெளியானதால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya ramya krishnan senthilசூர்யா நடித்துள்ள சி3 படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு தற்போது ஒருவழியாக பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒத்திவைப்பு ரசிகர்களுக்கு சின்ன வருத்தத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த படத்தில் சூர்யாவுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகிய இருவரும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் படையப்பா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriyas Thaana Serndha Kootam picture leaked

விஜய் 61 படத்தை ராசியான இடத்தில் தொடங்கிய அட்லி

விஜய் 61 படத்தை ராசியான இடத்தில் தொடங்கிய அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay jothika samantha kajal atleeதெறியை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இவருடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இதன் சூட்டிங் இன்று பூஜையுடன் சென்னை, ஈசிஆர் சாலையில் தொடங்கியுள்ளது.

தெறி படத்தின் பூஜையும் அதே பகுதியில்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay 61 movie Pooja happened today at ECR

மறைமுகமாக லாரன்சுக்கு உதவிய விஜய்-சிம்பு-விஜய்சேதுபதி-தமன்னா

மறைமுகமாக லாரன்சுக்கு உதவிய விஜய்-சிம்பு-விஜய்சேதுபதி-தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vijay sethupathi simbu tamannah lawrenceநடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகம் காட்டி சினிமாவில் கலக்கி வருபவர் லாரன்ஸ்.

மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

200க்கும் மேற்பட்ட குப்பத்து குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்கி வருகிறார்.

இவையில்லாமல் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையை தன் சொந்த செலவில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து கூறும்போது, நான் மட்டுமில்லாமல் என்னுடன் பலரும் இணைந்து என்னுடைய எல்லா குழந்தைகளையும் படிக்க உதவி செய்து வருகின்றனர்.

அவர்கள் தங்கள் பெயர் வெளியில் வர வேண்டாம் என்றனர்.

ஆனால் இப்போது கூற கடமைப்பட்டுள்ளேன்.

விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, தமன்னா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

மேலும் தினந்தந்தி, ஆனந்த விகடன் நிறுவனர்களும் ஒரு கல்வியாண்டு செலவை ஏற்றுள்ளனர்” என்றார்.

Vijay Simbu Tamannah and VijaySethupathi sponsored for Lawrence

அரசியலில் லாரன்ஸ்; ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுடன் கூட்டணி

அரசியலில் லாரன்ஸ்; ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrenceஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் திரண்டனர்.

ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து கலந்து கொண்டார் லாரன்ஸ்.

போராட்டம் முடிவடையும் நாளில், அது போலீசாரால் கலவரமானது.

அதன்பின்னர் நடிகர் லாரன்ஸ் தமிழக முதல்வரை சந்தித்தார்.

இந்நிலையில் இச்சந்திப்பு குறித்தும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை குறித்தும் கூற பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவிருக்கிறோம்.

அந்த அமைப்புக்கு எந்த பெயரும் இதுவரை முடிவாகவில்லை.

அதையும் மாணவர்களே முடிவு செய்வார்கள்.

இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள்.

மேலும் அவர்கள் ஓட்டுக்காக பணம் வாங்க மாட்டார்கள் என்று உறுதியளித்த பின்னரே இந்த அமைப்பில் சேரலாம்.

இந்த அமைப்பு மருத்துவம் மற்றும் கல்விக்காக உதவும்,

சில நேரம் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானால், அதற்கான அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன்.

ஒவ்வொரு தொகுதியிலும் மாணவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று பேசினார்.

Lawrance will enter into Tamilnadu Politics with Students support

More Articles
Follows