பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakashஅதர்வா நடிப்பில் வெளியான “ஈட்டி” படத்தை இயக்கியவர் ரவிஅரசு.

இப்படத்தை தொடர்ந்து அவர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தை விஜய்சேதுபதியின் நண்பரும் றெக்க படத் தயாரிப்பாளருமான பி.கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபோட்டோ ஷுட் ஜனவரி 1ஆம் தேதி நுங்கம்பாக்கம் செட் ஃபேரில் நடந்தது.

இதன் ஃபர்ஸ்ட் லுக்கை பொங்கல் தினத்தில் வெளியிடயுள்ளனர்.

ஜிவி. பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள புரூஸ் லீ படம், பொங்கல் திருநாளில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Sivakarthikeyanநெல்லை மாவட்டத்தில் பிரபலமான தியேட்டர் ராம் சினிமாஸ்.

கடந்தாண்டில் இந்த தியேட்டர்களில் வெளியான படங்கள் குறித்து ஓர் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதில்…

கடந்தாண்டு நல்ல படங்களை ரிலீஸ் செய்து வசூல் செய்தோம்.

அதே நேரத்தில் சூர்யாவின் 24, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ, மாதவனின் இறுதிச்சுற்று ஆகிய நல்ல படங்களை மிஸ் செய்துவிட்டோம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

Ram Muthuram Cinemas ‏@RamCinemas
2016 went really good for us We released many good movies and missed some good movies too #24 #RM #Remo #IrudhiSuttru and a few

ஏஆர்.ரஹ்மான்-ஷங்கர்-சிவகார்த்திகேயனை இணைத்த ‘துருவங்கள்-16’

ஏஆர்.ரஹ்மான்-ஷங்கர்-சிவகார்த்திகேயனை இணைத்த ‘துருவங்கள்-16’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman Sivakarthikeyan Shankar appreciates Dhruvangal 16கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான படம் துருவங்கள் பதினாறு.

கார்த்திக் நரேன் இயக்கிய இப்படத்தில் ரகுமான் நடித்திருந்தார்.

படம் வெளியானது முதல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் இப்படி ஒரு படத்தை பார்த்தது இல்லை என்றார்.

இவரை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரும் படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை பாராட்டியுள்ளதோடு, தன் அலுவலகத்திற்கு அழைத்து நேரிலும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

d 16 team wishes

ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Gautam Menonஒரு படத்தின் சூட்டிங்கே இறுதிக் கட்டத்தை எட்டினாலும் படத்தின் பெயரை சிலர் அறிவிக்க மாட்டார்கள்.

ஆனால் படத்தின் தலைப்பு, டீசர் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட்டாலும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் பெயர் இதுவரை எதிலும் வெளியாகவில்லை.

இப்படம் தொடங்கப்படும் போது, வழக்கம்போல தன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று கவுதம் மேனன் நாயகனிடம் கூறினாராம்.

எனவேதான் தனுஷ்ம் நடிக்க ஒப்புக் கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் வேறொருவர்தான் இசையமைப்பாளர் என்று தெரிய வந்துள்ளது.

கிடாரி படத்தின் இசையமைப்பாளரான தர்புகா சிவாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

இவர் ‘ராஜதந்திரம்’ படத்தில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?

ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini vijay ajith2017 புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடித்த பைரவா பட ட்ரைலர் வெளியானது.

இது குறைந்த நாட்களில் 50 லட்சம் பார்வையாளர்கள், 2 லட்சம் லைக்ஸ்கள் பெற்று மாபெரும் சாதனையை யுடியூபில் பெற்று வருகிறது.

எனவே விஜய் ரசிகர்கள் இதை கொண்டாட்டி வருகின்றனர்.

மேலும் இச்சாதனைகளை முறியடிக்க வேண்டுமென்றால் அது சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும் என்கிறார்களாம்.

அப்படியென்றால் இது அஜித்திற்கான சவாலா? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ‘கபாலி’… சிம்பு-ஜி.வி. பிரகாஷுக்கு ‘பாட்ஷா’

சிவகார்த்திகேயனுக்கு ‘கபாலி’… சிம்பு-ஜி.வி. பிரகாஷுக்கு ‘பாட்ஷா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu GV Prakashசில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ வெளியானது.

இப்படத்தின் சில காட்சிகளில் கபாலி பேனரையும் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகன் என்பதையும் தெளிவாக காட்டியிருந்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சுமார் மூஞ்சி குமாரு..’ என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கானா வினோத் எழுதியுள்ள இப்பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இப்பாடலில் நான் பாட்ஷா போல் ஒரு டான் என்றும், நாங்கள் பாட்ஷா ரஜினியின் ரசிகன் என்றும் ஜி.வி. பிரகாஷ் ஆடிப்பாடுவதாக பாடல் காட்சிகள் அமைந்துள்ளது.

இதில் ரஜினியின் பாட்ஷா பேனர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows