பீட்டர் பீட்ட ஏத்து… மீண்டும் ஒரு மெர்சல் அரசன் வர்றான்…!

GV Prakash to sing an intro song for AR Rahman in Sarvam Thaala Mayamஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம் சர்வம் தாள மயம்.

ராஜுவ் மேனன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மைண்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில், மெர்சல் படத்தில் இடம்பெற்ற `மெர்சல் அரசன்’ பாடலுக்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,

` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா’ ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் மகிழ்ச்சி.

`டேக் இட் ஊர்வசி’ பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்’ பாடலாக இது இருக்கும்.

`மெர்சல் அரசன்’ பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து’ என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் ஆனந்தமாக இருக்கும் ‘ என்று கூறியிருக்கிறார்.

GV Prakash to sing an intro song for AR Rahman in Sarvam Thaala Mayam

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…
...Read More
மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட…
...Read More
நடிகர், பாடலாசிரியர், பாடகர் என வலம்…
...Read More

Latest Post