தனுஷ் படத்திலும் கௌதம் மேனனின் அதே பார்முலா..!

தனுஷ் படத்திலும் கௌதம் மேனனின் அதே பார்முலா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய ஸ்டைலிஷ் இயக்கத்தால் ரசிகர்கள் அதிகளவில் ஈர்த்து வைத்துள்ளவர் கௌதம் மேனன்.

இவருடைய படங்களின் தலைப்புகள் எல்லாம் நீண்ட பெயரை கொண்டிருக்கும்.

அதுபோல் பெரும்பாலான காட்சிகளில் வாய்ஸ் ஓவர்தான் இருக்கும். அதாவது பின்னணி குரல் ஒலித்துக் கொண்டிருக்க படம் ஓடிக் கொண்டே கொண்டிருக்கும்.

இந்நிலையில் தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் இதே பார்முலாவைதான் பாலோ செய்யவிருக்கிறாராம் இயக்குனர்.

நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். அவர் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ள, அவரை காப்பாற்ற செல்லும் தனுஷ், கதை சொல்லியபடியே செல்வாராம்.

மேலும், முதல் பாதியில் காதலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷனும் கலந்து கலவையான படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

தல 57 அப்டேட்ஸ்: அனுஷ்கா அவுட்… காஜல் கம்மிங் இன்..!

தல 57 அப்டேட்ஸ்: அனுஷ்கா அவுட்… காஜல் கம்மிங் இன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல 57 படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இதில் இப்படத்தின் நாயகன் அஜித் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

விரைவில் இதன் சூட்டிங் பல்கேரியா நாட்டில் நடைபெற்றவுள்ளது.

இதில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கிறார் என்றும் அவரின் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, அஜித்தின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

‘கயல்’ ஆனந்தியை இயக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

‘கயல்’ ஆனந்தியை இயக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகர், இசையமைப்பாளர் என பவனி வந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக வெற்றி பவனி வருகிறார்.

‘புரூஸ் லீ, கடவுள் இருக்குறான் குமாரு, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.

இதில் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தில் ஆனந்தியுடன் டூயட் பாடவிருக்கிறார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் வேடத்திலும் ‘கயல்’ ஆனந்தி நடிகை வேடத்திலும் நடிக்கவிருக்கிறார்களாம்.

இவர்களுடன் நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் உள்ளிட்ட காமெடி பட்டாளமே நடிக்கிறது.

கபாலியுடன் பாகுபலிக்கு ஏற்பட்ட கனெக்க்ஷன்..!

கபாலியுடன் பாகுபலிக்கு ஏற்பட்ட கனெக்க்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali_posterரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் ஜூலை 22ஆம் ரிலீஸ் ஆகிறது.

இந்திய ரசிகர்களையும் மீறி இப்படம் உலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

எனவே இப்படத்தின் ஓப்பனிங்கை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதே நாளில்தான் ராஜமௌலியின் பாகுபலியும் சீனாவில் ரிலீஸ் ஆகிறதாம்.

அங்கு மட்டும் கிட்டதட்ட 5000 திரையரங்குகளில் இது வெளியாகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே இந்திய மொழிகளில் ரூ.600 கோடியை வசூலித்துள்ள பாகுபலி மீண்டும் பல கோடிகளை வசூலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘தில்லுக்கு துட்டு’: பெயருக்கு ஏற்ற வசூலை அள்ளும் சந்தானம்.!

‘தில்லுக்கு துட்டு’: பெயருக்கு ஏற்ற வசூலை அள்ளும் சந்தானம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamகாமெடி ரூட்டில் பயணித்த சந்தானம், தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.

அதிலும் டான்ஸ், பைட், சென்டிமெண்ட் என படத்திற்கு படம் தன்னையும் மெருக்கேற்றி வருகிறார்.

எனவே இவரின் தில்லான முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தில்லுக்கு துட்டு என்ற இவரது படம் வெளியானது.

லொள்ளு சபா புகழ் ராம்பாலா இப்படத்தை இயக்கியுள்ளார்.

வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ. 3 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இனிவரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது.

ஹ்ம்… இது சந்தானத்தின் தில்லுக்கு கிடைத்த துட்டுதான்..

லதா ரஜினி மீது எப்ஐஆர்…? பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ்.!

லதா ரஜினி மீது எப்ஐஆர்…? பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kochadaiiyaanரஜினிகாந்த் லதா தம்பதியரின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார்.

மோசன் கேப்சரிங் முறையில் தயாரான இப்படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படம் தொடர்பாக லதா ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

தங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் படத்தை வெளியிட்டனர்.

எனவே தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிய லதா ரஜினி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட், இன்னும் 4 வாரங்களில் லதா ரஜினிகாந்த் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

More Articles
Follows