தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் கோலிவுட்டே எதிர்பார்த்த பிகில் பட டிரைலர் சற்றுமுன் வெளியானது.
அட்லி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடம் 40 நொடிகள் உள்ளது.
இதில் முதல் காட்சியிலேயே கால்பந்தாட்ட போட்டிக்கு பெண்கள் தயாராகவுள்ளனர்.
அப்போது கோச் விஜய் கிரெண்ட்டுக்கு வருகிறார். அதில் இந்துஜா குட்மார்னிங் சொல்ல கேக்கல.. கேட்கல என்கிறார் விஜய். அதன்பின்னர் சத்தமாக சொல்கிறார் விஜய்.
ஒரு ரவுடி நமக்கு கோச்சா? என கோபப்படுகிறார் இந்துஜா.
டிரைலரில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 விதமான கெட் அப்புகளில் விஜய்கள் வருகின்றனர்.
இப்போ எல்லாம் ஆக்சன் ஹீரோவா ஆகிட்டீங்க.. காதலுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்கிறார் விஜய்யை பார்த்து நயன்தாரா.
இடையில் யோகிபாபு, விவேக், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் வருகின்றனர்.
புட் பால் பெண்கள் அணியில் வர்ஷா பொல்லம்மா, ரோபோ சங்கர் மகள் உள்ளிட்டோரும் வருகின்றனர்.
விஜய்யை பார்த்து உனக்கு புட்பால் ஆட தெரியுமா? என கேட்கிறார் விவேக்.
விஜய்யின் ஜெர்ச்சியில் பிகில் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.
புட் பால் ஆட தெரியாது. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என்கிறார் விஜய்.
ட்ரைலரில் இறுதியாக ஏக்.. தோ.. தீன் என தஸ் (பத்து) வரை நம்பர்களை சொல்லுகிறார் விஜய்.
ஆக ரசிகர்களுக்கு பிகில் டிரைலர் செம விருந்துதான்.
அப்போ தீபாவளி வெறித்தனமா இருக்கும்.
Enga Aattam verithanama irukum Vijay punch in Bigil Trailer