பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

vijay sethupathi in muralitharan biopicஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ற்றை திரைப்படமாக உருவாகவுள்ளது என்பதை நாம் பார்த்தோம்.

இதில நாயகனாக நடிக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி என அதிகாரப்பூர்வமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி , இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது…

ஈழதமிழர்களை கொடூரமாக கொன்று , சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழக சிறந்த நடிகர் விஜய்சேதுபதி நடிப்பது வேதனையளிக்கிறது.

தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல கூடியவர் முத்தையா.

சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர். அப்படிபட்டவரின் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது. இது திரைப்படம் தான் என்று சமாதானம் சொல்லகூடாது.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளகூடாது.

மக்கள் செல்வராக விஜய்சேதுபதி மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்படி படம் உருவானால் அந்த திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Dravidian outfit urges Vijay Sethupathi to give up Muttiah Muralidharan biopic

Overall Rating : Not available

Related News

Latest Post