தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018-ம் ஆண்டில் வெளியாகி காதலர்கள் மட்டுமில்லாது அனைவரும் கொண்டாடிய படம் ’96’.
பிரேம்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பக்ஸ், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
இதன் தெலுங்கு ரீமேக்கை பெரிய தொகைக்கு பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றினார்.
தெலுங்கிலும் பிரேம்குமாரே இயக்கவுள்ளார்.
விஜய் சேதுபதியாக சர்வானந்த், த்ரிஷாவாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹீரோ & ஹீரோயின் இளவயது கேரக்டர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தெலுங்கில் பள்ளிக் காலத்து காதலுக்கு பதிலாக கல்லூரி காதலை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் பிரேம்குமார் கூறியதாவது..
96 படத்தின் அழகே பள்ளி காலத்திலிருந்தே தொடங்கும் அன்பின் பயணம் தான். அதில் மாற்றமில்லை.
ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்காக சிலவற்றை மாற்றுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.