தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவரது இயற்பெயர் ராசு என்றாலும் இவரது நிறம் காரணமாக செவ்வாழை என்ற பெயர் இவருடன் ஓட்டிக்கொண்டது.
இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு வயது 67.
‘பருத்திவீரன்’ படம் இவருக்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் புகழை பெற்றுத் தந்தது.
கார்த்தி மற்றும் சரவணன் உடன் இவர் நடித்த ஒரு காட்சி அப்போதே பரவலாக பேசப்பட்டது. விஜய்யுடன் இவர் நடித்திருந்த வேலாயுதம் படம் இவருக்கு 100வது படமாக அமைந்தது.
மேலும் இவர் வல்லமை தாராயோ, மைனா கந்தசாமி, உளவுத்துறை, கருத்தம்மா, மலைக்கோட்டை உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது
பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் கஸ்தூரிராஜா இயக்கிய ‘தாய் மனசு’ என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
பாரதிராஜா மற்றும் கஸ்தூரிராஜா ஆகியோரது இயக்கங்களில் கிட்டத்தட்ட 20 படங்களில் இவர் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர் அளித்த பேட்டியில்.. “நெகட்டிவான கேரக்டர்களின் நடிக்க மாட்டேன் என்றும் கடவுள் மறுப்பு நாத்திகர் வேடத்தில் நடிக்க மாட்டேன் எனவும் இவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் செவ்வாழை ராசு.. உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
Paruthi Veeran actor Sevvazhai Rasu passed away