சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அமீர்.; டைரக்டர் & ஹீரோயின் யார்..?

சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அமீர்.; டைரக்டர் & ஹீரோயின் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அமீர்.

மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் அமீர்.

பின்னர் யோகி படத்தின் மூலம் ஹீரோவானார்.

ஆர்யா நடிப்பில் இவர் இயக்கவிருந்த சங்குதேவன் படம் என்னாச்சு? என்பதே தெரியவில்லை.

தனுஷின் வடசென்னை படத்தில் அமீர் நடித்த கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் அமீர்.

இந்த படத்தை அதர்மம், பகைவன் ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்க அமீருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

யுவன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை அமீர் பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Ameer’s next is with Ramesh Krishnan

கடமைக்கு அளவே இல்லையா கமல்.; தனிமைப்படுத்தி கொள்ளாமல் சூட்டிங்.. கேள்வி கேட்கும் சுகாதாரத் துறை

கடமைக்கு அளவே இல்லையா கமல்.; தனிமைப்படுத்தி கொள்ளாமல் சூட்டிங்.. கேள்வி கேட்கும் சுகாதாரத் துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரே அறிவித்தார்.

அதன்படி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரேனாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக அவரது தோழி நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். (ஆனால் ரசிகர்கள் பலருக்கு ரம்யா தொகுத்து வழங்கிய விதம் பிடிக்கவில்லை என்பது வேறுகதை.)

கொரேனா சிகிச்சைக்குப் பிறகு கடந்த (டிசம்பர்) 4ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன் என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

மருத்துவமனையில் இருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்கிற்குச் சென்று அங்கு சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நபர்கள் ஒரு வாரத்திற்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அரசு விதிமுறை.

ஆனால் கமல்ஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேரடியான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

எனவே இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TN Health Department to seek explanation from Kamal Haassan for flouting COVID norms

ரஜினி சிம்பு பேவரைட்.. சிவகார்த்திகேயன் இன்ஸ்பிரேசன்..; மனம் திறந்தார் அஸ்வின்

ரஜினி சிம்பு பேவரைட்.. சிவகார்த்திகேயன் இன்ஸ்பிரேசன்..; மனம் திறந்தார் அஸ்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்”. இன்றைய தலைமுறை இளைஞர்களை அசத்த, மனம் வருடும் காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.

முதலில் படத்தின் பாடல்களை கலைகுழுவினர் மேடையில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் அரங்கேற்றினர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிறைய படங்கள் தயாரித்துள்ளேன். இந்தப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். முழுக்க புதுமுகங்களை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். படக்குழுவிலேயே நான் தான் வயதானவன். படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் பேசியதாவது…

நம்ம அம்மா வீட்டில் சமைக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒரு எமோஷனோடு சமைப்பாங்க, ஆனா பையனோட பிறந்த நாளைக்கு ஸ்பெஷலா சமைப்பாங்க. அந்த மாதிரி நான் சமைச்ச படம் தான் என்ன சொல்ல போகிறாய். இந்த படம் என் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும், படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் பேசியதாவது…,

என்ன சொல்ல போகிறாய், 8 பேரோட அறிமுக படம் எல்லோருக்கும் வாழ்க்கை தரப்போகிற படம், இவர்கள் எல்லோரும் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் அனைவரும் 100 படங்கள் செய்ய வேண்டும் அதில் நாங்களும் இருக்க வேண்டும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு தந்துள்ளீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…

இந்தப் படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள், அஷ்வின் என்னிடம் படத்தின் ஒரு சின்ன விஷுவலை காட்டினார். இயக்குநர் ஹரிஹரன் அதிலேயே மிகச்சிறப்பாக செய்திருந்தார். விவேக்,மெர்வின் இசை அசத்தலாக இருந்தது ஒரு காதல் படத்திற்கு இசை மிக முக்கியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அஷ்வின் எனது மகனாக மாறிவிட்டார்.

அவருக்கு நிறைய மெச்சூரிட்டி இருக்கிறது அவர் தனது படங்களை மிக கவனமுடன் தேர்வு செய்து, அதற்காக உழைக்கிறார். அவர் பெரிய இடத்திற்கு செல்வார். தயாரிப்பாளர் ரவி மிக அழகாக ஒரு குழுவை ஒருங்கினைத்து படத்தை செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…

இன்றைய இளைஞர்களை வசீகரிக்கிறார் அஷ்வின், நிகழ்கால விஸ்வநாதன் ராமமூர்த்தியாக இருக்கும் விவேக் மெர்வின் இதேபோல் என்றும் பிரியாமல் தமிழ் சினிமா இசையில் பெரும் புகழ் பெற வேண்டும். கதை அறிவு கொண்ட ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட், இயக்குநர் ஹரிஹரன் கனவை திரையில் கொண்டுவந்திருக்கிறார். ரவீந்திரன் நயாகன் அஷ்வினை பெரிய இடத்திற்கு செல்வார் அதை உணர்ந்து தான், அஷ்வின் அவரை முழுதாக ஒப்புக்கொடுத்துள்ளார். புகழ் நல்ல பிள்ளை. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி.

சாண்டி மாஸ்டர் பேசியதாவது…

நாயகன் அஷ்வின் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இயக்குநர் ஹரிஹரனின் உழைப்பில் டிரெய்லர் பார்க்கும்போதே செம அழகாக இருக்கிறது. படத்தை அழகாக செய்துள்ளார். செல்லக்குட்டி புகழ் அஷ்வின் இருவரும் இதில் இணைந்து கலக்கியுள்ளார்கள்.

தேஜு உடன் இணைந்து வேலை செய்திருக்கிறேன் நல்ல டான்ஸர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அந்த விழாவில் நான் டான்ஸ் ஆடுகிறேன் நன்றி.

இயக்குநர் உதயகுமார் பேசியதாவது..,

என் சகோதரரின் மகன் அஷ்வின். ரொம்ப பெருமையாக இருக்கிறது. என்ன சொல்ல போகிறாய் டைட்டிலே அழகாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி என்னையும் குதூகலம் கொள்ள வைத்தது. இயக்குநர் பிரபு சாலமன் அஷ்வினை வைத்து அடுத்த படம் செய்கிறார். வாழ்த்துக்கள். இந்தப்படம் பிரச்சனைகள் இல்லாத படமாக இருக்கிறது. இப்போதெல்லாம் காலண்டர் காட்டிவிட்டீர்கள் என பிரச்சனைகள் பண்ணுகிறார்கள்.

இயக்குநர் படம் எடுப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கும்போது இதையெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. காதல் மட்டும் தான் உலகத்தில் பிரச்சனை இல்லாத ஜாதி. அதை இந்தப்படம் சொல்வது மகிழ்ச்சி. அஷ்வினுக்கு நான் எந்த உதவியும் வழிகாட்டலும் செய்யவில்லை.

ஆனால் இந்தமேடையில் அவனை வளர்த்துவிட்ட விஜய் டீவிக்கும், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அஷ்வினுக்கு மிகப்பெரிய ரசிகைகள் கூட்டம் பெருகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நாயகி அவந்திகா பேசியதாவது…

இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. நடிகையாக வரவேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அஷ்வின் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படமும் உங்களுக்கு பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி

நாயகி தேஜஸ்வினி பேசியதாவது…

அஷ்வின் பீப்பிள்ஸ் லவ் என டிவிட் செய்வதன் அர்த்தம் இப்போது தான் தெரிகிறது. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஹரிஹரன் ஒவ்வொரு விசயமும் சொல்லிக்கொடுத்து செய்ய வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படக்குழுவே மிக கடுமையாக உழைத்திருக்கிறது. முதன் முதலாக பெரிய படம் செய்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் புகழ் பேசியதாவது…

உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி. ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, படம் செய்கிறாய் என்று சொன்னார். அதற்கப்புறம் 5 மாதம் கூப்பிடவில்லை. அப்புறமாக அஷ்வின் நாயகன் என்றார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இயக்குநர் இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என கெஞ்சி கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. படத்தை செய்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட்டாகிவிட்டது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் பேசியதாவது…

இறைவனுக்கு நன்றி அப்புறம் உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன் ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உங்கள் அன்பு புரியும். என்ன சொல்லப் போகிறாய் படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம்.

விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன்.

பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள்.

நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி.

சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் A.ஹரிஹரன் கூறியதாவது…

ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள்.

புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது, ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார்.

அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் A.ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” படத்தை Trident Arts நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில் ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு ), G.துரைராஜ் (கலை), மதிவதனன் (எடிட்டர்), பாலகுமாரன் M (உரையாடல்), அப்சர் R (நடன அமைப்பு), A கீர்த்திவாசன் (ஸ்டைலிஷ்), ஜெயராமன் (தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்), S.ரூபினி (புரடக்சன் கண்ட்ரோலர் ) , D.செல்வராஜ்-SN அஷ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி),

Ashwin speech at Enna Solla Pogiraai audio launch

கொரோனாவிலிருந்து மீண்டுவர இரண்டே காரணங்கள்தான்..; கமல் அறிக்கை

கொரோனாவிலிருந்து மீண்டுவர இரண்டே காரணங்கள்தான்..; கமல் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உயிரே! உறவே! தமிழே!

வணக்கம்!

நலமாக உள்ளேன்

நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு.

என்மீது நீங்கள் வைத்துள்ள நலவிருப்பம். அதனால் தான் நான் மீண்டுவந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.

நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து அயராது உழைத்த நம் மய்யத்தவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துகள். தொடர்ந்து செய்யுங்கள்.

உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இருந்துவிடாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

என்னுடைய வாழ்த்துகளும் கூட.

உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேலையை பாருங்கள். எப்படி இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இதை நீங்கள் செய்யவேண்டும்.

உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம். நீங்கள் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது எல்லா விதமான ஆயத்தங்களும், அதாவது இந்தத் தொற்றுக்கு எதிரான தற்காப்புகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த தொற்று நீங்கிவிட்டது அல்லது போய்விடும் என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

நம்முடைய பலம், நம் தொண்டர்கள் தான். அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம்.

நாளை நமதே!

– தலைவர் கமல் ஹாசன்

Kamal Haasan statement regarding his health

வாழ்க்கையில் ஜெயிக்க சாமியை நம்பு.. சினிமாவில் ஜெயிக்க பேயை நம்பு..; ‘கிராண்மா’ விழா சுவாரஸ்யங்கள்

வாழ்க்கையில் ஜெயிக்க சாமியை நம்பு.. சினிமாவில் ஜெயிக்க பேயை நம்பு..; ‘கிராண்மா’ விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது,

”இந்தப் படம், இதில் நடித்திருக்கும் நடிகர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும் தான் விரைவாக முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது கொரோனா காலம் வந்து விட்டது .எனவே 30 நாட்களில் எடுக்க வேண்டியதை 12 நாள்களில் எடுக்க வேண்டியிருந்தது.

அதுவும் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்த வேண்டும். இருந்தாலும் இதில் நடித்திருக்கும் அனைவரும் முகம் சுழிக்காது நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த படம் இந்நேரம் உருவாகி இருக்காது. அவர்களுக்கு நன்றி .தமிழில் படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பி எடுத்துள்ளோம். உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கிறோம்.” என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் பேசும்போது,

“இந்தப் படப்பிடிப்பு ஆரம்பித்த போது கொரோனா காலம் வந்துவிட்டது. படத்தை முப்பது நாளில் முடிக்கத் திட்டமிட்டோம்.ஆனால் விரைவில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த நெருக்கடியில் 12 நாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம் .உங்களுக்கே தெரியும் இரவு படப்பிடிப்புக்குக் கண் விழிக்கும்போது நடிப்பவர்களுக்கு முகத்தில் சோர்வு தெரியும். இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் சோனியா அகர்வால், விமலா ராமன் மற்றும் அனைவரும் நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதியம் ஆரம்பிக்கிற படப்பிடிப்பு மறுநாள் காலை ஏழு மணி வரை தொடரும். அந்தளவுக்கு அவர்கள் தூக்கத்தை மறந்து நடித்துக் கொடுத்தார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை முடித்து இருக்க முடியாது. கடைசி நாட்கள் அவர்கள் தூங்கவே இல்லை. அவர்களது ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி

இது வழக்கமான ஹாரர் படம் போல் இருக்காது. படத்தின் முதல் பாதி ஹாரராகவும் இரண்டாவது பாதி சர்வைவல் மாதிரியும் இருக்கும். ஹாலிவுட்டில் படத்தில் கதையை மட்டும்தான் சொல்வார்கள். இடையில் காமெடி போன்ற வணிக விஷயங்கள் சேர்த்திருக்க மாட்டார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது,

” 1895-ல் சினிமா கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் லூமியர் பிரதர்ஸ் பாரிசில் படத்தை திரையிட்டார்கள். அடுத்த .ஆண்டு 1896 -லேயே ‘ஹவுஸ் ஆப் த டெவில்’ என்ற பேய்ப்படம் வந்துவிட்டது.இப்படிப் பேய்க்கும் சினிமாவிற்கும் நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது.

சுந்தர் .சி சார் ஒருமுறை சொன்னார் “வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் சாமியை நம்பு. சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் பேயை நம்பு “என்றார். இப்போதெல்லாம் பேய்தான் சினிமாவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை விமலா ராமன் பேசும்போது,

” இந்த புதிய படக்குழுவினரின் படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் என்னிடம் பளிச்சென்று நேரடியாக வாய்ப்பு கேட்டது எனக்குப் பிடித்திருந்தது . பேய்ப் படமாக இருந்தாலும் இதன் படப்பிடிப்பு அனுபவம் ஜாலியாக சிரிப்பாக இருந்தது. இரவு பகல் தூக்கம் இல்லை. ஒரு நாளாவது எங்களை தூங்க விடுங்கப்பா என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.அந்த அளவுக்கு இடைவிடாது படப்பிடிப்பு நடந்தது”என்றார்.

நடிகை சோனியா அகர்வால் பேசும்போது ,

“இதில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களை நன்றாக நடத்தினார்கள். படக்குழுவினர் ஒரு குடும்பத்தைப் போல் பழகினார்கள்.
உடன் நடித்த விமலா ராமன் ஷர்மிளா நண்பர்களைப் போல பழகினார்கள். இந்த படம் நன்றாக வந்து இருக்கிறது “என்றார்.

Sonia aggarwal starrer Grandma audio launch high lights

ரஜினி உதவினார்.. மம்மூட்டிக்கு நன்றி… விஜய்சேதுபதி விதிவிலக்கு…; கே. ராஜன் ஓபன் டாக்

ரஜினி உதவினார்.. மம்மூட்டிக்கு நன்றி… விஜய்சேதுபதி விதிவிலக்கு…; கே. ராஜன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டுத் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

“நான் எது பேசினாலும் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது.

நான் வழக்கமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைவருக்கும் தெரியும் .நல்லது இருந்தால் வாழ்த்துவேன். ஏதாவது குறை இருந்தால் அதையும் சொல்லி விட்டுச் செல்வேன்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ்ப் படம் எடுப்பதில் ஆச்சரியம் இல்லை .அப்படி எடுத்து இந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள். இந்த பத்தாண்டுகளாக ஒரு ஐயாயிரம் பேர் நடுத்தெருவுக்கு வந்து இருப்பார்கள். ஆண்டுக்கு 200 படம் தயாரானால் 5 தயாரிப்பாளர்கள் தப்பிப்பதே பெரிய விஷயம்.

அதனால்தான் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று நான் கத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் மறுபடியும் படம் தான் எடுப்பான்.படமெடுத்து லாபம் வர வேண்டாம், முதலீடு வந்தால் போதும் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார்கள். அதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.இதனால் தொழில் நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் வாழ்கிறார்கள். துணை
நடிகர்கள் வாழ்கிறார்கள்.

இங்கே ஹேமந்த் மேனன் என்கிற நடிகர் வந்திருக்கிறார் .அவர் கேரளாவில் கதாநாயகனாக நடித்தவர் .இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். நம் ஊரில் இப்படி நடக்குமா?கதாநாயகன் ஆகிவிட்டால் வில்லனாக நடிக்க மாட்டார்கள் . விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு.

கதாநாயகன் ஆகிவிட்டால் இங்கே வில்லனாக நடிக்க மாட்டார்கள். அவர்களால் நாலு தயாரிப்பாளர்கள் கீழே போய் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் இறங்க மாட்டார்கள்.

தமிழ்ப் படமே எடுக்க வேண்டாம் என்று வெறுத்துப்போய் விட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் , கேரளாவில் இருந்து தமிழ்ப் படம் எடுக்க வந்த உங்களை வணங்கி வரவேற்கிறேன்.

கேரளாவில் இருப்பவர்கள் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர்கள். கேரளாவில் மம்முட்டி ,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள் . இங்கே அது நடக்குமா? கொஞ்சம்
விட்டவுடன் கேரவானில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். நான் தயாரிப்பாளரிடம் கேட்டேன் இந்த படத்தில் எத்தனை கேரவான் பயன்படுத்தினீர்கள் என்று. அவர் இல்லவே இல்லை,ஒரு மாடி வீட்டில் தான் தங்கி இருந்தோம் என்றார் .

இங்கே இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. கதைசொல்லி விவாதம் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை இயக்குநர் தயாரிப்பாளரை மதிப்பார்.
படப்பிடிப்பு தொடங்கி விட்டால் கேமரா முன்பு நின்று விட்டால் இயக்குநர் தயாரிப்பாளரை மதிக்க மாட்டார் .

பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஐந்தாவது இடத்துக்குப் போய் விடுவார்.இயக்குநரும் போட்ட பட்ஜெட்டில் எடுப்பதில்லை. பட்ஜெட்டைத் தாண்டிப்போய்விடுவார்.
இந்தப்படம் இருபத்தி மூன்று நாட்களில் முடிந்துள்ளதைக் கேள்விப்பட்டதும் இயக்குநரைக் கட்டித் தழுவினேன். மாதக்கணக்கில் விவாதம் செய்து கொள்ளுங்கள் .படப்பிடிப்பு நாட்களை குறித்த நேரத்தில் முடியுங்கள் இதுதான் இயக்குநர்களுக்கு எனது வேண்டுகோள்.

நான் மம்முட்டிக்கு நன்றி சொல்கிறேன்.கேரளாவில் ஒரு டிவியில் நான் திருட்டு விசிடிக்கு எதிராகப்போராடி சிறை சென்றதைப் பற்றி எல்லாம் சொல்லி அதை மலையாளத்திலும் எழுதிக் காட்டுகிறார்கள். நான் தயாரித்த படங்களை எல்லாம் குறிப்பிடுகிறார்கள். அங்கே மம்முட்டி இது பற்றிச் சொல்கிறார். இங்கே ஒருவனும் சொல்ல மாட்டான்.

இங்கே மேடையில் நிறைய கதாநாயகிகள் இருக்கிறார்கள். சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். எங்கள் தமிழ்ப் படத்தில் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகிகள் ஆடியோ விழாவுக்கு வர மாட்டார்கள். இன்றைக்கு நம்பர் ஒன்னாக இருக்கும் ஒரு கதாநாயகியிடம், ஏன் நீங்கள் உங்கள் படம் சம்பந்தப்பட்ட விழாவுக்குச் செல்வதில்லை என்று கேட்கிறபோது நான்
போய் இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்தப் படம் ஓடாமல் தோல்வி அடைந்துவிட்டால் எனக்கு கெட்ட பெயர் வந்து விடுமே என்று சொல்கிறார். ஐந்து கோடி சம்பளம் வாங்கும் போது இது ஓடாத படம் என்று தெரியாதா?. ஆனால் அவர் தயாரித்த சொந்தப் படத்திற்கு மட்டும் புரமோஷனுக்கு செல்கிறார். இது கேவலமாக இல்லையா?

இங்க இருக்கிற தமிழன் சரியில்லை .நான் முதலில் கேரளாவில் உள்ள தொழில் பக்தியைப் பாராட்டுகிறேன்.கேரளாவில் உள்ள தொழில் பக்தி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் அந்த சின்சியாரிட்டி , தயாரிப்பாளா வாழ வேண்டும் என்ற எண்ணம், அந்த மனப்பக்குவம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்.

இங்கே எத்தனை ஆயிரம் தயாரிப்பாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.இந்தக் கொரோனா காலத்தில் அவர்களைக் கண்டுகொண்டார்களா ? தொழிலாளர்கள் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்தார்கள். நடிகர் சங்கத்துக்கு துணை நடிகர்களுக்குக் கொஞ்சம் கொடுத்தார்கள்.

ஆனால் தயாரிப்பாளர்களை யார் கவனித்தார்கள்? தயாரிப்பாளர்கள் இல்லாமல் யாரும் கதாநாயகனாக ஆவது இல்லை .அஜீத் கூட எத்தனையோ கம்பெனிகளில் ஏறி இறங்கித்தான் இருப்பார். அதில் தவறில்லை ஆனால் மறக்கக் கூடாது.

கொரோனா காலத்தில் எல்லாருக்கும் கொடுத்தார்கள் . தயாரிப்பாளர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. நான் அப்போது ரஜினி சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்தார்.

இந்த மாதிரி பேய்ப் படங்களுக்கு மொழியே கிடையாது .அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.இந்த மாதிரிப் படங்களுக்கு பிரச்சினை கிடையாது. ஜெய்பீம் மாதிரி இதை எதிர்த்து யாரும் போராட மாட்டான்.

மனிதனைவிடப் பேய் மேல்.மக்கள் மனிதரைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போய் அதைவிட பேயே மேல் என்று கடவுளிடம் சொல்கிறார்கள்.

ஒரே விஷயத்தை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

நூறு கோடி இருநூறுகோடி முன்னூறு கோடிகளில் எடுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? ஆனால் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு? சிறிய படங்களுக்கும் அதே 750 ரூபாய் தான் .இவ்வளவு கோடி பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளம் தான். பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடிகர்கள் சம்பளம் கேட்டு வாங்குவது போல் தொழிலாளர்களுக்கும் உயர்த்திக்கொடுக்க வேண்டும்.

அந்தப் பெரிய படங்கள் எடுத்தவுடன் வியாபாரமாகி விடும் . சிறிய படங்கள் வியாபாரமாகாது. இதற்கு கொடுக்கும் சம்பளம்தான் அதற்குமா?

“இவ்வாறு கே.ராஜன் பேசினார்.

விழாவில் படத்தின் நடித்துள்ள ஸ்ரீஜித், குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ், தயாரிப்பாளர் விநாயகா சுனில், ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி, எடிட்டர் அஸ்வந்த் ரவீந்திரன், இசையமைப்பாளர் சங்கர் ஷர்மா, ஒப்பனைக் கலைஞர் அமல் தேவ், கதை எழுதிய ஷிபின் ,வசனம் எழுதியுள்ள அப்துல் நிஜாம், இயக்குநர்கள் ‘மகான் கணக்கு ‘ சம்பத் ஆறுமுகம் , விஜயபாலன்,ராஜ பத்மநாபன், திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தலைவர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Producer K Rajan speech at Grandma audio launch

More Articles
Follows