தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.
இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.
2வது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்தநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
Online Game fraud Ameer Mahat launched First look of Email