நடிகன் நடிப்பதால் நாடு சீரழியாது.. ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் நாடு சீரழியும்.. – பேரரசு

perarasuஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், இப்பட சர்ச்சை குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

முத்தையா முரளிதரன்
தமிழின துரோகி!
விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!

அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல
கண்டனக்குரல்கள்,
எதிர்ப்புக்குரல்கள்
இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!

இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள்
‘விடுதலை புலிகள்’ தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று?

தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

விடுதலை புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள்,
தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு
தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!!!
இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!

ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது!
ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும்!

இந்தப் பதிவு
முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல!
சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது!
* பேரரசு*

Director Perarasu opens up on Muralitharan biopic

Overall Rating : Not available

Latest Post