சிம்பு படத்தால் சுருண்டவர் நயன்தாராவால் எழுந்து விடுவாரா?

director nelson venkatesanஅனிருத் இசையமைப்பில் நயன்தாரா நடித்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் கோலமாவு கோகிலா.

லைக்கா தயாரித்துள்ள இப்படத்தை நெல்சன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன் திரைப்பயணம் குறித்து கூறியுள்ளதாவது…

நானும் சிம்புவும் ஸ்கூல் மேட். அவருடன் வல்லவன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

பின்னர் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என் முதல் படம் அப்படி ஆனது வருத்தமாக உள்ளது.

தற்போது நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியுள்ளேன்.

கோலமாவுக்கும் கதைக்கும் சம்பந்தம் உள்ளது. படத்தின் நாயகி பெயர் கோகிலா. கதையை கேட்டவுடனே ஓகே சொன்னார் நயன்தாரா.

படம் ஜாலியாக இருந்தாலும் பெண்கள் படும் கஷ்டங்களை சொல்லியிருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது.

‘கோலமாவு கோகிலா’ என்னைக் கைதூக்கிவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post