தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்த திரைப்படம் ‘அழகிய கண்ணே’.
இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது திண்டுக்கல் ஐ. லியோனி பேசியதாவது…
கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான் , என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான்.
பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
Dindigul Leony emotional speech about his son Sivakumar
நடிகர்கள்
லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி.
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் – Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழன்