தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’.
இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது…
என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே எஸ் ரவிக்குமார் சார் ரசிகை நான், நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி.
நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது.
லியோனி சார் பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம், ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
Azhagiya Kanne will be milestone in my journey says Sanchitha