உலக நாயகன் ரூட்டில் பயணிக்கிறாரா இளைய தளபதி.?

உலக நாயகன் ரூட்டில் பயணிக்கிறாரா இளைய தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Vijayஎந்தவிதமான கேரக்டர் என்றாலும் எந்த ஈகோவும் இல்லாமல் இறங்கி அடிப்பார் உலக நாயகன் கமல்ஹாசன்.

ஓரிரு படங்கள் சீரியஸ் என்றால், மற்றொரு படத்தை காமெடி ஸ்பெஷலாக கொடுப்பார்.

சில வருடங்களாவே கமல் இந்த ரூட்டில் பயணித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அதுபோல் இளையதளபதி விஜய்யும் இந்த ரூட்டில் பயணித்து வருவதாக தெரிகிறது.

துப்பாக்கி, தலைவா சீரியஸ் படங்களை தொடர்ந்து, ஜில்லா என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்தார்.

அதன்பின்னர், கத்தி என்ற சீரியஸ் படத்தை கொடுத்து புலி படத்தை கொடுத்தார்.

தெறியை தொடர்ந்து பைரவா என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்தார்.

தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் சமூகம் சார்ந்த சீரியஸ் பிரச்சினையை கதைக்களமாக கொண்டுள்ளது என தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ரூட் இனியும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

Did Vijay follows Kamalhassan route

ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

ஆட்டத்தை ஆரம்பிக்க போகும் தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushதனுஷ் முதன்முறையாக இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலர் வெளியானது.

தற்போது இப்படத்திற்கு ப. பாண்டி என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலரில் இறுதியாக இனிமே தாண்டி ஆட்டமே ஆரம்பம் என தனுஷ் கூறுவது போல் காட்சி உள்ளது.

இதனை ரசித்த இவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி ட்ரைலருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சிம்பு.

இதற்கு தனுஷ் நன்றி தெரிவித்தார்.

Simbu wishes Dhanush for Power Paandi Trailer

‘பாக்க முடியல விஷால்… பேஷியல் பண்ணிக்கோ..’ தாணு

‘பாக்க முடியல விஷால்… பேஷியல் பண்ணிக்கோ..’ தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Thanu trashes Vishal and his teamதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.

அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.

இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது…

”தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள். நாங்கள்ஒரே குடும்பம்.
இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம்.

இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.

தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்க மாகவே இருக்க வேண்டும். இதில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்.” என்றார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது…

“இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை.

செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்.” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது…

“கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம்.

பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம் . சிறு முதலீட்டுப் படங்கள்125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும் 500 என்றும் குறைத்திருக்கிறோம்.

திருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை.

எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.

விஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம்.

கேட்கவில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம் கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்?

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி? தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.

முன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது…

“இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன் வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.

நடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பிஏவை வைத்து நடிகர் சங்கத்தை விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் தவறு செய்கிறார். 100 பேரை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்.” என்றார்.

கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது

“இளையதலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.

தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.

அகங்காரம் கொண்ட முகம் இப்படி கொடூரமாக மாறிவிட்டது. பேஷியல் பண்ணிகோ விஷால். பாக்க முடியல.

தயாரிப்பாளர்கள் உன்ன வச்சு படம் எடுக்க வேண்டாமா? நிச்சயமா நான் எடுக்க மாட்டேன்.

தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார்.

2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.

ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா?

பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?

இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ” இவ்வாறு தாணு பேசினார்.

நிறைவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Producer Thanu trashes Vishal and his team

thanu team

பத்து மடங்கு பவருடன் வரும் ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’

பத்து மடங்கு பவருடன் வரும் ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor RK and Director Shaji Kailash combo back for Vaigai Expressநடிகர் ஆர்கே – இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள வைகை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸ் ஆகிறது.

இதற்கு முன்பு இவர்கள் இணைந்த படம் எல்லாம் அவன் செயல் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ஆர்கே.

‘இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும்.

அந்த வேகம் இறுதிக்காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். எல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறுப்பைப் படத்தில் அனுபவிக்கலாம்’ என்றார்.

ஏன் அடிக்கடி பார்க்க முடியவில்லை? என்று கேட்டதற்கு ‘எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காக நடிக்கவோ படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது.

எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.

சம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கேவே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ஹிட் பாக்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.

சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது.

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா

யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்த நீத்து சந்திரா ஆதிபகவன் படத்துக்கு பிறகு தமிழில் ஆளையே காணவில்லை.

இருந்தாலும் உள்ளேன் ஐயா சொல்வதற்காக சேட்டை, சிங்கம் 3 படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் களம் இறங்குகிறார்.

வெறுமனே பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

‘முதன்முறையாக டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கிறேன். இதுவரை நீங்கள் பார்க்காத வித்தியாசமான இரண்டு வேடங்கள் அவை. ஆதிபகவன் படத்திலேயே சில காட்சிகளில் ஆக்‌ஷன் பண்னியிருந்தேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு’ என்றார்.

வைகை எக்ஸ்பிரஸ் தனக்கு தமிழில் செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும் என்று நம்புகிறார் நீத்து சந்திரா.

Actor RK and Director Shaji Kailash combo back for Vaigai Express

neetu chandra and rk in vaigai express

‘விஜய் ஒண்ணு செஞ்சா; விஷால் ஒண்ணு செய்வாரு..’ – தாணு

‘விஜய் ஒண்ணு செஞ்சா; விஷால் ஒண்ணு செய்வாரு..’ – தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli-S-Thanuஏப்ரல் 2ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் முன்னேற்ற அணி சார்பாக தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…

நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்தபின்பு விஷால் எதையும் செய்யவில்லை.

கல்யாணமும் பண்ணல. கட்டிடமும் கட்டல.

இவரு ஆர்யா எல்லாம் சேர்ந்து ஒரு படம் நடிச்சி, கட்டிடம் கட்ட போறேன்னு சொன்னாங்க. என்ன ஆச்சு?

எல்லாம் அரைகுறையாக பேசுறாரு. இவரை வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்களை இவரு காப்பாத்தல.

ஆனா மத்த தயாரிப்பாளர்கள காப்பாத்த போறேன்னு சொல்றாரு.

இவர் சூட்டிங்கில் இருக்கும்போது ஒரு தயாரிப்பாளருக்கு பிரச்சினை என்றால் ஓடிவருவாரா? அப்படி வந்தால், இவர் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்பட மாட்டாரா?

குதிரையிலும் ஒட்டகத்திலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்.

அவர் (விஜய்) புலி வச்சா இவர் பாயும் புலி டைட்டில் வைக்கிறார்.

அவர் இளையதளபதி என்றால், இவர் புரட்சி தளபதி என்கிறார். இவர் என்ன புரட்சி செய்துவிட்டார்.

‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார்.

பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?

ஒரு முறை 50 லட்ச ரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.

சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள்.

விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை.

தம்பி விஷால் நீங்க நடிச்ச மதகஜராஜா (MGR) படம் ரூ. 30 கோடி பிரச்சினையில் உள்ளது.

அந்த பிரச்சினையை தீர்த்து வச்சீட்டீங்களா?

இன்னும் உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன.

வரும் மார்ச் 26ஆம் தேதி அவற்றை ஆதாரங்களுடன் வெளியிடுவேன்” என்று ஆவேசமாக பேசினார் தாணு.

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் குறித்து ரஜினி வாய்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் குறித்து ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini voice Rajini speechஇந்தியாவில் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும்.

அதிலும் முக்கியமாக தமிழக தேர்தல் வந்தால், தன்னுடைய அரசியல் ஆதரவு நிலை குறித்து தன் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் ரஜினிகாந்த்.

இடையில் சில காலமாக அரசியல் பற்றி எதுவும் ரஜினி பேசவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள் ரஜினியை சந்தித்தார்.

எனவே, ரஜினி அவருக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில், வரும் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு அளிக்க போவதில்லை என ரஜினி தெரிவித்துள்ளார்.

இது ஆர்.கே. நகர் தேர்தலுக்கு மட்டும்தானா? அல்லது இனி வரும் எல்லா தேர்தலுக்கும் பொருந்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Rajinikanth‏Verified account @superstarrajini 5m 5minutes ago
My support is for no one in the coming elections.

Rajini voice about TN Politics Current election

More Articles
Follows