அக்னி நட்சத்திரம் ரீமேக்: கார்த்திக் வேடத்தில் தனுஷ். பிரபு யார்.?

அக்னி நட்சத்திரம் ரீமேக்: கார்த்திக் வேடத்தில் தனுஷ். பிரபு யார்.?

dhanushதனுஷ் நடித்துள்ள தொடரி வருகிற ஆகஸ்ட் 12ஆம் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகிவிடும்.

தற்போது வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், விரைவில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

ரஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்களை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றவாது இந்தி படம் இது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா ஆகியோர் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்தான் இப்படம்.

இதில் கார்த்திக் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். மற்ற வேடங்களில் நடிக்கவுள்ள கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

விக்ரம்-ஜீவா நடிப்பில் வெளியான டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

‘கபாலி’ ரஞ்சித்துக்காக அதிரடி பயிற்சியில் சூர்யா

‘கபாலி’ ரஞ்சித்துக்காக அதிரடி பயிற்சியில் சூர்யா

surya stillsமெட்ராஸ் படத்தை இயக்கிய பின்னர் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க இருந்தார் ரஞ்சித்.

இதனிடையில் கபாலி வாய்ப்பு வரவே, ரஜினியை இயக்கினார் ரஞ்சித்.

தற்போது கபாலி கடமைகள் முடிந்துவிட, சூர்யா படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

இப்படம் வட சென்னை பகுதியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.

மேலும் இதில் பாக்சிங் காட்சிகள் அதிகமுள்ளதால் சூர்யா அதற்காக தன் உடலமைப்பில் மாற்றம் செய்து மோதவிருக்கிறாரம்.

சிங்கம் படத்தை முடித்துவிட்டு இதற்கான பயிற்சியில் ஈடுபட துவங்கவிருக்கிறார் சூர்யா.

ரஜினி ரசிகர்களுக்காக ‘கபாலி’ க்ளைமாக்ஸ் மாற்றம்

ரஜினி ரசிகர்களுக்காக ‘கபாலி’ க்ளைமாக்ஸ் மாற்றம்

Kabali climax changed dut to rajini fans requestரஜினியை நேசிக்கும் அவரது ரசிகர்கள் அவர் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் கபாலி படத்தில் நெகட்டிவ்வான க்ளைமாக்ஸ் இருக்கும்போது விட்டு விடுவார்களா என்ன?

கபாலி ரிலீஸ் முதல் நாள் இடம் பெற்றிருந்த க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

எனவே தற்போது மலேசிய காவல்துறையினரிடம் கபாலி சரணடைந்தார் என மாற்றம் செய்து திரையிட்டு வருகின்றனர்.

ஆனால் இக்காட்சி மலேசியாவில் மட்டும்தான் மாற்றமடைந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஒருவேளை தமிழகத்திலும் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படத்தின் வெளியீட்டின் போதே செளந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லியிருந்தார்கள்.

ஆனால் ரஞ்சித் பிடிவாதமாக இருந்து மாற்றாமல் இருந்தார்.

தற்போது ரசிகர்களுக்காக க்ளைமாக்ஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மனைவி மரணம்

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மனைவி மரணம்

amaravathi director selvaஅமராவதி படத்தில் அறிமுகமாகி இன்று 56 படங்களில் நடித்துள்ளார் அஜித்.

விரைவில் 57வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவரை அமராவதி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா.

இப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. இது இயக்குனரின் இரண்டாவது படமாகும்.

மேலும் கர்ணா, பூவேலி, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் செல்வா.

இந்நிலையில் இன்று அதிகாலை செல்வாவின் மனைவி மரணமடைந்துள்ளார்.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, முகப்பேரில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

 

‘என்னால தூங்க முடியல; ரஞ்சித்துக்கு நன்றி..’- ‘கபாலி’ தன்ஷிகா

‘என்னால தூங்க முடியல; ரஞ்சித்துக்கு நன்றி..’- ‘கபாலி’ தன்ஷிகா

dhanshika in kabaliரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் இளையவர்கள் நடித்து பெயர் வாங்குவது சிரமம்.

ஆனால் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், மன்னன் படத்தில் விஜயசாந்தி ஆகியோர் இதற்கு விதிவிலக்கு எனலாம்.

அதுபோல் நேற்று முன்தினம் வெளியான ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பெரும் பெயரை பெற்றுள்ளார் தன்ஷிகா.

யோகி என்ற கேரக்டரில் ஆண் பிள்ளை போல உடையணிந்து ரஜினி மகளாக தோன்றினார்.

இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை நேரில், ட்விட்டரிலும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் தன்ஷிகா கூறியதாவது…

“உங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்த பின் சத்தியமாக என்னால தூங்க முடியல.

இதற்கு எல்லாம் காரணமான ரஞ்சித்துக்கு என் ஆழ் மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

vikram danceமுன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தனர்.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று முதல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

எனவே பழைய மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் கொண்டாட்டமாக விக்ரம், இன்றைய மாணவர்களுடன் நடனம் ஆட விரும்பினார்.

அதன்படி தனுஷ் நடித்த மாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம்.

நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

More Articles
Follows