தனுஷின் “இசை கடல்” யார் தெரியுமா…?

தனுஷின் “இசை கடல்” யார் தெரியுமா…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushதனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் பவர்பாண்டி.
தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார்.
இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் தனுஷ் பேசியதாவது…

“உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு,நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன.
இதில் பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப. பாண்டி திரைப்படம்.
இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்.
அப்படி எடுத்துக் கொள்ளாத படம் தான் தோல்வியை சந்திக்கின்றன.

அந்தவகையில் ப .பாண்டி தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது.
இவ்வாறகவே இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார்”.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் பேசும்போது…

“இப்படத்தின் ஆன்மா ஷான் ரோல்டனின் இசைதான்.
அவரை நான் இசை கடலே என்றுதான் கூப்பிடுவேன்.
எனது எண்ணமும் அவரது எண்ண ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்”. என்று பேசினார்.

ரஜினி பட சூட்டிங்கில் தாக்குதல்… மன்னிப்பு கேட்டார் ஷங்கர்

ரஜினி பட சூட்டிங்கில் தாக்குதல்… மன்னிப்பு கேட்டார் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20170322-WA0009ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை லைகா தயாரிப்பில் இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதன் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் சூட்டிங்கை படம் பிடித்தார் ஒரு நிருபர்.

அப்போது அவரை படக்குழுவைச் சேர்ந்தவர் தாக்கினார் என்பதையும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதையும் பார்த்தோம்.

எனவே, இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஷங்கர் மன்னிப்பு கேட்டார்.

அவர் பேசும்போது…

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது.

நான் மிகவும் கவனமாக இருப்பேன். இருந்திருந்தும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்திற்கு உரியது.

இனி வரும் காலத்தில், இது போன்று எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். என்று

பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நேரில் வந்து பேட்டியளித்து மன்னிப்பு கேட்டார்.

ஷங்கர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், புகைப்படக் கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரும் திரும்பப் பெறப்பட்டது.

ரஜினி பட சூட்டிங்கில் தட்டிக்கேட்ட ரிப்போர்ட்டர் மீது தாக்குதல்

ரஜினி பட சூட்டிங்கில் தட்டிக்கேட்ட ரிப்போர்ட்டர் மீது தாக்குதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 shootingசென்னை திருவல்லிக்கேணியில் லைக்கா தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2 (2.0) சூட்டிங் நடந்தது.

படப்பிடிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் அங்கிருந்த இந்து புகைப்பட கலைஞர்கள் செய்தி சேகரித்தனர்.

அப்போது புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் எஸ்ஆர்.ரகுநாதன் மற்றும் பரத் ஆகியோர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

இவர் ஷங்கரின் உதவியாளர் என்றும் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தனுஷை பார்த்து பொறாமை…” பிரசன்னா ஓபன் டாக்

“தனுஷை பார்த்து பொறாமை…” பிரசன்னா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush-and-Prasannaதனுஷ் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் பவர் பாண்டி.

இப்படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பிரசன்னா பேசியதாவது…

“நிறைய கலைஞர்கள் சொல்ல மாட்டார்கள். நான் ஓபனாக சொல்கிறேன்.

தனுஷை பார்த்து, அவரின் ஒவ்வொரு திறமையையும் பார்த்து நான் பொறாமைப்பட்டுள்ளேன்.

இப்படத்தில் நடித்த போது என் அப்பாவை நினைத்து கொள்வேன்.

இந்தப் படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி” என்று பேசினார்.

விஜய் 61 படத்தின் அடுத்த கட்டம் இதுதான்…

விஜய் 61 படத்தின் அடுத்த கட்டம் இதுதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61 stillsஅட்லி இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மார்ச் 27ம் தேதி இது தொடரும் என தெரிகிறது.

இதனையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்களாம்.

அது பிரான்ஸ் அல்லது அமெரிக்கா என கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு

விஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vip 2 movie stillsமுதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

அண்மையில் சூட்டிங் நிறைவுபெற்று, தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் மே மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, இதன் முதல் பாகம் ஜீலையில் வெளியாகி மாபெரும் பெற்றி பெற்றது.

எனவே அந்த சென்டிமெண்டில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன் ரோல்டன் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

More Articles
Follows