Breaking தனுஷையும் ஜெயிலுக்குள் கொண்டு வந்த ஜிவி. பிரகாஷ்

Breaking தனுஷையும் ஜெயிலுக்குள் கொண்டு வந்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush sings in GV Prakashs Jail movieவசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளாராக ஜி.வி. பிரகாஷ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது வசந்தபாலன் இயக்கும் ஜெயில் படத்தில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார்.

இதில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி நாயகியாகவும், பள்ளிப்பருவத்திலே நாயகன் நந்தன் ராம், பசங்க பாண்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் உள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாகவும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

நல்ல நண்பர்கள் 8 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Dhanush sings in GV Prakashs Jail movie

அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் வினோத்

அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and HVinothவிஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு அஜித் யார் படத்தில் நடிப்பார்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

இத்தனை நாள் காத்திருப்புக்கு அதிரடி தகவலாக அஜித்தின் 59 மற்றும் 60 ஆகிய இரண்டு படங்களையும் வினோத் இயக்கவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித் 59 படம் அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் அஜித்தின் நண்பராக டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

இந்த தல 59 படத்தை 2019ல் ஆண்டில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனையடுத்து தல 60 படத்தை 2019 ஜீலையில் தொடங்கி 2020 ஆம் ஆண்டில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

பிக்பாஸ் ஜோடி சினிமாவில் இணைந்தது; ஆரவ் உடன் ஓவியா ஆட்டம்

பிக்பாஸ் ஜோடி சினிமாவில் இணைந்தது; ஆரவ் உடன் ஓவியா ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raja bheemaபிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால், மக்கள் கவனத்தை ஈர்த்து இடைவிடாது தலைப்பு செய்திகளிலேயே இருந்தனர் ஆரவ்வும், ஓவியாவும். அவர்களது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டமான செய்தி வந்திருக்கிறது. ஆரவ்வின் ‘ராஜபீமா’ படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் ஆரவுடன் இணைந்து நடிக்கிறார் ஓவியா. இந்த சிறப்பு கதாபாத்திரத்தில் ஓவியா நடிப்பதால் ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் நமக்கு இன்னொரு சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தையும் அளிக்கிறார்கள். ஓவியா படத்தில் நடிப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனம் ஆடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியின் அழகிய பகுதிகளில் இந்த பாடல் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும் அவர் திரையில் தோன்றும் நேரம் (ஸ்கிரீன் டைம்) படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

‘ராஜாபீமா’ மனிதன் – மிருக முரண்பாடுகளை சுற்றி உருவாகும் ஒரு திரைப்படம். நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தை எஸ்.மோகன் தயாரிக்கிறார். பாலக்காடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. மிக வேகமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரை நகர்ப்புற (Semi urban) பின்னணியில் படமாக்கப்படும் முதல் மனிதன், விலங்கு சார்ந்த திரைப்படம் என்பது ராஜாபீமாவின் இன்னுமொரு முக்கியமான சிறப்பம்சம்.

சிவகார்த்திகேயன் எதற்கும் தயங்கவில்லை.. – *கனா* ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

சிவகார்த்திகேயன் எதற்கும் தயங்கவில்லை.. – *கனா* ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dinesh krishnanஒரு நடிகர் மற்றும் இயக்குனர் பல்வேறு வகையான படங்களை எடுத்து ரசிகர்களை மிரள வைத்தாலும், அதில் மிகப்பெரிய பாராட்டு ஒளிப்பதிவாளர்களையே சாரும். குறிப்பாக, தினேஷ் கிருஷ்ணன் போன்ற ஒரு மாயாஜால வித்தைக்காரர், பல்வேறு வகை திரைப்படங்களில் வெவ்வேறு வகையிலான வண்ணங்களை சிறப்பாக கையாண்டு, தன் தனித்துவமான திறன்களை நிரூபித்தவர், கனா எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக, கனாவின் காட்சி விளம்பரங்களில் கேமரா கோணங்கள் மற்றும் டோன்களின் மாறுபாடுகளை பார்க்கலாம். இந்த படத்தின் கதையே இரண்டு வெவ்வேறு பின்னணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிராமப்புற பின்னணி, மற்றொரு கிரிக்கெட் மைதானம் இவை இரண்டுமே ஒளிப்பதிவாளருக்கு வேலைப்பளுவை அதிகமாக்கியிருக்கிறது. கிரிக்கெட் ஸ்டேடிய காட்சிகள் தொழில்முறை கேமரா குழுவினர் உதவியுடன் மல்ட்டி கேமரா செட் அப் மூலம் படமாக்கப்பட்டது. கிரிக்கெட் பந்தின் சின்ன அசைவுகளை கூட மிக துல்லியமாக படம் பிடித்திருக்கிறது. ஆனாலும், தினேஷ் கிருஷ்ணனுக்கு இது ஒரு இரட்டை சுமையாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் கூறும்போது, “இந்த பெருமை எல்லாம் அருண்ராஜா காமராஜ், அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் ஸ்டோரிபோர்டு கலைஞர்களையே சாரும். படப்பிடிப்பின் சவால்களையும் அழுத்தங்களையும் நான் உணரும் முன்பே, அவர்கள் என்னென்ன படம்பிடிக்க வேண்டும், எது தேவை என்பதை தெளிவாக்கி உதவினார்கள். இது கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கானா ஒரு எமோஷனல் திரைப்படம் மட்டுமல்ல, ஏராளமான துணிச்சலான தருணங்களும் உள்ளன. வழக்கமாக, உணர்வுப்பூர்வமான காட்சிகள் க்ளோஸ் அப் ஷாட்களை கோரும். மிக வேகமாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளிடையே உணர்வுகளை படம் பிடிக்க, சமநிலையை பேண கஷ்டமாக இருந்தது. மேலும், சத்யராஜ் சார், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பிரம்மாண்டமான, சிறந்த நடிகர்கள் நடிக்கும்போது, எனது பொறுப்பு அதிகமானது. இருப்பினும், ஒரு திறமையான குழுவின் முயற்சியாலும், ஒரு தெளிவான நுண்ணறிவாலும் எங்கள் வேலை எளிதானது.

எனது கருத்துக்களுக்கு முழுமையாக மதிப்பளித்து, வேண்டியதை செய்து கொடுத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அவர் எதற்க தயங்கவே இல்லை. அவரது ஒரே நோக்கம் நல்ல தரமான படத்தினை வழங்குவது தான். அதனால் செலவழிக்க ஆர்வமாக இருந்தார். நான் எப்போதும் அவரது தோற்றத்தை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது புதிய தோற்றத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா, வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி ஒரு பாதுகாப்பு பந்தயம்..; *அடங்கமறு* தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்

ஜெயம் ரவி ஒரு பாதுகாப்பு பந்தயம்..; *அடங்கமறு* தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviசின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி சுஜாதா விஜயகுமார் தற்போது அடங்க மறு படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து வைக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்க மறு’ படத்தின் காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி வைத்திருக்கிறது. நல்ல திறமையான படக்குழுவுடன் பணிபுரிந்த தன் அனுபவத்தை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்.

“பல தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பகுதியாக இருந்ததால், மிகவும் ஒரு விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தை கொடுக்க நான் விரும்பினேன். தற்போது அடங்க மறு படத்தின் அவுட்புட் பார்க்கும்போது என் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

படக்குழுவினரை பாராட்டி பேசும்போது, “நிச்சாயமாக, ஜெயம் ரவி தயாரிப்பாளர்களுக்கு ஒரு “பாதுகாப்பான பந்தயம்”. அவரது திறமையான நடிப்பு மற்றும் கதைதேர்வுகளை வைத்து மட்டும் சொல்லவில்லை, அவர் தன் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் முக்கியமான காரணம். ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் எப்போதும் தயாரிப்பாளர்களை முதல் இடத்திலும், இயக்குனர்களை அடுத்த இடத்திலும் வைத்து மதிக்கிறார். அடங்க மறு அவரது கேரியரில் மிகவும் தனித்துவமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ராஷி கண்ணாவுடன் பணிபுரிந்த பிறகு, அவர் வெறும் அழகு பொம்மையாக மட்டுமல்லாமல், சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் அளவுக்கு திறமையானவர் என்பது புரிந்தது. இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஒரு கேப்டனாக மட்டுமல்ல, அதன் வடிவமைப்பாளராகவும் உள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன், வில்லன் மட்டுமல்ல ஒரு சின்ன கதாபாத்திரம் கூட படம் முடிந்து போகும்போது நம் மனதில் நிற்கும்” என்றார்.

சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சாம் சி.எஸ் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், ரூபம் எடிட்டிங்கில் மிகச்சிறப்பாக உருவாகியிருக்கிறது அடங்க மறு.

சர்கார் சர்ச்சையில் ராஜினாமா செய்த பாக்யராஜ் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராகிறார்

சர்கார் சர்ச்சையில் ராஜினாமா செய்த பாக்யராஜ் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bhagyarajவிஜய் நடித்த சர்கார் கதையை டைரக்டர் முருகதாஸ் திருடிவிட்டதாக வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளிக்க அது பெரும சர்ச்சையானது.

அப்போது எழுத்தாளர் சங்க தலைவராக இருந்த டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் கதாசிரியர் வருனுக்கு ஆதரவாக பேசினார்.

இறுதியில் முருகதாஸ் எழுத்தாளருக்கு உரிய மரியாதை மற்றும் தொகையை கொடுக்க வேண்டும் என முடிவானது.

இந்த பிரச்சினைகள் முடிந்து படமும் வெளியானது. அதன்பின்னர் பாக்யராஜ் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அருண்காந்தின் கோகோ மாக்கோ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்தல் இன்றி தேர்வாகியுள்ளதாக அறிவித்தார் பாக்யராஜ்.

பாக்யராஜ் ராஜினாமா செய்த பின்னர் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய முன் வந்துவிட்டதால் அவர்களின் ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க மீண்டும் அந்த பதவியை பாக்யராஜ் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows