அடுத்த ஆண்டில் தனுஷின் ‘மாஸ்’ ஆரம்பம்

அடுத்த ஆண்டில் தனுஷின் ‘மாஸ்’ ஆரம்பம்

dhanush maariதமிழில் யதார்த்த நடிகர் என பெயர் பெற்றவர் தனுஷ்.

எனவே இவருக்கு எல்லா வயதினரும் ரசிகர்களாக உள்ளனர்.

ஆனால் முற்றிலும் தன் ரசிகர்களுக்காக தனுஷ் நடித்த படம் மாரி.

பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபா சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் உண்டாக்கியதால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

அடுத்த ஆண்டு 2017ஆம் ஜனவரி மாதத்தில் இதன் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் மோகன்லால்

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் மோகன்லால்

mohanlal and vijayமலையாள சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக மோகன்லால் திகழ்ந்து வருகிறார்.

எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனக்கே என வைத்திருக்கிறார்.

இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகிறார்.

விஜய்யின் ஜில்லா படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்திருந்தார்.

தற்போது ரஜினியின் கபாலி பட உரிமையை பெற்றுள்ள இவர் எவரும் எதிர்பாராத வகையில் 306 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்.

இதனையடுத்து, பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 60 படத்தையும் கேரளாவில் வெளியிடவிருக்கிறாராம் மோகன்லால்.

ஜில்லா படத்தில் விஜய்யுடன் மோகன்லால் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி பார்த்த ரஜினிகாந்த் ரஞ்சித்திடம் என்ன சொன்னார்..?

கபாலி பார்த்த ரஜினிகாந்த் ரஞ்சித்திடம் என்ன சொன்னார்..?

rajini and ranjithஉலக தமிழர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை நாளை வெளியாகவுள்ள கபாலி பெற்றுள்ளது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் நேற்று தன் மகளுடன் பார்த்தார்.

அவர் திரையரங்கில் நுழைந்தவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றுள்ளனர்.

படத்தை ரசித்து பார்த்த ரஜினிகாந்த், படம் முடிந்தவுடன் ரஞ்சித்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.

அதில் ‘நிறைய முத்தங்களுடன் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

‘பன்ச் டயலாக்ஸ் வேண்டாம்…’ விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘பன்ச் டயலாக்ஸ் வேண்டாம்…’ விஜய் எடுத்த அதிரடி முடிவு

Vijay 60பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இவருடன் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார்.

இதில் தேவையில்லாத பன்ச் டயலாக்குகளை இடம் பெற செய்ய வேண்டாம் என்றும் கதையின் கேரக்டருக்கு என்ன தேவையோ? அதை வைத்தால் போதும் என கூறிவிட்டாராம் விஜய்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிடப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.

இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செப்டம்பரிலும், பாடல்களை நவம்பரிலும் வெளியிடவுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2017) பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது.

அஜித்துக்காக அனிருத் கொடுத்த ஹாட் ட்யூன்ஸ்

அஜித்துக்காக அனிருத் கொடுத்த ஹாட் ட்யூன்ஸ்

ajith and anirudhவேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்-அனிருத்-சிவா ஆகியோர் மீண்டும் ஏகே 57 படத்திற்காக இணைகின்றனர்.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்காக அனிருத் மெட்டமைத்த ஹாட்டான ட்டியூன்களை சிவாவிடம் கொடுத்து விட்டாராம்.

எனவே இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் அப்பாடல்களை படமாக்க முடிவு செய்திருக்கிறார் சிவா.

கபாலிக்கு லீவு கேட்க சிவகார்த்திகேயனை மாட்டிவிட்ட சதீஷ்

கபாலிக்கு லீவு கேட்க சிவகார்த்திகேயனை மாட்டிவிட்ட சதீஷ்

sivakarthikeyan and sathish stillsபாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் நாளை கபாலி ரிலீஸை முன்னிட்டு ரெமோ படப்பிடிப்புக்கு லீவு கேட்க சதீஷ், ட்விட்டரில் பாக்யராஜ் கண்ணனிடம் விண்ணப்பித்துள்ளார்.

அதில்.. சிவகார்த்திகேயனின் நர்ஸ் கெட்டப் படத்தை போட்டு, பாக்யராஜ் சார். இவ என்னோட சிஸ்டர். இவள நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. லீவு வேனும் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து பாக்யராஜ் கூறியுள்ளதாவது… ஐய்யோ சார். நீங்க மறந்து எனக்கே லெட்டர் அனுப்பிட்டீங்க. உங்க சிஸ்டர பெண் பார்க்க வர்ற மாப்பிள்யே நான்தான்… என்று குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows