‘ஹாலிவுட் அப்புறம்; இப்போ ஹாலிவுட் நடிகர்..’ தனுஷ் முடிவு..!

‘ஹாலிவுட் அப்புறம்; இப்போ ஹாலிவுட் நடிகர்..’ தனுஷ் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Karthik Subbaraj Film to have a Hollywood Actorபிரபு சாலமன் இயக்கிய தொடரி, துரை செந்தில்குமார் இயக்கிய கொடி, மற்றும் கௌதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

தொடரி ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் தனுஷுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சபாஷ் நாயுடு பேஸா முடிஞ்சிடுது…. கமலின் அடுத்த ஜோடி யார்..?

சபாஷ் நாயுடு பேஸா முடிஞ்சிடுது…. கமலின் அடுத்த ஜோடி யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan Completes Sabaash Naiduசரியான திட்டமிடல் இருந்தால் எதையும் எளிதாக முடித்திடலாம் என்பதற்கு உதாரணமாக சினிமாவில் கமல்ஹாசனை குறிப்பிடலாம்.

படம் தொடங்குவதற்கு முன்பே அனைத்தையும் திட்டங்களையும் கையில் வைத்துக் கொண்டு சபாஷ் நாயுடு சூட்டிங்குக்காக சென்றார்.

இப்போது சூட்டிங் முடிஞ்சிட்டு என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இப்படத்தை டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து உடனே தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம் கமல்.

இது விமானக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படம் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை தூங்காவனம் பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவிருக்கிறார்.

ஆனால் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால்…? கமலுக்கு ஜோடி கிடையாதாம்.

ரெமோ அப்டேட்ஸ்: அவ்வை சண்முகி – தில்லு முல்லு பட கனெக்ஷன்..!

ரெமோ அப்டேட்ஸ்: அவ்வை சண்முகி – தில்லு முல்லு பட கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan's Remo Movie Story Revealedபிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸாக நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

இவர் எப்படி பெண்ணாக மாறுகிறார்? எதற்காக மாறுகிறார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். நண்பர்களாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

நரேன் மற்றும் கல்யாணி நடராஜன் கீர்த்தியின் பெற்றோர்களாக நடித்துள்ளனர்.

இப்பட கதைக்கும் நாடகத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளதாம். மௌலி, கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நாடக கலைஞர்களாக வருகிறார்கள்.

இவர்களின் ஆலோசனைப்படிதான் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு, கீர்த்தியின் காதலை பெற போராடுகிறாராம்.

அவ்வை சண்முகி மற்றும் தில்லு முல்லு படங்களில் சினிமா கலைஞராக நாகேஷ் வருவார். அவர்தான் அதில் கமல் மற்றும் ரஜினிக்கு ஐடியா கொடுத்த மாறு வேடத்தில் போக சொல்வார்.

எனவே இதிலும் அப்படங்களைப் போன்று காமெடியில் குறை வைக்காமல் கதையை உருவாக்கி இருக்கிறார்களாம்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒரு ‘பிச்சைக்காரன்’ கோடீஸ்வரன் ஆன கதை..!

ஒரு ‘பிச்சைக்காரன்’ கோடீஸ்வரன் ஆன கதை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bichagadu Official Collection Report!இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களுமே முதலுக்கு மோசமல் செய்யாமல் வசூலை ஈட்டி வருகின்றன.

இதில் வசூலின் உச்சமாக ‘பிச்சைக்காரன்’ கலெக்சனை வாரி வாரி குவித்து வருகிறான்.

தமிழில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால், தெலுங்கில் அதைவிட அதிக வசூலை ஈட்டி ஆந்திர ஹீரோக்களையே அச்சுறுத்தி வருகிறது.

வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இப்படத்தின் தெலுங்கு உரிமை பெறப்பட்டதாம்.

இதுவரை கிட்டதட்ட ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளது.

விரைவில் 50வது நாளை இப்படம் தொட உள்ளதால் பிரம்மாண்டமான விழாவுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

இதனால் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்கும் இப்போதே தெலுங்கு உரிமை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சந்தானம், சிவகார்த்திகேயன் வழியில் ஜீவா..!

சந்தானம், சிவகார்த்திகேயன் வழியில் ஜீவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lollu Sabha Jeeva's Hero Debut film is Arrambhamae Attagasamசந்தானம், ஜெகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கி வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் டிவி நடிகர் லொள்ளு சபா ஜீவாவும் இணைந்துள்ளார்.

இவரை ரஜினி ஜீவா என்று சொன்னால்தான் நிறைய பேருக்கு தெரியும்.

சினிமாவில் ஓரிரு படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.

இவருக்கு காமெடி கைவந்த கலையாக இருப்பதால் வழக்கம்போல இதில் காமெடியும், இளசுகளுக்கேற்ற 10 முத்தக் காட்சிகள் இடம் பெறுகிறதாம்.

இதில் நாயகியாக நடிக்கிறார் கன்னட படப் புகழ் சங்கீதா பட்டு.

இவர்களுடன் பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுபரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

நாய்க்குட்டி படத்தை தொடர்ந்து ரங்கா இப்படத்தை இயக்குகிறார்.

தீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..!

தீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kodi Kashmora and Veera Sivaji to Release on Diwaliஸ்வீட்ஸ், பட்டாசு, நியூ ட்ரஸ், சினிமா, ப்ரெண்ட்ஸ்…. தீபாவளின்னாலே நமக்கு சட்னுக்கு இந்த ஐந்து விஷயங்கள்தான் ஞாபகத்திற்கு வரும்.

எனவே சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்து தர தயாராகி வருகின்றனர்.

இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் கொடி, விக்ரம் பிரபுவின் ‘வீர சிவாஜி’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

‘காஷ்மோரா’ படம் ரூ. 60 கோடியில் தயாராகியுள்ளதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படமும் இணையலாம் எனத் தெரிகிறது.

More Articles
Follows