அசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..?

அசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and balaji sakthivel`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் ’அசுரன்’.

இப்படம் எழுத்தாளர் பூமணியின் `வெக்கை’ நாவலை தழுவி உருவாகி வருகிறது.

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் வில்லனாக `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர்.சியின் உதவியாளர் இயக்கும் படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணி

சுந்தர்.சியின் உதவியாளர் இயக்கும் படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumar and nikki galraniசசிகுமார், அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `நாடோடிகள் 2′ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதனையடுத்து உருவாகவுள்ள தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரின் 19-வது படமாக உருவாகிறதாம்.

சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் என்பவர் இயக்க இப்படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ் நடிக்கிறார்.

செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சபு ஜோசப் எடிட்டிங் செய்ய சுரேஷ் என்பவர் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

நடிகர் & நடிகைகள் :
சசிகுமார் ( Hero) நிக்கி கல்ராணி ( Heroine), தம்பி ராமைய்யா , யோகி பாபு, கும்கி அஸ்வின், சதிஷ், ஆடம்ஸ், ராதா ரவி, சந்தான லட்சுமி , சரவணா சக்தி, சசிகலா, மணி, யமுனா சிலம்பம் சேதுபதி, ரமணி, விஜய குமார், சுமித்ரா , ராஜ் கபூர், ரேகா , தாஸ், மணி சந்தனா , நமோ நாராயணன், மணி மேகலை, மீரா, மனோபாலா, லாவண்யா , சிங்கம் புலி, சுந்தர், ரஞ்சனா, நிரோஷா, ரமேஷ் கண்ணா, சமர், ரஞ்சிதா, ரம்யா, சாம்ஸ், தீபா கிரி

தொழில்நுட்ப குழு :
இயக்கம் : K .கதிர்வேலு
ஒளிப்பதிவாளர் : சித்தார்த்
இசை : சாம் C .S
படத்தொகுப்பு : V .J சபு ஜோசப்
கலை இயக்கம் : சுரேஷ்
நிர்வாக தயாரிப்பு : N .சிவகுமார்
தயாரிப்பு மேற்பார்வை : பாண்டியன் பரமசிவம்
தயாரிப்பு : T .D ராஜா
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன்-த்ரிஷா

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran and trishaபிரசாந்த் நாயகனாக நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா.

தற்போது 20 வருடங்களுக்கு பிறகு ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனும் த்ரிஷாவும் இணைந்து நடித்தனர்.

தற்போது 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள இப்படம் ஒரு ஆக்சன் படமாக இருக்குமாம்.

இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தடம் படத்தில் நாயகியின் உதட்டை பதம் பார்த்த அருண் விஜய்

தடம் படத்தில் நாயகியின் உதட்டை பதம் பார்த்த அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijayதடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தடம்.

கிட்டதட்ட 2 வருடங்களுக்கு மேலாக இப்படம் சில பிரச்சினைகளால் நீண்டது.

இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் அருண் விஜய்.

இவருடன் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் உள்ளிட்ட 4 நாயகிகள் நடித்துள்ளனர்.

ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, புதிய இசையமைப்பாளர் அருண் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில்…

இப்படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் பணி புரிந்தது மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனருக்கான நடிகர்.

நான் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்தது. அதனை இப்போது படமாக உருவாகி இருக்கிறேன்.

அருண் விஜய் கேரியரில் இந்த படம் தடத்தை பதிக்கும். அதுபோல் 4 நாயகிகள். நால்வருக்கும் நல்ல பெயரை இப்படம் பெற்றுத் தரும்.

அருண் விஜய் பேசும்போது… ’எனக்கு இப்படத்தில் லிப் லாக் சீன் உள்ளது. நான் நடிக்க மறுத்தேன். வீட்டில் பிரச்சினை உருவாகும் என்றேன்.

ஆனால் நீங்கள் ஒரு நடிகர். நடித்துதான் ஆக வேண்டும் என டைரக்டர் கேட்டுக் கொண்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன். என்று பேசினார்.

இடையில் குறுக்கிட்டு மகிழ்திருமேனி பேசியதாவது.. ‘அவரிடம் முத்தம் கொடுக்க சொன்னேன். ஆனால் அவர் நாயகி உதட்டை கடித்து விட்டார்.

எந்த நாயகியின் உதடு என்பதை படம் வரும்போது பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்” என்றார்.

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வியை தமிழுக்கு கொண்டு வரும் அஜித்

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வியை தமிழுக்கு கொண்டு வரும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jhanvi Kapoor will make her debut with Ajith in Tamil movieஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இதில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்க, யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் அஜித்துடன் இணைகிறாராம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி.

தமிழுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அதில் அஜித்தின் மகளாக ஜான்வி நடிப்பதாக கூறப்படுகிறது.

Jhanvi Kapoor will make her debut with Ajith in Tamil movie

முதலையுடன் மோதும் கன்னித்தீவின் நான்கு நாயகிகள்

முதலையுடன் மோதும் கன்னித்தீவின் நான்கு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Four beautiful heroines fight off a crocodile in Kanni Theevuத்ரிஷா நடித்து வரும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.

இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது.

அப்போது சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்

இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார்.

ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Four beautiful heroines fight off a crocodile in Kanni Theevu

More Articles
Follows