விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனை அடுத்து தனுஷ் இணைகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் ஆனார்

இந்த நிலையில்தான் ‘பீஸ்ட்’டில் இப்போது தனுஷும் இணைய போகிறார் என ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறது.

ஒருவேளை பாடல் பாடவோ அல்லது பாடல் எழுதவோ தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சில தினங்களுக்கு முன்பு நெல்சன் & அனிருத்தின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதி பாடலாம் என்ற தகவல்கள் கசிந்தன.

Dhanush joins Thalapathy Vijay’s Beast ?

ஹைதராபாத் வீதிகளில் ஹாயாக சுற்றிய அஜித்.; செமயாய் இருக்காருல்ல தல..!

ஹைதராபாத் வீதிகளில் ஹாயாக சுற்றிய அஜித்.; செமயாய் இருக்காருல்ல தல..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் ஹூமா குரேஷி கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் படப்பிடிப்பை ஓய்வு நேரங்களில் ஹைதராபாத் வீதிகளில் அஜித் சென்ற போது சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாம்.

அதில் முழுக்க கருப்பு உடைகளில் செம ஸ்டைலிஜ் லுக்கில் பக்கா க்ளீன் ஷேவ் செய்து வேற லெவல் லுக்கில் இருக்கிறார் தல.

ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்து விட்டு சில ஆக்ஷன் காட்சிகளை வெளியார் அல்லது வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்களாம்.

இவை கொரோனா ஊரடங்கு சூழ்நிலையை பொறுத்து அமையும் எனவும் கூறப்படுகிறது.

Thala Ajith looks stylish in all-black outfit

ஆனைமலையில் அம்மனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

ஆனைமலையில் அம்மனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’.

லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இத்துடன் ‘டான்’ படக்குழுவினருக்கு ரூ 10,000/- அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆனைமலையில் உள்ள மாசானி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தரிசனம் செய்த கோயிலில் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan spotted at MasaniAmman Temple in Anaimalai

வாங்க வாத்தியாரே.; சார்பட்டா பரம்பரைக்கு போட்டியாக களத்தில் இடியாப்ப பரம்பரை

வாங்க வாத்தியாரே.; சார்பட்டா பரம்பரைக்கு போட்டியாக களத்தில் இடியாப்ப பரம்பரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துவிட்டது.

இதனால் இப்படம் தொடர்பான மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்ஸிங் காட்சிகள் பெரிதாக பேசப்பட்டாலும் ஒரு காட்சியில் ஆர்யா (கபிலன்) தனது வாத்தியார் பசுபதியை (ரங்கனை) சைக்கிளில் அழைத்துச் செல்வார். இந்த காட்சியும் ரசிகர்களை ஈர்த்தது.

இந்த நிலையில் ‘சார்பட்டா பரம்பரைக்கு போட்டியாக தற்போது இடியாப்ப பரம்பரையும் நிஜ களத்தில் குதித்துள்ளது.

இடியாப்ப பரம்பரையைச் சேர்ந்த பாக்ஸர் வேம்புலி தனது வாத்தியார் துரைக்கண்ணுவை சைக்கிளில் அழைத்து செல்கிறார்.

அதாவது வேம்புலி கேரக்டரில் நடித்திருந்த ஜான்கொக்கன் தனது ட்விட்டர் பக்கத்தில்…, ‘வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்’ என பதிவிட்டுள்ளார்.

Vaanga Vaathiyaare @GMSundar_ ……naamalum koode ooru sutthi varalaam.

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!!

@Music_Santhosh @arya_offl @beemji @officialneelam @K9Studioz

Please watch #sarpattaonprime Streaming on @primevideoin https://t.co/Su5YdbQHxG

Sarpatta Vembuli shared meme poster on his social media account

மீரா மிதுன் பேசியது மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்..; எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்

மீரா மிதுன் பேசியது மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்..; எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை மாடல் என பெயர் பெற்றவர் மீரா மிதுன்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அண்மையில் தலித் சாதியினரை SC இனத்தவர்களை விமர்ச்சித்துள்ளார்.

மீரா மிதுன் பேசியதாவது…

“பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.

திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

மேலும் மீராவை கைது செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் மீரா மிதுன் மீது சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் விரைவில் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில்…

என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு..

உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல.

வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.

சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?

சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?

பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா?

ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது?

விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?

“குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்” என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.
மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம்.

இத்தகைய பேட்டிகளை யூட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.

மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன்.

இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

– அன்பன் எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)

Actor MS Bhaskar slams Meera mithun’s contoversial speech

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பெயரை மாற்றியது தமிழக அரசு

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பெயரை மாற்றியது தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு அதற்கேற்ப படிப்புகளும் கல்லூரி நிறுவனங்களும் உள்ளன.

இதில் சினிமா தொடர்பான பல துறைகள் கொண்ட படிப்புகளும் உள்ளன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதில் அரசு சார்பாக திரைப்படம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழக அரசால் சென்னையில் நடத்தப்படும் கல்லூரி எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்…

‛‛எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை *தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்* என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களிலும் இந்நிறுவனத்தின் பெயரினை புதிய மாற்றத்தின்படி குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறது என அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN govt changed film institute name in chennai

More Articles
Follows