முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran dhanushபூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன்.

வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

படத்திற்கு அனைவரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே தந்தனர்.

கேரளா, கர்நாடகாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தியேட்டர் வசூல் மூலம் மட்டும் சுமார் 50 கோடி வசூலாகியுள்ளதாம்.

மேலும் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த வசூல் 100 கோடியைத் தொட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளன.

விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abhirami with shobhaகடந்த 100 நாட்களாக டிவி பிரியர்களை அதிர வைத்த நிகழ்ச்சி என்றால் அது கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

இந்த பிக்பாஸ் 3 இறுதியில் முகேன் என்பவர் வின்னர் ஆனார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் பல பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு வருகின்றனர். மேலும் சில பிரபலங்களை சந்தித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் போட்டோ எடுத்து சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

பெண் குழந்தை இருந்தால் ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பார்க்கனும்… – சேரன்

பெண் குழந்தை இருந்தால் ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பார்க்கனும்… – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajavukku Cheque movie stillsபல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

“இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும்.

என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார்.” என்றார்.

தலைவர் 168 படத்தில் ஜோதிகா-வடிவேலு-கீர்த்தி சுரேஷ்..?

தலைவர் 168 படத்தில் ஜோதிகா-வடிவேலு-கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Keerthy Sureshதர்பார் படம் வெளியாவதற்குள் தனது அடுத்த படத்தையும் அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

தர்பார் 2020 ஜனவரியில் தான் வெளியாகிறது. ஆனால் அதற்குள் 2019 டிசம்பருக்குள் தலைவர் 168 படத்தை தொடங்குகிறார் ரஜினி.

இந்த படத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படத்தில் சந்திரமுகிக்குப் பிறகு ஜோதிகா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு கேரக்டரில் கீர்த்தி சுரேசும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agni Siragugal‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.

‘அக்னி சிறகுகள்’ படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.
அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது.

இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்..

“அல்மதி நகரின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். இயற்கை எழிலும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்தியதை, பரவசம் தந்த ஒரு புனிதமான அனுபவம் என்றே கூற வேண்டும்.
பனி போர்த்திய மலை முகடுகள், தங்கமென மின்னும் பாலைவன மணல் துகள்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ கனவுலகில் மிதப்பது போலத்தான் இருந்தது.
இங்கு படப்பிடிப்பை நடத்தியது குறித்து ஒட்டு மொத்தக் குழுவும் மகிழ்ச்சியடைந்ததோடு, அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்திய முதல் இந்தியப் படம் அக்னி சிறகுகள் என்பது குறித்தும் மிகவும் பெருமை கொள்கிறோம்.
அது மட்டுமல்ல…. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் சில சண்டைக் காட்சிகளையும் இங்கு படமாக்கியிருக்கிறோம். ஆயுதங்களின்றி வெறும் கைகளால் சண்டையிடும் மார்ஷல் ஆர்ட் தற்காப்பு வகையில் ஒரு வகையான நொம்ட்ஸ் என்ற கலையில் இங்குள்ள குழுக்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன. சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி குதிரையேற்றம் போன்ற சாகசங்களிலும் வல்லவர்கள் இவர்கள். ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இடம் பெறும் இந்தப் புதுமையான சண்டைக் காட்சிகள், நமது ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும். இறுதியாகச் சொல்ல வேண்டுமானால் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் வெளியான பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கஜகஸ்தான் மிகப் பெரிய சுற்றுலா கேந்திரமாக மாறும்” என்றார் இயக்குநர் நவீன்.
ரசிகர்களை இருக்கையின் நுனியிலேய துவக்கம் முதல் இறுதிவரை அமரவைக்கூடிய விறுவிறுப்பான திரில்லர் பாணி படமான அகினி சிறகுகள, மூன்று இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. அருண் விஜய், விஜய் ஆன்டனி, அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, சென்ராயன், ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அக்னி சிறகுகள்’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

சினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

சினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay got 2nd place after Rajini Bigil movie budget newsஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது. எனவே மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகும்.

அண்மைக்காலமாக தமிழ் & தெலுங்கு சினிமாவுக்கும் உலகளவில் மார்கெட் இருப்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம்தான் இதுவரையில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பட்ஜெட் படமாக இருக்கிறது.

லைகா தயாரித்த இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 450 கோடி என்றனர்.

இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தமிழ் சினிமாவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 180 கோடியில் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் உரிமை மட்டும் 45 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் படத்தின் வியாபாரமும் களைகட்டி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் பிசினஸ் முழு விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Vijay got 2nd place after Rajini Bigil movie budget news

More Articles
Follows