தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிய படம் ரிலீசாகும் போது அந்த நடிகரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்துவிட்டதால் தற்போது பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்த்து வருகின்றனர்.
காப்பான் ரிலீசின் போது சூர்யா ரசிகர்கள் இலவசமாக ஹெல்மேட்களை வழங்கினர்.
இந்த நிலையில் நேற்று தனுஷ் நடித்த அசுரன் படம் ரிலீசானது.
அப்போது பேனர் வைப்பதற்கு பதிலாக தனுஷ் ரசிகர்கள் திருநங்கைகளுக்கு இலவசமாக தையல் மிஷின்களை கொடுத்து அசத்தியுள்ளனர்.
ரசிகர்களின் இந்த செயலை அறிந்த அவர்களை பாராட்டியுள்ளார் தனுஷ்.
Dhanush fans donated Free Sewing Machine for Asuran release