‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok selvanசூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.

கூட்டத்தில் ஒருத்தன் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒரு சமீபத்திய பேட்டியில் இவரின் நிறம் குறித்தும் அழகு குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு சற்றே ஆவேசமான அவர் கூறியதாவது…

“எதை வச்சி அழகை முடிவு பண்றீங்க. சிவப்பா இருந்தா அது அழகா.? கறுப்பா இருந்தா அழகு இல்லையா?

இங்கிலீஷ் பேசினா புத்திசாலியா? அது ஒரு மொழி அவ்வளவுதான்.

என்னை பொறுத்தவரை தனுஷ்-விஜய்சேபதி அழகுதான்.

இங்கே நிறத்தை வைத்து அழகை எடை போடுவது தவறான கண்ணோட்டம்” என்று தொகுப்பானியே திகைக்கும் அளவுக்கு பேசினார் அசோக் செல்வன்.

Dhanush and Vijay sethupathi looks handsome says Ashok Selvan

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinkingசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் இன்று பி.அய்யாக்கண்ணு தலைமையிலான 16 பேர் கொண்ட விவசாயிகள் குழுவைச் சந்தித்தனர்.

ரஜினியை சந்தித்த பிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது…

”நதிகள் இணைப்பு என்னும் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ரஜினி. அதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் தருவதாக பத்து வருடங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

நதிகளை இணைக்க உடனடியாக எங்களிடம் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் கூறினார்.

ஆனால், அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, மற்றும் காவேரி போன்ற நதிகளை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளிலும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

விரைவில் பிரதமரை சந்தித்து நதிகள் இணைப்பு பற்றி ரஜினி பேசுவார்.” என்றார் அய்யாக்கண்ணு.

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinking

rajini ayyakannu meeting

லிப்ரா புரொடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி

லிப்ரா புரொடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Short Film awardsதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.

நளனும் நந்தினியும், சுட்ட கதை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் அவர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாகவும் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது என்பதும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய விதிகள்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai – 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது [email protected] எனும் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 – 4208 9658 இந்த எண்களை தொடர்புகொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தகட்ட விபரங்களை லிப்ரா புரடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

libra short film awards

உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and bodyநடிகரும் பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and body

Kayal Devaraj Stills 006

அரசியல் களத்தில் ரஜினி-விஜய்; பெருகும் ஆதரவு.

அரசியல் களத்தில் ரஜினி-விஜய்; பெருகும் ஆதரவு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and vijay2.0 மற்றும் காலா படங்களில் பிஸியாக இருப்பதால் தன் அரசியல் பணியை தன் பிறந்தநாளில் (டிசம்பர் 12) ரஜினி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல அவ்வப்போது அரசியல் விசயத்தில் விஜய்யின் பெயரும் சேர்க்கப்பட்டு வருகிறது.

விஜய்யும் தன் அரசியல் பற்றிய அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ள நிலையில் இருவரும் இணைந்தால் என்ன? என் ரசிகர்கள் பேசி வருகிறார்களாம்.

இதற்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி வருகிறதாம்.

இருவரும் மௌனம் கலைத்தால் மட்டுமே இவர்களின் அரசியல் களம் உண்மையா? பொய்யா என்பது தெரியும்.

தனுஷ் இல்லாமல் வடசென்னையை வட்டமிடும் வெற்றிமாறன்

தனுஷ் இல்லாமல் வடசென்னையை வட்டமிடும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vetrimaaranதனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்தை மூன்று பாகங்களாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இதில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

எனவே தனுஷ் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறாராம் வெற்றிமாறன்.

இதற்காக காசிமேடு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை வட்டமிட்டு படம்பிடித்து வருகிறார்.

நேற்றைய சூட்டிங்கில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

More Articles
Follows