அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படத்திற்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிகேட் என்ன தெரியுமா??

அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படத்திற்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிகேட் என்ன தெரியுமா??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.

இவர் ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

அசோக் செல்வன் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘போர் தொழில்’ படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், ‘போர் தொழில்’ படம் வருகின்ற ஜூன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ashok selvan’s ‘por thozhil’ movie got U/A certificate

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சனோன்; திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்..!

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சனோன்; திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘ஆதிபுருஷ்’ படம் வருகிற ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து, வெளியே வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப டைரக்டர் ஓம் ராவத் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இயக்குனர் ஓம் ராவத்தின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

adipurush director om raut kissed to actress kriti sanon

எம்.எஸ்.தோனியின் ‘எல்.ஜி.எம்’ படத்தின் புதிய அறிவிப்பு

எம்.எஸ்.தோனியின் ‘எல்.ஜி.எம்’ படத்தின் புதிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)).

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘எல்.ஜி.எம்’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசர் இன்று (ஜூன்7) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

எல்.ஜி.எம்

msdhoni will release lgm movie teaser today

சாந்தனு – ஆனந்தி நடித்த ‘இராவண கோட்டம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி

சாந்தனு – ஆனந்தி நடித்த ‘இராவண கோட்டம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகி வெளியான படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ‘கயல்’ நடிகை ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், ‘இராவண கோட்டம்’ படத்தை வருகிற ஜூன் 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இராவண கோட்டம்

ravana kottam movie releasing in OTT from june 16

நயன்தாராவின் பட இயக்குனரின் மீது பண மோசடி.; காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெண்…?

நயன்தாராவின் பட இயக்குனரின் மீது பண மோசடி.; காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெண்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘அறம்’.

விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார்.

இவர், தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ என்ற படத்தை இயக்குகிறார்.

கோபி நயினார்

இந்நிலையில், இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, “சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன்.

கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பர் நகரம்’ படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார்.

அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார்.

கோபி நயினார்

அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன்.

பிறகு படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர்.

அதன்பிறகு நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகாமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார்.

இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார் சியாமளா.

சியாமளா

nayanthara’s Aramm movie director against to money laundering case

அயோத்தி இயக்குநரின் அடுத்த படம்.; மாதவனுடன் மீண்டும் இணையும் கங்கனா!

அயோத்தி இயக்குநரின் அடுத்த படம்.; மாதவனுடன் மீண்டும் இணையும் கங்கனா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத்.

தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தார்.

பிறகு இந்தியில் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

இப்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா, வடிவேலு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது விட்டது.

இந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் தமிழில், மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை ‘அயோத்தி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது.

மேலும், மாதவனும் கங்கனாவும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

actress kangana ranaut again in tamil to share screen with madhavan

More Articles
Follows