மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.; கன்பார்ம் செய்தார் தனுஷ்

Karnan  (1)மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கர்ணன்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது.

இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமில்லாது நடிகர்கள் விக்ரம், பிரசாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டினர்.

இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிக்க மகிழ்ச்சி. முன் தயாரிப்பு நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்.

#Karnan #KarnanBlockBuster

Dhanush and director Mari Selvaraj to collaborate again for another project

Overall Rating : Not available

Latest Post