கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and delhi ganeshஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார். அவர் கமல் பற்றி கூறியதாவது…

கமல் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அதனால நிறைய பேர் அவரைப் பார்க்க வருவாங்கனு எதிர்பார்ப்போம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

சூட்டிங் என்றால் சூட்டிங்தான். அங்க யாரும் வரக்கூடாதுனு கண்டிப்பாக சொல்லிட்டார்.

எங்கள் ஆரம்ப காலத்தில் நானும், கமலும் எப்படி பேசிட்டு இருந்தோமோ இன்னும் அப்படியேதான் இருக்கோம்’ என டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை; பானுப்ரியாவிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு காப்பகத்தில் பாதுகாப்பு

பாலியல் தொல்லை; பானுப்ரியாவிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு காப்பகத்தில் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress banu priyaஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரபாவதி. அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் நடிகை பானுப்ரியா மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளர்.

அதாவது… “நடிகை பானுப்பிரியா தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை. சந்தியாவை பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்” என்று புகார் கொடுதிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சாமர்லகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் நடிகை பானுப்பிரியா இதை மறுத்துள்ளார்.

என் வீட்டில் வேலை செய்த சிறுமி, வீட்டில் உள்ள விலை உயர்ந்த ஆபரங்கள் மற்றும் பொருள்களை சந்தியா திருடிவிட்டார். அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம் என சிறுமியின் தாயிடம் கூறினோம்.

ஆனால் புகார் அளிக்க வேண்டாம் என அவர் எங்கள் காலை பிடித்து அழுததால் திருட்டு தொடர்பாக புகார் அளிக்கவில்லை’ என நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த அந்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர்.

அங்கு சிறுமியிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

பின்னர் அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சந்தியாவிடம் விசாரணை நடத்த ஆந்திர மாநில போலீசார் சென்னை வரவுள்ளனர்.

விஜய் ஆண்டனி & அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ பற்றி சிவா

விஜய் ஆண்டனி & அருண் விஜய் இணையும் ‘அக்னி சிறகுகள்’ பற்றி சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agni siragugalஅம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா தயாரித்துள்ள படம் ‘அக்னி சிறகுகள்’.

இப்படம் பற்றி அவர் கூறியதாவது…

“தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் திட்டமிடப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவடைந்து வருவது ஒட்டுமொத்த செயலையும் மென்மையானதாக மாற்றுகிறது.

ஒட்டுமொத்த குழுவினரும் அத்தகைய ஒழுக்கத்தோடு இருப்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, படம் சிறப்பாக உருவாகிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

ஆரம்ப நிலை கதை விவாதங்கள், கதை சொல்லல் என இயக்குனர் நவீன் எல்லாவற்றையும் மிக தெளிவாக பதிவுகளில் வைத்திருக்கிறார்.

ஒத்திகைகள் அல்லது மேக்கப் டெஸ்ட் என எல்லாவற்றையும் அவர் வாக்களித்தபடி நிறைவேற்றிக் கொடுத்தார். இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிமிதமான முயற்சிகளும், உழைப்பும் தான் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க உதவியாக இருந்திருக்கிறது.

இயக்குனர் நவீன் வாக்களித்தபடி, அக்னி சிறகுகள் மிக சிறப்பாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது, முழு படத்தையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

அக்னி சிறகுகள் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

Breaking அண்டாவில் பால்; மாத்தி பேசல என சிம்பு மன்னிப்பும் விளக்கமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegamஇரண்டு வாரத்திற்கு கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு.

அதன் பின்னர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், பெற்றோருக்கு டிரெஸ் எடுத்துக் கொடுங்கள் என்றார்.

சிம்புவின் பேச்சை சிலர் வரவேற்றாலும் பலர் கிண்டல் செய்தனர். உங்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என கேலி செய்தனர்.

இதனால் பெரிய பெரிய கட்-அவுட் வைங்க. பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா பால் ஊற்றுங்கள் என்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இரண்டு செய்திகளும் நம் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று (ஜன.,28, 2019) சென்றார் நடிகர் சிம்பு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது…. எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில் அப்பாவையும், நண்பர் மகத்தையும் அனுப்பி வைத்தேன்.

அந்த ரசிகன் இறந்த பாதிப்பு எனக்குள் இருந்தது. அதனால் அப்போதே எழுமின் படத்தின் இசை வெளியீட்டிலேயே, பேனர், பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை.

அதனால் தான் மீண்டும் ஒரு முறை பஎன் படம் ரிலீஸின் போது சொல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பெற்றோருக்கு, புடவை, வேஷ்டி எடுத்து கொடுங்கள் என்றேன். அதுவும் சரியாக சேரவில்லை.

ஒரு விஷயத்தை நெகட்டிவ்வாக கூறினால் தான் மக்களிடம் போய் சேரும் என்று நினைத்து, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, பெரிய பேனர் வையுங்கள், கட்-அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலை ஊற்றுங்கள், வேற லெவலில் செய்யுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டேன்.

தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று தான் சொன்னேன். எனக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை.

நான் மாற்றி பேசும் ஆள் கிடையாது. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று தான் பேசுகிறேன்.

இதுதான் உண்மை. ஒருவேளை எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

கட்-அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள். மனிதர்களுக்கு, கஷ்டப்படுகிற மக்களுக்கு கொடுங்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சொன்னதை, மறப்பவன் நான் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை.

நல்லதை யார் சொன்னாலும் எடுத்து கொள்ளலாம். எது எப்படி என்றாலும் உண்மை ஜெயிக்கும். எனக்கு ரசிகர்களின் அன்பு போதும், வேறு எதுவும் வேண்டாம்.” என உருக்கமாக பேசினார் சிம்பு.

Simbu aka STR meet fans family and Apollogy on Paal Abhishegam

Exclusive அன்றே சொன்னோம்.; இன்று அஜித் பட அறிவிப்பும் வந்துவிட்டது!

Exclusive அன்றே சொன்னோம்.; இன்று அஜித் பட அறிவிப்பும் வந்துவிட்டது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith team up with Vidya Balan in Thala 59 cast and crew news updatesவினோத் இயக்கவுள்ள தல 59 படத்தில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவுள்ளார். முக்கிய வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்ற செய்தியை பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தோம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என வெளியிட்டு இருந்தோம். (Click Link)

https://www.filmistreet.com/cinema-news/vidya-balan-to-play-female-lead-in-ajiths-pink-remake/

அதன்படி இன்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு…

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே.

2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர்.

ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

அவர் மேலும் கூறியதாவது…

அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது.

தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார்.

நிச்சயமாக என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு , தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் தேர்ந்து எடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவு ஆக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்று இணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.

அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல் , ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன்.

அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான team வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார்.

அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது. கதை என்ன பின்னனியில் அமைந்தாலும் இசை அந்த பின்னணிக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன்.

அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார்.

அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்க படும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங், மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இன்னமும் தலைப்பிட படாத இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர் -நீரவ் ஷா.
கலை இயக்குநர்- கே கதிர்.
சண்டை பயிற்சி- திலிப் சுப்புராயன்.
படத்தொகுப்பு. கோகுல் சந்திரன்.
நிர்வாக தயாரிப்பு- பி ஜெயராஜ்.
ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி.

Ajith starrer Thala 59 cast and crew news updates

ரூ 11 கோடி செலவில் 100 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி

ரூ 11 கோடி செலவில் 100 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Charans Vinaya Vidheya Rama climax fight budget Rs 11 crores தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகி உள்ளார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் .கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

வசனம் T.கிருஷ்ணமூர்த்தி,
பாடல்கள்சுகுமார் கணேசன் .

தெலுங்கில் விமர்சனங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிபெற்ற , DDV என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி 1 முதல் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Ram Charans Vinaya Vidheya Rama climax fight budget Rs 11 crores

More Articles
Follows