தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியுடன் பவர்புல் இந்தியனாக கமல்.

தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியுடன் பவர்புல் இந்தியனாக கமல்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deadly combo Kamal and Shankars Indian2 news updatesகிட்டதட்ட 22 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன்.

அதில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தன் மகனையே கொலை செய்வார் தந்தை கமல்.

அந்தப்படத்தில் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பிழக்கக் செய்துக் கொண்டிருக்கும் ஊழல் லஞ்சத்தை கடுமையாக சாடியிருந்தார் டைரக்டர் ஷங்கர்.

தற்போது லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்னுமளவுக்கு இந்தியா மோசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

எனவே இந்தியன் தாத்தா கமலை இன்னும் பவர்புல்லாக காட்ட முடிவெடுத்துள்ளாராம் ஷங்கர்.

கமலும் அதற்கான உடற்பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

மேலும் இதற்காக ஹாலிவுட்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார் ஷங்கர் என தெரிய வந்துள்ளது.

அண்மையில் இப்படத்திற்காக டெஸ்ட் ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Deadly combo Kamal and Shankars Indian2 news updates

தளபதி-சிவாஜி வரிசையில் ரிலீஸிலேயே சாதனை படைக்கும் 2.0

தளபதி-சிவாஜி வரிசையில் ரிலீஸிலேயே சாதனை படைக்கும் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths 2PointO movie making records in release itselfஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

இவை தவிர உலகின் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர்.

இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர்.

மேலும் முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கியுள்ளார் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரூ. 600 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு எந்தவொரு தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது கிடையாதாம்.

கடந்த 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் ரிலீசானது.

அதன்பின்னர் மீண்டும் ரஜினி நடித்த படமே அந்த சாதனையை முறியடித்தது.

அதாவது 2007-ல் வெளியான சிவாஜி படம் 1,000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக கருதப்பட்டது.

தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு 10,000 தியேட்டர்களில் 2.0 படம் வெளியாவது சாதனை என்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanths 2PointO movie making records in release itself

குக்கூ ஹீரோயினா இவங்க.? கூச்சப்பட வைக்கும் மாளவிகா ஸ்டில்ஸ்

குக்கூ ஹீரோயினா இவங்க.? கூச்சப்பட வைக்கும் மாளவிகா ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kukkoo fame Malavika Nair recent hot stills goes viralமலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த மாளவிகா நாயரை குக்கூ படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் டைரக்டர் ராஜூமுருகன்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழில் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா.
தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 17-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படத்திலும் நடித்திருந்தார்.

மேலும், பி.ஏ படித்தபடியே சினிமாவில் நடித்து வந்த மாளவிகா நாயர், இனிமேல் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம்.

எனவே அதிரடியாக ஒரு போட்டோ சூட் நடத்தி தன் கவர்ச்சியான படங்களை இணையத்தில் விட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

Kukkoo fame Malavika Nair recent hot stills goes viral

malavika nair hot stills

வரலட்சுமி-கேத்ரீன்-ராய் லட்சுமி நடிக்கும் *நீயா2* படத்தில் 22 அடி பாம்பு

வரலட்சுமி-கேத்ரீன்-ராய் லட்சுமி நடிக்கும் *நீயா2* படத்தில் 22 அடி பாம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varalakshmi neeya 2 movieஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது.

1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் ‘நீயா’.

தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.

மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.

அதோடு, ஷபீர் இசை விருந்தாக ‘தொலையுறேன்’ பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், ‘இன்னொரு ரவுண்டு’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதித் தீவிரமான காதல் கதை என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு ‘ஜம்போ சினிமாஸ்’ சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.

‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, ‘நீயா 2’விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.

பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

எல். சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார். படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Screen Scene Media acquires TN Theatrical Rights Of Neeya2 movie

ரஜினியின் 100% நம்பிக்கையை மக்கள் காப்பாற்றுவார்களா..?

ரஜினியின் 100% நம்பிக்கையை மக்கள் காப்பாற்றுவார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முத்து.

கவிதாலயா தயாரித்த இப்படம் 1995ல் தீபாவளிக்கு வெளியானது.

அதன்பின்னர் 3 வருடங்களுக்கு பிறகு சீன மொழியில் டான்சிங் மகாராஜா என்ற பெயரில் வெளியாகி அங்கும் ரஜினி புகழை பாடியது.

இந்நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜப்பானில், 4கே மற்றும் 5.1 சவுண்ட் ஒலியமைப்பில் நவ., 23ம் தேதி ரிலீஸாகிறது என்பதை பார்த்தோம்.

இது குறித்து ரஜினி ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

அதில்.. நிறையபேருக்கு பிடித்த படம் முத்து. ஜப்பான் மக்களுக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சி. இன்னும் நிறைய ஜப்பானியர் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். கவிதாலயா நிறுவனம் 4கேவில் மாற்றம் செய்து வெளியிடுகிறது.

ரஹ்மான் பின்னணி இசையை மேம்படுத்தி உள்ளார். மேம்படுத்தப்பட்ட முத்து படத்தை, ஒரிஜினலை விட அதிகமாக ரசிப்பீர்கள் என 100% நம்புகிறேன்” என அதில் பேசியுள்ளார்.

இந்த டான்சிங் மகாராஜாவின் நம்பிக்கையை ஜப்பானியர்கள் காப்பாற்றுவார்கள் என நம்புவோம்.

மலையாளத்தில் அர்ஜுன் அறிமுகம்; திலீப்க்கு வில்லனாகிறார்

மலையாளத்தில் அர்ஜுன் அறிமுகம்; திலீப்க்கு வில்லனாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun and dileepதமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 37 வருடங்களாக நடித்து வருகிறார் அர்ஜுன்.

ஆனால் இதுவரை மலையாள படத்தில் நேரிடையாக நடிக்கவில்லை.

மாதரம்’ என்ற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தாலும் இப்படம் 2 மொழிகளில் உருவானது.

தற்போது முதன்முறையாக மலையாள சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகர் திலீப் நடிக்கும் ஜாக் டேனியல் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

அறிமுக இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார்.

More Articles
Follows