தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movieஹரிஷ் கல்யாண், டிங்கான்கனா சூர்யவன்சி, ரெபா மோனிகா ஜான் மற்றும் யோகிபாபு நடித்துள்ள படம் தனுசு ராசி நேயர்களே.

நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கோகுலம் சிட்பண்டு நிறுவனர் கோகுலம் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில வசனங்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரையும் அதே சமயத்தில் மற்றொரு வசனத்தில் தாலியின் புண்ணியத்தையும் கெடுப்பதாக உள்ளது.

ஒரு காட்சியில் குடிபோதையில் நாயகன் நாயகி செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். அதன்பின்னர் ஹீரோ தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்.

ஆனால் ஹீரோயினோ தனக்கு லட்சியம் இருக்கிறது. நான் செவ்வாய் கிரகம் செல்ல வேண்டும். திரும்பி வரப்போவதில்லை. எனவே உன்னை திருமணம் செய்துக் கொள்ள முடியாது.

மேலும் தாலி என்பது நாய்க்கு கட்டப்படும் பெல்ட் போல. எனக்கு அந்த வாழ்க்கை செட்டாகாது. அதை கட்டிக்கொண்டு உன்னோடு வரமுடியாது என்கிறார்.

தமிழ் சினிமாவில் தாலி சென்டிமெண்ட்டில் எத்தனையோ படங்கள் ஓடியது. ஆனால் நாகரீகம் என்ற பெயரில் தாலியை நாய் பெல்ட்டுக்கு நிகராக பேசுவது தாய்மார்களின் மனதை புண்படுத்தும் வசனமாக மாறும்.

இந்த படத்திற்கு யோகிபாபுவின் கால்ஷீட் சரியாக கிடைக்கவில்லை. எனவே படத்தின் கலைஞர்களுடன் நடிக்காமல் அவரின் காட்சிகள் தனியாக படமாக்கப்பட்டுள்ளது.

அவரே படத்தின் ஹீரோ யார்? ஹீரோயின் யார்? என அடிக்கடி பேசிக் கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை எப்படி எல்லாம் உருவாகிறது என்பதையும் விளக்குகிறார்.

நான் சும்மா இந்த இடத்துக்கு வரல. பல வருசமாக கஷ்டப்பட்டேன். அதற்காக பலன் இப்போது கிடைத்துள்ளது என்கிறார்.

இறுதியாக க்ளைமாக்ஸில் கொடுத்த கால்ஷீட்டுக்கு பேசிட்டேன். என்ற டயலாக்கும் பேசுகிறார்.

என்ன இருந்தாலும் அவர் நிச்சயமாக சம்பளம் வாங்காமல் பேசியிருக்க மாட்டார். அப்படியிருக்கையில் ஏதோ கடமைக்காக செய்துவிட்டதை போல் பேசியிருக்கிறார்.

இது நிச்சயம் இந்த பட தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் மற்ற தயாரிப்பாளர்களையும் அவமானப்படுத்துவதாகவே உள்ளது.

மேலும் யோகிபாபு காட்சிகள் இல்லாமலே படம் சரியாக தான் செல்கின்றது. அப்படியிருக்கையில் இந்த வசனங்கள் தேவையா? என்பதே படம் பார்த்தவர்களின் கேள்வியாக உள்ளது.

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movie

Overall Rating : Not available

Latest Post