‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

‘ஹிப்பி’ என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷியின் அழகு தோற்றமும், எல்லைகளைக் கடந்த தன்னிச்சையான நடிப்பும் ரசிகர்களை அச்சரியத்தில் மூழ்கடித்தன. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் டிகன்கனா சூர்யவன்ஷியின் தமிழ்ப்பட அறிமுகம் குறித்து சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக ஆவலோடு காத்திருக்க, இப்போது ஹரீஷ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் வெளியாவது குறித்து அகமகிழ்ந்திருக்கின்றனர். பகட்டான அழகுப் பதுமையான டிகன்கனா ஹரீஷ் கல்யாணுடன் வெண்திரையைப் பகிர்ந்துகொண் டிரைலர் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழையில் அவரை நனையச் செய்யத் தொடங்கினர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காணப்படும் டிகன்கனா சூர்யவன்ஷி படம் குறித்து என்ன சொல்கிறார்…?

“‘தனுசு ராசி நேயர்களே’ டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்தப் பரிசு எனக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. இதற்காக நான் தயாரிப்பாளர் கோபாலன் சார் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக தமிழில் அவர்கள் தயாரித்த முதல் படத்திலேயே என்னையும் பங்கு பெறச் செய்தது, எனக்கு உண்மையில் மிகப் பெரிய விஷயம்.
‘தனுசு ராசி நேயர்களே’ தனக்கு முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். தனது பணி குறி்தது மகத்தான தெளிவுடன் அவர் பணியாற்றிய விதம், முதிர்ந்த காட்சிகளாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர்அருமையான சக நடிகர். மிக அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது பணியில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்துபவர். படப்பிடிப்புக்கிடையே எனக்கும் அவருக்கும் எந்தவொரு சிறு பிணக்கும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு மொத்தமும் மிக இனிமையாகக் கழிந்தது. ரெபா மோனிகா ஜானுடன் எனக்கு படத்தில் மிகச் சில காட்சிகள் மட்டுமே உண்டு. இனிமையான பெண்மணியான இவருடன் படப்பிடப்பின் இடையே கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடிப்பதுண்டு. மொத்தத்தல் இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள். 5 ஸ்டார் செந்தில் சார் தனுசு ராசி நேயர்களே படத்தை தேர்வு செய்து வாங்கி, மிகப் பெரிய அளவில் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜிப்ரான் சாரின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டுவதுடன், படத்தை மேலும் வண்ணமயமாக்கி இளைஞர்களை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார் டிகன்கனா சூர்யவன்ஷி.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துக்காக கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரீன் கல்யாண், டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான், ரேணுகா, முனீஷ்காந்த், டேனியல் ஆன் போப், பாண்டியராஜன் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *