சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நவராத்திரி படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தார்.

அவரை மிஞ்சும் வகையில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள கோமாளி படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார் ஜெயம்ரவி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, காஜல்அகர்வால், யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக இப்படம் பேச உள்ளது.

இந்த நிலையில் இன்று ஒலியிம் ஒளியும் என்ற பாடல் வெளியானது.

அந்த பாடலில் 1990களில் நடந்த சில நிகழ்வுகளை பாடல் வரிகளாக வைத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி நடித்தவர்கள் இன்று பாட்டியாகிவிட்டார்கள். பேத்தியாக நடித்தவர்கள் இன்று அவருடன் ஜோடி போடுகின்றனர் என்ற வரிகளில் ரஜினியை கலாய்த்துள்ளனர்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)இந்தியாவில் சினிமாவில் போல கிரிக்கெட்டும் மிக பிரபலம். எனவே தான் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் நன்றாக ஓடி வரவேற்பை பெற்றது.

தற்போது இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை, மிக விரைவில் சினிமாப் படமாக்க உள்ளனர்.

முத்தையா முரளீதரனையே, அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தனர்.

தற்போது முத்தையா முரளீதரன் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க உள்ளனர்.

இப்படத்திற்கு 800 என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

சல சல எனும் துள்ளல் பாடலை பதிவு செய்த மித்ரன் படக்குழு

சல சல எனும் துள்ளல் பாடலை பதிவு செய்த மித்ரன் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)மிக உற்சாகமான எனர்ஜி மற்றும் மரபணு ரீதியாக வலிமையான பண்புகளை கொண்ட சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மித்ரன்’ படத்திற்காக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு ‘சல சல’ என்ற துள்ளலான ஒரு பாடலை படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆம், பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

பொதுவாக, போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும் என்ற கேள்விக்கு, இயக்குனர் ஜி பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனை பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் – மகன் உணர்வுகளுடன் படத்தை ஒன்றிணைத்துள்ளோம். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணியில் உள்ள பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சல சல பாடலை பற்றி அவர் கூறும்போது, “அருண் ராஜ் சல சல பாடலில் சாதாரண பதிப்பை எனக்கு வாசித்து காட்டியபோது, அது நிச்சயமாக இறுதி வடிவம் பெறும்போது பாராட்டத்தக்க ஒன்றாக மாறும் என்று நான் உணர்ந்தேன். பின்னர், சதீஷ் தனது நடன அசைவுகள் மூலம் தனது மாயாஜாலத்தை சேர்த்தார். இசை தாளங்களுக்கு ஏற்ப முழுமையான அசைவுகளை பாடல் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு முரளி கிரிஷ் இந்த பாடலை தனது அழகான காட்சிகள் மூலம் சுவை கூட்டியிருக்கிறார். இந்த பாடலை பார்வையாளர்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சண்முக பாண்டியன் தனது நடனம் மற்றும் வெளிப்படுத்துதல் மூலம் தன்னை காட்டிக் கொண்ட விதம் இன்னொரு அழகு” என்றார்.

வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்க, அழகம் பெருமாள், சாய் தீனா மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களைத் தவிர, ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி கேபிஒய் புகழ் பப்பு மற்றும் யூடியூப் ‘ஹேண்ட்பேக்’ ஷோ புகழ் ஆஷிக் ஆகியோரும் இந்த படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். நாயகனுடன் படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் நடிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தாய் – மகன் பிணைப்பு இந்த படத்தின் மிகச்சிறந்த ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.

இந்த் படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் உறுதி செய்யப்படும்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படங்களில் இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் எழுதி, இயக்குகிறார்.

நேர்மறையான வரவேற்பை பெற்ற வைபவின் டாணா டீசர்

நேர்மறையான வரவேற்பை பெற்ற வைபவின் டாணா டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaibhav in taanaகதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவமாக இருப்பதும், இந்த கதை தனக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதாக நம்புவதும் தான் ஒரு கலைஞரை அடுத்த கட்டத்துக்கு தள்ளுகின்றன. இந்த அம்சத்தில், நடிகர் வைபவ் இந்த மந்திரத்தால் தனது திரை வாழ்க்கையை வளர்த்து வருகிறார். ஏற்கனவே தனது திரைப்படங்களின் வரிசை மூலம் ஒரு ஆர்வத்தை வைபவ் உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய வரவாக “டாணா” திரைப்படமும் சேர்ந்திருக்கிறது. நேற்று (ஜூலை 22) வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர், நேர்மறையான வரவேற்பை பெற்றது. தயாரிப்பாளர்களே தங்கள் எதிர்பார்ப்புகளை இது தாண்டியதில் ஆச்சரியப்பட்டனர்.

கதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் திறமை டீசரை வைத்து மதிப்பிடப்படுகிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதை உண்மையாக நிரூபித்து விட்டார். 1 நிமிடம் 18 வினாடிகள் ஓடும் டீசரில், 39 வினாடிகள் கதை களத்தில் காமெடி மற்றும் காதல் அம்சங்களை நிறுவி, அதன்பிறகு வரம்பற்ற நகைச்சுவையுடன் கூடிய கதையில் உண்மையான மோதலின் களத்தை அமைக்கும் ஒரு திருப்பம் அற்புதமாக தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நாயகனின் பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் யோகிபாபுவின் நகைச்சுவையான வரிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளன. குறிப்பாக “இந்த குரலை வச்சிக்கிட்டு நீ பாடுனா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம், சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்” என்ற இறுதி வசனம் பார்வையாளர்களால் மிகவும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டது.

இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவராஜ் சுப்ரமணி எழுதி இயக்கியுள்ள “டாணா” திரைப்படத்தை, நோபல் மூவீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்‌ஷ்மி கலைமாமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். எச்.சனாவுல்லா கான், பிரசாந்த் ரவி, எஸ்.சந்தோஷ் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். விஷால் சந்திரசேகர் (இசை), சிவா ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே.(படத்தொகுப்பு), பசார் என்.கே. ராகுல் (கலை), வி.கோட்டி (சண்டைப்பயிற்சி), கு. கார்த்திக் & தனிக்கொடி (பாடல்கள்), கீர்த்தி வாசன் (உடைகள்), சதீஷ் (நடனம்), டி.உதயகுமார் (ஆடியோகிராபி), எஸ்.ராதாகிருஷ்ணன் (இணை இயக்குநர்), ஆர்.மூர்த்தி (வி.எஃப்.எக்ஸ்), தண்டபாணி (தயாரிப்பு நிர்வாகம்), வி.சுதந்திரமணி (நிர்வாக தயாரிப்பு), அருண் கே விஸ்வா (லைன் புரொடியூசர்)ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்

காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும் 3D திரைப்படம்.
இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? – சினேகன்

இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? – சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது,

“ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீங்கன்னு நம்புறேன். தொரட்டி என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப்படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர் தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர் எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது. இந்தப்படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவுசெய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகர் அழகு பேசியதாவது

“1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப்படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை கண்முன் காட்டியது. இந்தக்கதையில் ஒரு லவ் இருக்கிறது. இயக்குநர் மாரிமுத்து கதை திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். அவரின் கதையை தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர். இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்தது பெருமையாக இருக்கிறது. இப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து நீங்க எத்தனையோ படம் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும் என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. இந்தப்பட டீம் இன்னும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை Sdc பிக்சர்ஸ் வெளியிடுவது பெரிய மகிழ்ச்சி என்றார்”

தயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசியதாவது,

“எல்லோரும் வணக்கத்தில் ஆரம்பிப்பார்கள். நான் நன்றியில் துவங்குகிறேன். தொரட்டி பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்தீர்கள். தொரட்டி படம் பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்டப் பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச்சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் உழைத்தோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்த்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும்.இந்தப்படத்தை பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள். இந்த வார்த்தை தான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது. நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறுமாதம் எடுத்துக் கொண்டார்கள். இப்போது படம் எடுப்பதை விட எடுத்த படத்தை வெளியிடுவது தான் பெரிய போராட்டம். இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,

“நிறைய பேர்களுக்கு தொரட்டிப் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படக்குழுவின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை. இந்தப்படம் தான் எனக்கு சேரன் அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பர்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப்படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் படைப்பாக மாற்ற வேண்டும் தொரட்டியைப் போல. ” என்றார்

கதாநாயகன் ஷமன் மித்ரு பேசியதாவது,

“விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்தவன் இந்தப்படத்தை இந்து கருணாகரன் சகோதரியோடு தயாரித்துள்ளேன். இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரோபதியை துகில் உரியும் போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். அப்போது தான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன் தான் இந்தப்படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி. இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்..பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடிவரும். அந்தளவிற்கு என்னோடு பழகி விட்டது. நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப்படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்.” என்றார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். எடிட்டிங் ராஜாமுகமது.

More Articles
Follows