சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சூர்யா – ஜோதிகாவின் மகன்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சூர்யா – ஜோதிகாவின் மகன்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

இவரின் அடுத்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேசாத படிக்காத நடிக்காத என சூப்பராக சொதப்பிய சூர்யா இன்று உலகத்தையே ஜெயிக்கிறான்..; சிலிர்க்கும் சிவகுமார்

இந்த நிலையில் இதில் நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியின் மகன் தேவ் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ஜோதிகா தயாரிக்கிறார்.

Is Suriya’s son Dev debuting as actor in this film?

உங்க மகள் இந்தியா ரோட்ஸுக்கு இந்த படம் பிடிக்கும்..; யாரிடம் சொன்னார் சூர்யா..?

உங்க மகள் இந்தியா ரோட்ஸுக்கு இந்த படம் பிடிக்கும்..; யாரிடம் சொன்னார் சூர்யா..?

சூர்யா தயாரித்து அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை டாக்’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் (அறிமுகம்) மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமார் ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து OH MY DOG உருவாக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை நாய்(யகன்).; ஓ மை டாக் விமர்சனம் 3/5

இந்த படத்தினை நடிகர் சூர்யாவின் “2D என்டர்டெய்ன்மென்ட்” நிறுவனம் தயாரிக்க, சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவனான ஜாண்ட்டி ரோட்ஸ் OMD படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

அவரின் பதிவில்… “வளர்ப்புப் பிராணிகளின் ஆர்வலராக நான் இந்த படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” எனப் பதிவிட்டு இருந்தார்.

டிவீட்டைப் பகிர்ந்துள்ள நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா “நன்றி.. நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்” என நம்புகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

 

Suriya’s reply to former cricketer Jhonty Rhodes

கேஜிஎஃப் ஹீரோ யஷூடன் ஜோடியான ஓவியா..; அட ‘கிராதகா’.. சொல்லவேயில்ல

கேஜிஎஃப் ஹீரோ யஷூடன் ஜோடியான ஓவியா..; அட ‘கிராதகா’.. சொல்லவேயில்ல

ஒரு கன்னட படம் இந்திய திரையுலகையே கதிகலங்க வைத்துள்ளது என்றால் அது ‘கேஜிஎஃப்’ தான்.

பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின் மூலம் யாஷ் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

கேஜிஎஃப் படத்திற்கு முன்பு குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்திருக்கிறார் யஷ். இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் ஒன்று ‘கிராதகா’ என்ற படம். இதில் யஷ் ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் 2011ல் ரிலீசானது.

இப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் விமல் நாயகனாக நடித்து இருந்தார். இதிலும் ஓவியா தான் நாயகி.

ஆக யஷ் தற்போது பிரபலமாகி விட்டதால் அவரின் பழைய படங்களை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

Oviya and Yash acted in Kalavani kannada version

கொடூரமான சைக்கோ ஜெய் & கம்பீரமான காவலர் சுந்தர் சி மோதும் திரைப்படம்

கொடூரமான சைக்கோ ஜெய் & கம்பீரமான காவலர் சுந்தர் சி மோதும் திரைப்படம்

1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை தான் ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம்.

அவ்னி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது.

ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.

கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசை அமைக்கிறார் .

எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . சண்டைப்பயிற்சி ராஜசேகர், திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி.

கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடித்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்த ஜெய்.; ஏன் தெரியுமா.?

முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் கதை இறுதிக்காட்சி வரை சீட் நுனியில் அமர வைக்கும் திரில்லராக உருவாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்.சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் .

இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார்.

“ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா ஜெயில்ல தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா …..” எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது.

விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sundar C and Jai team up for Pattampoochi

‘கொஞ்சம் பேசினால் என்ன.’; கீர்த்தியின் அடுத்த பட டைட்டில் இதுதான்

‘கொஞ்சம் பேசினால் என்ன.’; கீர்த்தியின் அடுத்த பட டைட்டில் இதுதான்

‘தும்பா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்.

இதன்பின்னர் தன் அப்பா அருண் பாண்டியனுடன் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார்.

தற்போது ‘கண்ணகி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இத்துடன் கீர்த்தி நடிக்கும் படத்திற்கு ‘கொஞ்சம் பேசினால் என்ன ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வினோத் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

அன்பே இனிது…; அன்பிற்கினியாள் விமர்சனம் 3.25/5

நாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகும் படம் இந்த படத்தை கிரி மர்ப்பி என்பவர் இயக்குகிறார்.

தீபன் சக்ரவர்த்தி இசையமைக்கிறார். லெனின் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Vinoth Kishan and Keerthi Pandian are coming together for the rom-com Konjam Pesinaal Yenna

கேஜிஎஃப் படத் தயாரிப்பாளருடன் இணையும் சுதா கொங்கரா.; வேற லெவல் காம்போ

கேஜிஎஃப் படத் தயாரிப்பாளருடன் இணையும் சுதா கொங்கரா.; வேற லெவல் காம்போ

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அரிது. அதிலும் தொடர் வெற்றிப் படங்களை கொடுப்பவர் அரிதோ அரிது.

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா.

தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளார் சுதா.

இந்நிலையில் சுதாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியகியுள்ளது.

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

கேஜிஎப் 1 & 2 படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தான் சுதாவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

இதுப்பற்றி அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில்…

‛‛சில உண்மை கதைகள் சொல்லப்பட வேண்டும். எங்களின் அடுத்த படத்தை சுதா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

எங்களது எல்லா படங்களைப் போன்று இந்த படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த படம் கேஜிஎஃப் போன்று பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது.

விரைவில் இப்பட நடிகர்கள் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.

KGF2 producers announce that their next is with director Sudha Konagra

More Articles
Follows