பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.50 கோடியை தாண்டிய – ‘லவ் டுடே’..!

பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.50 கோடியை தாண்டிய – ‘லவ் டுடே’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் வெளியீட்டும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றது.

இப்படம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ‘லவ் டுடே’ திரைப்படம் 11வது நாளில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாகவும்,மேலும் இப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Love Today collections in 50 crore

BREAKING சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்; ஒரே வருடத்தில் 3 பேரை இழந்த நடிகர் மகேஷ்பாபு

BREAKING சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்; ஒரே வருடத்தில் 3 பேரை இழந்த நடிகர் மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமானவர் கிருஷ்ணா.

இவர் தெலுங்குத் திரையுலகில் 350+க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கில் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர்.

மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் கிருஷ்ணா.

இவருக்கு தற்போது 79 வயதாகிறது.

கிருஷ்ணா

நேற்று இவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எனவே செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து மகேஷ் பாபுவின் ரசிகர்களும் கிருஷ்ணாவின் ரசிகர்களும் இந்திய திரையுலகினரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை கிருஷ்ணா காலமானார்.

கூடுதல் தகவல்கள்…

இந்த 2022ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் தன் சகோதரர் ரமேஷ் பாபு என்பவரை இழந்தார் நடிகர் மகேஷ்பாபு. 2022 ஜனவரியில் இறந்தார் ரமேஷ்.

ரமேஷ் பாபு

அண்ணன் ரமேஷ் பாபுவும் நடிகரே. 20க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார். மேலும் மகேஷ் பாபு நடித்த சில படங்களையும் தயாரித்துள்ளார் ரமேஷ் பாபு.

ஓரிரு மாதங்களுக்கு முன் செப்டம்பர் மாதத்தில் தன் தாய் இந்திராவை இழந்தார்.

தற்போது தன் தந்தையை இழந்து உள்ளார் நடிகர் மகேஷ்பாபு. இது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்திரா

Mahesh Babus daddy Actor Krishna passed away

—–

31 May 1942 – 15 Nov 2022 💔🙏
.
.
#SuperStarKrishna #RipSuperStarKrishna #KrishnaGaru #RestInPeace

————–

2022 was Unfortunate and Devastating for Mahesh Babu

08/01/2022 – Brother Ramesh Babu Garu’s death,

28/09/2022 – Mother Indira Devi Garu’s death,

15/11/2022 – Father Krishna Garu’s death!

Stay Strong Mahesh Garu

#RipKrishnaGaru
#SuperStarKrishna
#Krishna #MaheshBabu

‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்.: அரை நிர்வாணமாக பெண்.; சரக்குடன் ஜாலியான கார்த்தி.!

‘ஜப்பான்’ பர்ஸ்ட் லுக்.: அரை நிர்வாணமாக பெண்.; சரக்குடன் ஜாலியான கார்த்தி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய அன்பறிவ் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (குழந்தைகள் தினம்) நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட்டனர். அதில் கையில் சரக்கு பாட்டிலுடன் ஒரு ஷோபாவில் படுத்து இருக்கிறார் கார்த்தி. அவருக்கு அருகில் நிறைய சரக்கு பாட்டில்கள் கிடக்கின்றன.

மேலும் அரை நிர்வாண கோலத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டோ பிரேமில் தங்க நிறத்தில் கார்த்தியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthis Japan movie first look goes viral

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 24ல் இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடித்த ‘ப்ரின்ஸ்’ படம் வெளியானது.

காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர்ந்தது.

ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான்.

அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.

ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் (சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்.

இந்த நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் ‘ப்ரின்ஸ்’ படம்.

தீபாவளி வெளியீடாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது.

நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.

Sivakarthikeyans Prince OTT release date is here

ஆர்.ஜே. பாலாஜி படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ்

ஆர்.ஜே. பாலாஜி படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது.

‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா – கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சலூன்

Hip hop Aadhi next with Vels films

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

Ishari Ganesh won president election of Indian taekwondo federation

More Articles
Follows