அடுத்த சூப்பர்ஸ்டார் எதிரொலி… தனுஷ்-ஜிவி.பிரகாஷ் பனிபோர்..?

அடுத்த சூப்பர்ஸ்டார் எதிரொலி… தனுஷ்-ஜிவி.பிரகாஷ் பனிபோர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cold War Between Dhanush and GV Prakashநேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரை வாழ்த்தும் போது அடுத்த சூப்பர் ஸ்டார் என வாழ்த்தினார் ஜி.வி. பிரகாஷ்.

இது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு லோகோவை கவர் போட்டோவாக வைத்துள்ளார்.

இதற்கு முன்பு வேறு படங்களை வைத்திருந்த தனுஷ், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்துக்கு பிறகுதான் இப்படி மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஜி.வி.பிரகாஷ்க்கு பதிலடி கொடுக்கத்தான் தனுஷ் இப்படி செய்துள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிலநாட்களுக்கு முன்பு, ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை தனுஷ்தான் முதல் இடம் என அறிவித்தபோது, கருத்துக் கணிப்பில் விஜய்தான் முதல் இடம் என ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ஜி.வி. பிரகாஷ்.

அன்றுமுதல் இவர்களுக்குள் பனிப்போர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு கோடி ரஜினி கொடுக்காவிட்டால் போராட்டம்.. விவசாயிகள் அறிவிப்பு..!

ஒரு கோடி ரஜினி கொடுக்காவிட்டால் போராட்டம்.. விவசாயிகள் அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Formers are Against with Rajinikanthகடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம்தேதி காவிரி நதிநீர் வழங்க கோரி கர்நாடக அரசைக் கண்டித்து, ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.

அதன்பின்னர் கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினிகாந்த், நதிநீர் இணைப்பு திட்டத்துக்குன்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என கூறியிருந்தார்.

ஆனால் அதன்பின்னர் ரஜினி கொடுக்கவில்லை.

இந்நிலையில் 14 ஆண்டுகளை கடந்த பின், தற்போது இதுகுறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர் விவசாயிகள் சங்கம்.

இதுகுறித்து சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது

“நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ஒரு கோடி நிதி தருவதாக கூறிய ரஜினிகாந்த் இதுவரை மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ கொடுக்கவில்லை.

தற்போது மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்பட்டு வருகிது.

எனவே, ரஜினி அறிவித்தபடி, நிதியை கொடுக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.

அவர் ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘புரூஸ் லீ’க்காக இணைந்த விஜய்-அஜித்தின் தீவிர ரசிகர்கள்..!

‘புரூஸ் லீ’க்காக இணைந்த விஜய்-அஜித்தின் தீவிர ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Sings song for GVPrakash's upcoming Bruce Leeஇயக்குனர் பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புரூஸ் லீ.

இப்படத்திற்கு இசையமைத்து நாயகனாக நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

இவருடன் கீர்த்தி கர்பன்ந்தா, பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், ராமதாஸ், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இப்பாடலும் சமீபத்தில் ரெக்கார்ட்டிங் செய்யப்பட்டது.

இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாம் அறிந்ததே.

அதுபோல் விஜய்யின் தீவிர ரசிகர் ஜி.வி.பிரகாஷ்.

அஜித் ரசிகரும் விஜய் ரசிகரும் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இதற்கு முன்பே காளை படத்தில் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சரத்குமார் உடல்நிலை பாதிப்பு… ராதிகா விளக்கம்..!

சரத்குமார் உடல்நிலை பாதிப்பு… ராதிகா விளக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Radikaa is Clarified that Sarathkumar Healthமுன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்த தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.

இதனால் ரசிகர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவி ராதிகா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது..

“சரத்குமார் அவர்களுக்கு மாரடைப்பு என்ற செய்தியில் உண்மையில்லை.

சரத் நலமாக இருக்கிறார். Food Poison (உணவு ஒவ்வாமை) மற்றும் தசை பிடிப்பால் சின்ன உபாதை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும்தான்.” என்றார்.

தற்போது நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

’ரெமோ டைட்டில் பாடல் உருவானது எப்படி? அனிருத் விளக்கம்

’ரெமோ டைட்டில் பாடல் உருவானது எப்படி? அனிருத் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh Talks About RemoFirstLook and Title Trackமிகுந்த பரபரப்புகளுக்கிடையில் இன்று மாலை சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இத்துடன் ’ரெமோ என் காதலன்’ என்ற டைட்டில் பாடலும் வெளியாகிறது.

இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது..

’ரெமோ’ கேரக்டருக்கு ஒரு தீம் மியூசிக் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அதை உருவாக்க நினைத்தேன்.

பெரும்பாலும் வெறும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை மட்டும் வைத்துதான் தீம் மியூசிக் இருக்கும்.

அதில் குரல் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற ஐடியாவே தோன்றவே அதை உருவாக்கினோம். தற்போது அது ஒரு பாடலாக ஆகிவிட்டது.

அதுதான் ’ரெமோ’ படத்தின் டைட்டில் பாடல். நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’யை மிஞ்சி தனுஷ் படத்தின் புதிய முயற்சி…!

‘பாகுபலி’யை மிஞ்சி தனுஷ் படத்தின் புதிய முயற்சி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush's Vada Chennai to Made in Three Parts!பொதுவாக ஒரு படம் ஹிட்டடித்தால் மட்டுமே அதன் இரண்டாம் பாகம் வெளிவரும்.

அதற்கு உதாரணமா சிங்கம், காஞ்சனா உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.

ஆனால் முதன் முயற்சியாக பாகுபலி படத்தை உருவாக்கும்போதே இரண்டு பாகங்களாக இயக்குவேன் என ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

இயக்குனர் தன் கதை மீது வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டியது.

தற்போது அதனை மிஞ்சும் வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷின் வடசென்னை படம், மூன்று பாகங்களாக உருவாகிறது.

இதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதில் தனுஷ் உடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை சந்தோஷ் நாராயணன்.

More Articles
Follows