சென்னை வெள்ளப் பின்னணியில் காதலை சொல்லும் *ஹவுஸ் ஓனர்*

சென்னை வெள்ளப் பின்னணியில் காதலை சொல்லும் *ஹவுஸ் ஓனர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

house ownerகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது.

மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்போது, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச்சிறந்த வருடம். 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என நல்ல படங்கள் 2018ஐ அலங்கரித்திருக்கிறது.

இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவை தான், ‘ஹவுஸ் ஓனர்’ கூட விதிவிலக்கு அல்ல. பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களான சமுத்திரகனி மற்றும் பண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி.

அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது. இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூறும்போது, “இத்திரைப்படத்தில் ஆடுகளம் புகழ் கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற , கோலி சோடாவில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்தது என் பாக்கியம்.

வாகை சூட வா தொடங்கி சமீபத்திய ராட்சசன் வரை அவரின் இசைக்கு நான் ரசிகை. மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங்கை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.

சர்கார் கதை சர்ச்சையால் சினிமாவை விட்டு விலகும் முருகதாஸ்.?

சர்கார் கதை சர்ச்சையால் சினிமாவை விட்டு விலகும் முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss questions director Bhagyaraj on Sarkar story controversyமுருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் பட கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சர்கார் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களும் உறுதியளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது…

இந்த கதை விவகாரம் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை பாக்யராஜ் அவர்கள் முழுதாகப் படிக்கவேயில்லை. அவர்கள் படித்தது சாரம்சம் (synopsis) மட்டுமே.

முழு ஸ்க்ரிப்டை பாக்யராஜ் அவர்கள் படித்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.

எனது முழு ஸ்க்ரிப்டை நான் இன்னும் சங்கத்தில் ஒப்படைக்கவும் இல்லை. அதை படித்த பின் தான் அதுவும் இதுவும் ஒரே கதை என்று சொல்ல முடியும். அல்லது எனது படத்தையாவது பார்த்திருக்க வேண்டும்.

நான் அவர்களுக்கு படத்தைக் காட்டத் தயார் என்று சொல்லியும் அவர்கள் பார்க்கவில்லை. படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா? அறிக்கை விடலாமா? எனக்கு பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டார்கள்.

இன்னைக்கு நடக்கவிருக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை வைத்து நான் ஒரு படமாக எடுத்திருக்கிறேன். 11 வருடங்களுக்கு முன்னால் இதே நிகழ்வுகளை வைத்து எப்படி எழுதியிருக்க முடியும்?

இரண்டு கதைகளுக்கும் ஒரே ஒற்றுமை நாயகனின் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே. இந்த ஒரு விஷயம் மட்டும் எப்படி முழு கதையாகும்.

நாயகனின் ஓட்டைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்றவுடன் அடுத்த என்னவாக இருக்கும்? அவர் பெரிய பாடகராகிவிட்டார், குத்துச்சண்டை வீரர் ஆகிவிட்டார் என்றா போகும்? எப்படியும் அடுத்து நாயகன் அரசியலுக்கு வருகிறார் என்பதுதானே கதையாக இருக்கும்.

மேலும் உறுப்பினர்களில் 6 பேர் ரெண்டும் வெவ்வேறு கதை என்று சொல்லியிருக்கிறார்கள். 5 பேர் ஒரே கதை என்றிருக்கிறார்கள். இரண்டு பேர் கருத்து சொல்லவில்லை. பின் எப்படி இது பெரும்பான்மையினரின் கருத்தாக முடியும்?.

எனக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துவிட்டனர். பாக்யராஜ் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு கதைக்கும் ஒரே பொறி தான் என்று சொல்லியிருக்கிறார்.

‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும், அதற்கு பின் வெளியான ‘சின்ன வீடு’ படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

அது மட்டும் ஒரே மாதிரியான சிந்தனை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால் எல்லோரும் விவாதிக்கும் கள்ள ஓட்டு என்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதினால் அது திருட்டு என்கிறார்கள். இது என்ன நியாயம்?

இருதரப்பும் சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவு பணம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

ஏனென்றால் என் தரப்பில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க என் உழைப்பு, என் குழுவின் உழைப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் இதில் வேலை செய்திருக்கிறார்.

எனக்கு வெறுத்துப் போய்விட்டது. சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் என் நண்பர்கள் என்னை ஊக்குவிக்கின்றனர்.போராட தைரியம் கொடுக்கின்றனர்.

விஜய் அவர்களிடம் இந்த பிரச்சினை குறித்து நான் பேசவில்லை. என் பிரச்சினைகள் குறித்து பொதுவாக நான் யாரிடம் பேசுவதும் இல்லை.

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

AR Murugadoss questions director Bhagyaraj on Sarkar story controversy

ட்ராமா-மை களமிறக்கும் மோகன்லால்.; விஜய்யின் சர்காருக்கு சிக்கல்

ட்ராமா-மை களமிறக்கும் மோகன்லால்.; விஜய்யின் சர்காருக்கு சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlals Drama movie will be trouble for Sarkar release at Keralaதமிழகத்தை போலவே விஜய்க்கு கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

அண்மையில் கூட சர்கார் டீசர் வெளியான அன்று தமிழகத்தை விட கேரளாவில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடினர்.

எனவே தீபாவளிக்கு ரிலீசாக உள்ள சர்கார் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிட்டத்தட்ட 3௦௦ தியேட்டர்களில் சர்கார் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மோகன்லால் நடித்துள்ள ட்ராமா படம் வருகிற நவ-1ஆம் தேதியில் ரிலீசாக உள்ளதாம்.

எனவே தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள சர்காருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாத சூழல் உருவாகிவிட்டதாம்.

Mohanlals Drama movie will be trouble for Sarkar release at Kerala

2.0 பட ட்ரைலர் ரிலீசுக்காக சத்யம் தியேட்டரில் சிறப்பு ஏற்பாடுகள்

2.0 பட ட்ரைலர் ரிலீசுக்காக சத்யம் தியேட்டரில் சிறப்பு ஏற்பாடுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Special arrangement at Chennai Sathyam cinemas for 2point0 trailer launch லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் இதன் டிரைலரை நவம்பர் 3ஆம் தேதி தீபாவளிக்கு முன்பே வெளியிட உள்ளனர். இதன் அதிகார்ப்பூர்வ போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

4டி டிஜிட்டல் சவுண்டில் உருவாகியிருக்கும் இதன் ஒலியமைப்பை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதற்காக சத்யம் திரையரங்கில் 4டி டிஜிட்டல் ஒளியமைப்புக்கான கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறதாம்.

இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Special arrangement at Chennai Sathyam cinemas for 2point0 trailer launch

சிம்புவின் டபுள் கெட்டப்பை டோட்டலாக மாற்றும் கௌதம் மேனன்

சிம்புவின் டபுள் கெட்டப்பை டோட்டலாக மாற்றும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon and Simbu to team up for 3rd time story updatesவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முதன்முறையாக சிம்புவை இயக்கினார் கௌதம் மேனன்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.

ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் 3வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகம் என சொல்லப்படுகிறது.

இதில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் சிம்புவை காட்டப் போகிறாராம் கெளதம்மேனன்.

Gautham Menon and Simbu to team up for 3rd time story updates

கதை திருடிய முருகதாஸ்.; பாக்யராஜ் கடிதத்தால் *சர்கார்* ரிலீசில் சிக்கல்.?

கதை திருடிய முருகதாஸ்.; பாக்யராஜ் கடிதத்தால் *சர்கார்* ரிலீசில் சிக்கல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Story controversy Murugadoss and Bhagyaraj clash issueஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள திரைப்படம் சர்க்கார்.

வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று இந்த படத்தை திரைக்கு கொண்டு வரவிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
வெளிநாட்டில் வாழும் தொழில் அதிபரான விஜய், தேர்தலில் ஓட்டு போட தமிழ்நாடுக்கு வருகிறார். அவருடைய ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடையும் விஜய், அரசியல்வாதிகளை எதிர்த்து களமிறங்குகிறார். அவர் அமைக்கும் சர்காரே இதன் ஒன்லைன்.

இந்தக் கதை தன்னுடையது எனவும் செங்கோல் என்ற தலைப்பில் இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் எனவும் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு அக்டோபர் 30ஆம் தேதி வரை தடையில்லை எனவும், வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சர்கார் கதையும், செங்கோல் கதையும் ஒன்றுததான்” என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் என்கிற முறையில் கே.பாக்யராஜ் அதிகாரபூர்மாக கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடித்தில் அவர் எழுதியிருப்பதாவது:

தெளிவாக விவாதித்து, ஒரு சிலர் கருத்து வேறுபட்டிருந்தாலும், மெஜாரிட்டி மெம்பர்களின் ஒப்புதலின் பேரில் தெளிவாக செங்கோல் என்ற கதையும், சர்கார் என்ற கதையும் ஒன்றே என்று முடிவு செய்தோம்.

இக்கடிதத்தின் மூலம் சங்கத்தின் உறுப்பினரான வருண் என்கிற ராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 21.11.2007ம் ஆண்டு பதிவு செய்த செங்கோல் என்ற கதையும் சர்கார் என்ற கதையும் ஒன்றே என்ற முடிவை சங்கம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை வருண் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இது சர்கார் படத்துக்கு எதிரான ஆதாரமாக கூறப்படுகிறது. எனவே சர்கார் பட ரிலீசின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Sarkar Story controversy Murugadoss and Bhagyaraj clash issue

More Articles
Follows