இளையராஜா கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு.. தூர நின்று பார்ப்பேன் – ரஞ்சித்

இளையராஜா கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு.. தூர நின்று பார்ப்பேன் – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார்.

யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தென்மா இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது…

“நட்சத்திரம் நகர்கிறது” காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம்.

ஆணும் பெண்ணும் சந்திக்கும் பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது.

அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது.

இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு.
காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை.

இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் “நட்சத்திரம் நகர்கிறது”.

இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும்,
திரு நங்கையின் காதலைப் பற்றியும் பேசுகிறோம்.

பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக் கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம்.

ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்கபேசுகிறோம்.

நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு.

இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா ? என்கிற கேள்விக்கு…

எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்யமுடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை.

இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது.

எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது.
ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான். என்றார்.

“நட்சத்திரம் நகர்கிறது” படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும்.

என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்று பா இரஞ்சித் கூறினார் .

பாடல்கள் உமாதேவி , அறிவு எழுதியிருக்கிறார்கள்.

செல்வா RK படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.

நடனம் சாண்டி

சண்டைபயிற்சி – ஸ்டன்னர் சாம்.

ஆடைவடிவமைப்பு – அனிதா ரஞ்சித். ஏகாம்பரம்,

தயாரிப்பு – யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மனோஜ் லியோனல்ஜாசன்.

இணை தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித்.

பி ஆர் ஓ – குணா.

ilaiyaraaja is genius says Director Pa Ranjith

சீயான் விக்ரம் மற்றும் கமல் படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித்

சீயான் விக்ரம் மற்றும் கமல் படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் இந்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இதனையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் ரஞ்சித்.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயார் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகுதான் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்க ஆரம்பிப்பேன் என தெரிவித்துள்ளார் ரஞ்சித்.

அதே சமயம் தற்போதே கமல் படத்திற்கான வேலைகளை ஒரு பக்கம் தொடங்கி விட்டதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

Director Ranjith gave updates about Kamal movie

டிஸ்னி ஹாட்ஸ்டார் உடன் கைகோர்க்கும் ராக் ஸ்டார்.; அனிருத்தின் இசை பயணம்

டிஸ்னி ஹாட்ஸ்டார் உடன் கைகோர்க்கும் ராக் ஸ்டார்.; அனிருத்தின் இசை பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்ஸ்டார் அனிருத் இந்தியாவில் தனது முதல் பிரம்மாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாஸ்டார் உடன் இணைந்து நடத்துவதாக அறிவித்துள்ளார்

சென்னை (ஆகஸ்ட் 19, 2022) – சினிமா துறையில் தனது 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் – ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ எனும் நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிகளின் தேதிகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், செப்டம்பர்-அக்டோபர் 2022 மாதங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த மியூசிக் கான்செர்ட் கச்சேரிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை நிகழ்ச்சியானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், முழு கச்சேரியும் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

இது இந்தியாவில் மிகப்புதுமையான முதல் வகை அனுபவமாக இருக்கும். மற்ற நகரங்களைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள், ராக்ஸ்டார் அனிருத்தின் தீவிர ரசிகர்கள் ஆகியோரும், தங்கள் டிஜிட்டல் சாதனங்கள் மூலம் நேரலையில் இந்த இசை நிகழ்ச்சியை காணும் அனுபவத்தை பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சி மிக உயர்ந்த தரத்தில், சிறந்த காட்சி மற்றும் ஒலி தெளிவுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், மில்லியன் கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றவர்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய இசை நிகழ்ச்சி குறித்தான தகவலை பகிர்ந்தார், இது ரசிகர்களை உற்சாக எல்லைக்கு அழைத்து சென்றது. அனிருத்தின் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Anirudh announces his first-ever Indian concert tour

‘கவர்ச்சி கட்டழகி’ சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படம் பார்ட் 2 ரெடியாகிறது

‘கவர்ச்சி கட்டழகி’ சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படம் பார்ட் 2 ரெடியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் பெண்களைக் கூட தன் காந்த கண்ணழகால் கவர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

1980களில் இவரது கால்சீட்டுக்காகவே ரஜினி & கமல் படங்கள் காத்திருந்தன என்று சொன்னால் அது மிகையல்ல.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்னர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்க தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முயன்றனர். ஆனால் தமிழில் சாத்தியப்படவில்லை. எனவே ஹிந்தி சினிமா முந்திக் கொண்டது.

ஹிந்தியில், ’தி டர்டி பிக்சர்’ என்ற பெயரில் உருவான படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார் வித்யாபாலன்.

2011ல் வெளியான இந்தப் படத்தை மிலன் லுத்ரா இயக்கி இருந்தார்.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

முதல் பாகத்தைத் தயாரித்த ஏக்தா கபூர் இதையும் தயாரிக்கிறாராம்.

இதிலும் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிப்பாரா? அல்லது வேறு யாரேனும் நடிப்பார்களா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தி டர்டி பிக்சர்

Silk Smitha’s biopic Part 2 is getting ready

கடவுளே பெண் : 25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை அள்ளிய ‘சஷ்தி’

கடவுளே பெண் : 25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை அள்ளிய ‘சஷ்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது.

தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி’ குறும்படம்..

தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்..

இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு.

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

டைரக்சன் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்சன் கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும் இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூடு பீட்டர் டேமியன்.

இந்த குறும்படத்தை https://apple.co/3PpIXnJ என்கிற லிங்க் மூலம் iTunesலும் https://bit.ly/3JXXoOD என்கிற லிங்க் மூலம் Google Playயிலும் காணலாம்.

சஷ்தி

‘Shashti’ bagged 59 awards in 25 film festivals

போலீசுக்கு வக்காளத்து வாங்கிய ரஜினியே இப்போ என்ன சொல்றீங்க.? – இயக்குனர் லெனின் பாரதி கேள்வி

போலீசுக்கு வக்காளத்து வாங்கிய ரஜினியே இப்போ என்ன சொல்றீங்க.? – இயக்குனர் லெனின் பாரதி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

அப்போது அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் நடைபெற்று வந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

போராட்டங்கள் 100வது நாளை எட்டியும் மக்களின் உணர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

எனவே தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர்.

பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

(இந்த துப்பாக்கி சூட்டுக்கு அந்த தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்பட்டது)

துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். (அவர்கள் இந்நாள் வரை பாதிப்பில் உள்ளனர் என்பதை முத்துநகர் படுகொலை படம் சித்தரித்து இருந்தது.)

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை காண சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். எனவே தான் இந்த கலவரம் உருவானது எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.

எனவே விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் முக. ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

இந்த அறிக்கையில்..

“போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல்.

தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடினர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தயாரித்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விசாரணை அறிக்கையை பார்த்த பின்பு ரஜினிகாந்த் என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

“தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரம் செய்தார்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்தினார்கள், காவல்துறையை தாக்கினார்கள் என்று காவல்துறைக்கு வக்காளத்து வாங்கிய @rajinikanth அவர்கள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கைக்கு பின்பு என்ன சொல்லப்போகிறார் https://t.co/xuniruzn6T https://t.co/RenMsXia6m

Director Lenin Bharathi question to Actor Rajinikanth

More Articles
Follows