அஜித்துக்கு ஸ்டைலிஷ் லுக் கொடுத்த வெற்றி

அஜித்துக்கு ஸ்டைலிஷ் லுக் கொடுத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith styleஜீவா நடித்த தெனாவெட்டு படம்தான் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமியின் முதல் படம்.

இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் பணி புரிந்த இவர், இயக்குனர் சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டார்.

அஜித்தின் வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து தல 57 படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.

அண்மையில் தல 57 படத்தின் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

அப்போது அஜித்துக்கு ஸ்டைலிஷ்ஷான லுக்குகளை கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பத்தே படம்தான்; அதற்குள் பவர் காட்டும் ‘ரெமோ’ ஹீரோ

பத்தே படம்தான்; அதற்குள் பவர் காட்டும் ‘ரெமோ’ ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyanகடந்த 2012ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மெரினா படம் ரிலீஸ் ஆனது.

தற்போது 4 ஆண்டுகளில் பத்து படங்களை நெருங்கியுள்ளார்.

இவரது 10வது படமான ரெமோ நாளை மறுநாள் அக். 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அதற்குள் டாப் ஹீரோக்களின் இடத்தை நெருங்கி வருகிறார்.

பெரும்பாலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்குதான் அதிகாலை காட்சி திரையிடப்படும்.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்து விட்டார்.

சென்னையிலுள்ள பிரபலமான வெற்றி, ராகேஷ் உள்ளிட்ட திரையரங்குகளில் காலை 6 மணிக்கு ரெமோ படம் திரையிடப்படுகிறது.

இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த திரையரங்கில் ரஜினி நடித்த கபாலி படத்தின் அதிகாலை காட்சியை சிவகார்த்திகேயன் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீனிலும் பட்டைய கிளப்பும் ‘பாகுபலி 2’

பாரீனிலும் பட்டைய கிளப்பும் ‘பாகுபலி 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhas rana bahubaliஇந்திய சினிமாவையே தன் படைப்புகளால் பிரமிக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.

இவரது இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஆண்டு வெளியானது.

இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு வசூல் செய்து, உலக சினிமாவேயே திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தற்போதை இதன் வியாபாரம் பட்டைய கிளப்ப தொடங்கிவிட்டது.

இதன் வட அமெரிக்க தியேட்டர் உரிமை மட்டும் ரூ.44 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

வட அமெரிக்காவில் உள்ள கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் பாகுபலி 2 படத்தை 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசரை வாபஸ் வாங்கிய விஜய் ஆண்டனி; நாளை அடுத்த சைத்தான்

டீசரை வாபஸ் வாங்கிய விஜய் ஆண்டனி; நாளை அடுத்த சைத்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saithan teaserவிஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

வரவேற்பை போலவே, எதிர்ப்பும் கிளம்பியது.

எனவே தற்போது பேஸ்புக், யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த டீசரை திடீரென நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

‘சைத்தான்’ டீசரில் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள் இடம் பெற்று இருந்தது.

இது சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மனவருத்தம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்தேன்.

எனவே, புதிய வரிகளுடன் நாளை அக்டோபர் 5ஆம் தேதி மாலை 7 மணிக்கு சைத்தான் புதிய டீசரை வெளியிட உள்ளேன்” என்றார்.

எவருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற விஜய்சேதுபதி

எவருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathi imagesநம்ம ஹீரோ நடிச்ச படம் இந்த வருஷமாச்சும் வரும்? வராதா? என பல நடிகர்களின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு ஒரு படம், போய் மாதத்திற்கு இரண்டு படம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி இவரது நடிப்பில் தர்மதுரை படம் வெளியானது.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு (செப். 23) ஆண்டவன் கட்டளை வெளியானது.

இவை இரண்டும் இன்றும் வெற்றிகரமாக சத்யம் சினிமாஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு வார இடைவெளியில் அக்டோபர் 7ஆம் தேதி றெக்க வெளியாக உள்ளது.

இந்த படமும் சத்யம் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே ஒரே நடிகரின் 3 படங்களும் ஒரு திரையரங்க வளாகத்தில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

றெக்க இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. விஷால்? ஜெயம் ரவியா?

றெக்க இயக்குனரின் அடுத்த பட ஹீரோ.. விஷால்? ஜெயம் ரவியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal jayam raviவா டீல் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தை இயக்கினார் ரத்தினசிவா.

இப்படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் ரத்தினசிவா.

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளனர்.

இதில் விஷால் அல்லது ஜெயம் ரவி நாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows