அஜித் – சூர்யா ஆகியோருடன் சேர்த்து 1000 படங்களுக்கு நடனமைத்த சம்பத்ராஜ் மரணம்

அஜித் – சூர்யா ஆகியோருடன் சேர்த்து 1000 படங்களுக்கு நடனமைத்த சம்பத்ராஜ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் 1000+க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சம்பத்ராஜ்.

இவருக்கு தற்போது வயது 54் ஆகிறது.

இவர் நடன இயக்குனராக பணிபுரிந்த படங்களில் சில…

சரிகமபதநி
சின்ன ஜமீன்
மதுமதி
அமராவதி
காதல் கோட்டை
வான்மதி
நம்ம அண்ணாச்சி
என் சுவாச காற்று
ஹானஸ்ட் ராஜ்
ஊட்டி
அதர்மம்
உள்ளே வெளியே
புள்ள குட்டிக்காரன்
உயிரிலே கலந்தது
கோலங்கள்
சாது
காதலே நிம்மதி
மகா பிரபு
மக்களாட்சி

இந்த நிலையில் சம்பத்ராஜ் உடல்நல குறைவால் காலமானார்.

அவரின் இறுதி மரியாதை இன்று 4.5.23 மாலை 3 மணியளவில் No 34 கனகதாரா நகர் மெயின்ரோடு வளசரவாக்கம் சென்னையில் நடைபெறுகிறது

தொடர்புக்கு
Harish kumar 9025706720

Ramanaji 8015767737

choreographer Sambhathraj paseed away

தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்தோம்.. கற்றோம்..; மனோபாலா பற்றி ராதிகா உருக்கம்

தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்தோம்.. கற்றோம்..; மனோபாலா பற்றி ராதிகா உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபாலா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோ பாலாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 10 நாட்களாக அவரது இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.

மனோபாலா

இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா மற்றும் பிற கோலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்”. என்று பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா உடன் இருக்கும் பழைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மனோபாலா

அதில், “நான் மிகவும் மனவேதனை அடைந்தேன், இன்று காலை தான் போன் செய்து அவர் எங்கு சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன். நம்பமுடியாத அதிர்ச்சி. நடிப்பு ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம், நாங்கள் இருவரும் கற்றுக்கொண்டோம், சிரித்தோம், சண்டையிட்டோம், ஒன்றாக சாப்பிட்டோம், பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம், அவர் ஒரு திறமையான நபர், எல்லா சூழ்நிலைகளிலும் நன்றாகப் பழகினார். அவரை மிஸ் பண்ணுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோபாலா

மேலும், ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

https://www.youtube.com/shorts/cfSNblfLEts

Radhika emotions about friendship with Manobala

JUST IN சரக்குதான் எமன்.. சரக்கடிச்சா.?!மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் பேச்சு

JUST IN சரக்குதான் எமன்.. சரக்கடிச்சா.?!மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனருமான மனோபாலா நேற்று மே 3ம் தேதி மதியம் காலமானார். இவரது மறைவை அடுத்து பல்வேறு திரையுல பிரபலங்கள் இரங்கலும் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, உதயநிதி சரத்குமார், சுந்தர் சி, பார்த்திபன் உள்ளிட்ட பல கலைஞர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4ம் தேதி நடிகரும் இயக்குனருமான மன்சூர் அலிகான் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பேட்டி அளித்தார்.

அவர் பேசும்போது.. “மனோபாலா ஒரு சிறந்த கலைஞர். அவர் சினிமாவில் விட்டு சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

அவருடன் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற படத்தில் விஜயகாந்த் உடன் நடித்திருந்தேன்.

நடிகர் சங்கம் இயக்குனர் சங்கம் எழுத்தாளர்கள் சங்கம் என சினிமா துறையில் பல்வேறு சங்கங்களில் உறுப்பினராக இருக்கிறார் மனோபாலா. சங்கத்தில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தூதுவராக அவரை அனுப்புவார்கள்.்அவர் சமாதானம் செய்து விடுவார்.

அவர் ஒரு சிறந்த சமையல்கலைஞர். அவர் சைவ உணவு சாப்பிட்டாலும் எங்களுக்கு அசைவ உணவை செய்து கொடுப்பார்.

அவரின் வத்த குழம்பு சூப்பராக இருக்கும். நம் வீட்டில் கூட அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்.

சினிமாவை பொருத்தவரை பல்வேறு கலைஞர்களுக்கு எமனாக அமைகிறது சரக்கு தான். குடிப்பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வெறும் சரக்கு மட்டும் சாப்பிடாதீர்கள் சைடிஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்” என பேசினார் மன்சூர் அலிகான்.

இன்று ஏப்ரல் 4ம் தேதி காலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் மனோபாலா உடல் தகனம் செய்யப்படுகிறது.

Mansoor Ali Khan speech after paid tribute to mano bala

‘தி கேரள ஸ்டோரி’ உண்மையா.? அப்படின்னா ரூ 1 கோடி தர்றேன்.; சவால் விடும் அமீர் பட இயக்குநர்

‘தி கேரள ஸ்டோரி’ உண்மையா.? அப்படின்னா ரூ 1 கோடி தர்றேன்.; சவால் விடும் அமீர் பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருத்தாழம் மிக்க படங்களை உருவாக்கி வெளியிட்டு வரும் கேரள மாநிலத்தில் தான் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் விதமான படங்களும் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது ‘தி கேரள ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று வரும் மே-5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதம் மாற்றி, பின்னர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தப்படத்திற்கு கண்டனங்களும் படத்தை வெளியிட தடை கோரியும் நாடெங்கிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் தமிழில் வெளியான ஆன்டி இண்டியன் பட தயாரிப்பாளரும், அமீர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் இயக்குநருமான ஆதம் பாவா இந்த படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டும் சில அமைப்புகள் பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த ‘தி கேரள ஸ்டோரி’.

ட்ரைலரில் கூறப்பட்டுள்ளது போல கேரளாவைச் சேர்ந்த 32,000 பேர் இஸ்லாம் மதத்திற்க்கு மாறி ஐ எஸ் ஐ எஸ் ISIS குழுவில் சேர்ந்ததற்கான ஆதாரத்தை படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கொடுத்தால் அவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கிறேன்” என்று சவால் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஆதம் பாவா..

அமீர்

Is ‘The Kerala Story’ true? If so, I will get Rs 1 crore.; Film Director Aamir

வந்தியதேவனை இயக்கும் அருள் மொழிவர்மன்.; ஜெயம் ரவி – கார்த்தி மாஸ் கூட்டணி

வந்தியதேவனை இயக்கும் அருள் மொழிவர்மன்.; ஜெயம் ரவி – கார்த்தி மாஸ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022-ல் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியானது. இந்த படம் ஜெயம் ரவிக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனையடுத்து இந்த ஆண்டு 2023 மார்ச் மாதத்தில் ‘அகிலன்’ திரைப்படம் வெளியானது இந்தப் படம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியானது.

இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

தற்போது இவரது கைவசம் கிட்டத்தட்ட 4-5 உள்ளன. அதில் ‘சைரன்’ மற்றும் ’இறைவன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்ததாக ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவை இல்லாமல் தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்க உள்ளார்

இத்துடன் அறிமுக இயக்குனர் ஒருவரின் பேண்டஸி படத்திலும் ரவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட படங்கள் அனைத்தும் ஜெயம் ரவி நடிப்பில் உருவானது. இது இல்லாமல் ஒரு படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் ரவி.

அண்மையில் சில கதைகளை நடிகர் கார்த்தியிடம் சொன்னதாகவும் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் வந்திய தேவனை இயக்கும் அருள்மொழிவர்மன் என்ற அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியம் இல்லை.

காத்திருப்போம் ரசிகர்களே…

Jayam Ravi to direct Actor Karthi for his next film

சூட்டிங்கில் உயிரிழந்த லைட்மேன் குடும்பத்திற்கு லட்சங்களை வழங்கிய ‘வெப்பன்’ புரொடியூசர்

சூட்டிங்கில் உயிரிழந்த லைட்மேன் குடும்பத்திற்கு லட்சங்களை வழங்கிய ‘வெப்பன்’ புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் 12 லட்சம் ரூபாயை ‘வெப்பன்’ படப்பிடிப்பின் போது தற்செயலாக இறந்த லைட்மேன் எஸ்.குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

மறைந்த எஸ்.குமாரின் மனைவி ஜூலியட், அவரது தாயார் மற்றும் அவரது குழந்தைகள் காசோலையை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர், நிர்வாக தயாரிப்பாளர் ரிஸ்வான், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, லைட் யூனியன் தலைவர் செந்தில், மேலாளர் கந்தன் மற்றும் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் ‘வெப்பன்’ படக்குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது இரங்கலைத் தெரிவிக்கையில்…

“எஸ் குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது.

தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்தவ ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில் ஒரு சிறு பகுதியாக இருக்க விரும்பினேன்.

அதனால் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்தேன். எஸ் குமார் என்றென்றும் என் பிரார்த்தனையில் இருப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன்.

மேலும் உறுதியான நம்பிக்கையுடனும், சக்தியுடனும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதைக் காண விரும்புகிறேன்” என்றார்.

’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

‘Weapon’ producer donates 12 lakhs to Lightman’s family who died on set

More Articles
Follows