தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீமான், சின்ன ஜமீன் உள்ளிட்ட படங்களில் நவரச நாயகன் கார்த்திக் & சுகன்யா ஜோடி இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது 15 வருடங்களுக்கு பிறகு ‘தீ இவன்’ படத்திற்காக மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான்விஜய், சரவனசக்தி, இளவரசு, ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது.
இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா… பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள்.
ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார்.
ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
Karthik and Suganya starrer Thee Ivan movie release updates