அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

அஜித் படத்தலைப்பை ஆல்டர் செய்து உருவாகியுள்ள காதல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Devakottai kadhal movie stills (23)அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் காதல் கோட்டை. இந்த படத்தலைப்பை கொஞ்சம் ஆல்டர் செய்து தேவகோட்டை காதல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன், மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்

கதை – சீனு
திரைக்கதை – ARK, PPA ரஹ்மான்
பாடல்கள் – காதல்மதி
இசை – ஜோனபக்தகுமார்
எடிட்டிங் – இப்ரு
ஸ்டண்ட் – ஜீரோஸ்
நடனம் – ராஜேஷ்
ஒளிப்பதிவு – ரஞ்சித் ரவி
இணை தயாரிப்பு – பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே
எழுதி இயக்குகிறார் – A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு.

படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.

Deva kottai kadhal movie news updates

விஜயகாந்த்-அர்ஜூன்-அஜித் படங்களை இயக்கிய மகாராஜன் மகன் நடிகராகிறார்

விஜயகாந்த்-அர்ஜூன்-அஜித் படங்களை இயக்கிய மகாராஜன் மகன் நடிகராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Maharajan son Viswanath becomes heroவிஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன்.

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன், கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.

வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும் இயக்க உள்ளார்.

இதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை மிக மிக கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன்.

விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன்.

பிரபல கதாநாயகி, பிரபல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

Director Maharajan son Viswanath becomes hero

பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்

பாடகி சைந்தவியின் பேரன்பை பெற்ற தெய்வக் குழந்தைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Autism affected kids are Gods childrens says singer Saindhaviகடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.

இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம்.

அந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க… வழிதவறிப்போனான்.

ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையைப் புரிந்துக் கொள்ளவில்லை.

இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்த பிள்ளை அங்கும் வழி கேட்டு சென்றுள்ளது.

என்றாலும் அவனின் நிலை அவனை புறக்கணிக்க வைக்கவே பயன்பட்டது.
இறுதியாக, களைத்துப் போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனான்.

அந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். ஒரு சிறு கவனக்குறைவும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக சிதைத்துவிடும் என்று அந்த சம்பவம் இது போன்று குழந்தை கொண்டவர்களுக்கு உணர்தியது.

இதைத் தெரிந்து கொள்ளாத, உணராத பெற்றோர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவனத்தையும், குழந்தைகள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்தவும், இந்த சமூகம் அவர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தொடங்கியதுதான் இந்த பேரன்புடன் என்ற குறும்படம் என்றார் திருமதி ராதா நந்தகுமார்.

இவர் தயாரிக்க, மணி என்பவர் இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட. நிவாஸ் புதிய அறிமுகம். கதா நாயகனாக நடித்துள்ளார்.

ஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர்.

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 2௦ வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் திருமதி ராதா.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகள் குறித்த புரிதலை உருவாக்குகிறார்.

இதுகுறித்து ஹம்மிங் பேர்ட்ஸ் ஆசிரியர் பயிற்சி மையம் உரிமையாளருமான ராஷ்மியிடம் பேசியபோது ஒரு சிறிய கனவாக இருந்த விஷயம் சிறகுகள் பெற்றது. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதற்கான சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர் தான்” என்கிறார் ராதா நந்தகுமார்.

மாற்றம் என்பது மெதுவான நிகழ்வு தான்.. ஆனால் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை உறுதியாக நம்புகிறார் திருமதி ராதா நந்தகுமார்.

சாதாரண மனிதர்கள் போல கேட்டு அதை உடனடியாக உணரும் நேரக் கோட்பாடுகளில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது.

உதாரணமாக, சதாரண மனிதர்களாகிய நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும்.

ஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும். எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும்.

அப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வரும்? அந்த எரிச்சல்தான் அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது. அவர்களையும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது.

இது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் முடியும்.

அந்தவகையில் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களை வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான விழாவாக அதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்..

இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

பின்னணி பாடகி சைந்தவி பேசும்போது…

“எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்..

ஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்.. இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதை விட, தெய்வக் குழந்தைகள் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

அவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப்போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும்..
இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.

“இந்தக் குறும்படம் உங்களை கண்கலங்க வைக்காது.. மாறாக ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மனிதர்களை உங்களில் ஒருவராக சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும், அதற்கான சாத்தியங்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்தும்” என்கிறார் ‘பேரன்புடன்’ குறும்படத்தின் இயக்குநர் SP மணி.

விரைவில் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த டீம்.

இயக்குநர் ராம்-ன் வேண்டுகோளுக்கு இணங்க இக்குறும்படத்தின் பெயர் பேரன்புடன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Autism affected kids are Gods childrens says singer Saindhavi

autisam vasanth

ரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் மாநாட்டை ரத்து செய்தார் தமிழருவி மணியன்

ரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் மாநாட்டை ரத்து செய்தார் தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilaruvi Manian cancelled Rajini Conference meet at 20th May at Coimbatoreதமிழகத்தின் முதல்வராக ரஜினிகாந்தை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்த உள்ளதாக அறிவித்தார்.

இந்த மாநாடு கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் மே 20-ம் தேதி நடைபெறவிருந்தது.

ஆனால் தற்போது அந்த மாநாடு கைவிடப்பட்டதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

அது ஏன்? என்பது பற்றி அவர் அளித்துள்ள விளக்கம் இதோ…

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக இழைத்திருக்கும் மிக மோசமான துரோகத்தை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றாகக் கூடிக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில், அ.தி.மு.க. ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதும், தி.மு.க. தனியாக வரும் 5ஆம் தேதி கடையடைப்பு நடத்துவதும், பா.ம.க. 11ந் தேதி கடையடைப்புக்குத் தனியாக அழைப்பு விடுத்திருப்பதும், தே.மு.தி.க.வும் த.மா.கா.வும் திருவாரூரிலும், திருச்சியிலும் தனித்தனியாகப் போராட்டங்களில் ஈடுபடுவதும், பிளவு பட்டிருக்கும் வணிகர் சங்கங்கள் கடையடைப்புக்கு நாள் குறிப்பதும் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தும் விவேகமற்ற செயலே அன்றி வேறில்லை.

தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் கூட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே மேடையில் ஒரே குரலாக மத்திய அரசுக்கு எதிரான அழுத்தத்தை உருவாக்கத் தயாராக இல்லை என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.

எந்தப் பிரச்சனையிலும் அவரவர் கட்சியின் எதிர்கால நலனை முன்னிறுத்தியே செயற்படும் மிக மோசமான சுயநலம் சார்ந்த அணுகுமுறையிலிருந்து நம் அரசியல்வாதிகள் எள்ளளவும் விடுபடுவதாக இல்லை.

உண்மையில் காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கம் இருந்தால் காவிரி டெல்டா விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களுக்குப் பின்னால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அடையாளத்தைத் துறந்து ஒன்றுபட்டு போர்க்குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

எந்த அமைப்பும் தனிதனியாகப் போராடுவதை முதலில் நிறுத்த வேண்டும். காவிரிப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் அரசியல் காழ்ப்புணர்வுடன் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற அரசியல் அணுகுமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

கர்நாடகத்தின் ஆணவப் போக்கிற்கு எதிராகப் போராடும் நாம் பொதுப் பிரச்சனையில் எப்படி கட்சி வேலிகளைக் கடந்து மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்பதை அவர்களிடம் முதலில் பாடமாகக் கற்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஆறுகளனைத்தும் தங்கள் அடையாளத்தைத் துறந்து, தமிழினம் என்ற ஒரே அடையாளத்துடன் எட்டு கோடி மக்களும் ஒன்றாகக் குரல் கொடுப்பதன் மூலமே எந்தப் பிரச்சனைக்கும் நாம் உண்மையான, நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான போராட்டம் என்று தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது.

மாநாட்டை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி, வழங்கியவர்களிடமே திரும்பத் தரப்பட்டு விடும். என தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian cancelled Rajini Conference on 20th May at Coimbatore

விபத்தில் பலியான கர்ப்பிணி உஷா குடும்பத்துக்கு நிதி; சொன்னதை செய்தார் கமல்!

விபத்தில் பலியான கர்ப்பிணி உஷா குடும்பத்துக்கு நிதி; சொன்னதை செய்தார் கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM President Kamalhassan donated Rs 10lakhs to Late Mrs Usha familyகடந்த மார்ச் மாதம் ஒரு நாள் நள்ளிரவு…

டூவிலரில் ஹெல்மெட் போடாமல் சென்ற குற்றத்திற்காக ராஜா மற்றும் உஷா தம்பதியினரை போலீஸ் துரத்தினர்.

அப்போது போலீஸ் அவர்களின் பைக்கை எட்டி உதைக்க, இருவரும் கீழே விழ கர்ப்பிணி பெண் உஷா பலியானார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதே அந்த குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்க போவதாக அறிவித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதன்படி இன்று திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு சென்ற கமல், அந்த குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி அளித்தார்.

உஷாவின் கணவருக்கு ரூ. 5 லட்சத்தையும், உஷாவின் தாயாருக்கு ரூ. 5 லட்சத்தையும் கொடுத்து உதவினார்.

MNM President Kamalhassan donated Rs 10lakhs to Late Mrs Usha family

MNM President Kamalhassan donated Rs 10lakhs to Late Mrs Usha family

ஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்

ஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj talks about his next movie with Rajinikanthசாப்ட்வேர் என்ஜினீயரான கார்த்திக் சுப்பராஜ் வேலை பார்த்துக் கொண்டே குறும்படங்களை இயக்கி வந்தார்.

பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, இதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

நான்கு படங்களை மட்டுமே இயக்கிய இவருக்கு தற்போது ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினியை இயக்குவது குறித்து அவர் கூறியதாவது…

“ரஜினி சாரின் படத்தை இயக்க வேண்டும் என்பது எல்லா இயக்குனருக்கும் உள்ள ஆசை.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.

அவருடன் பணி புரிய உள்ள நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ரஜினி சார் விரைவில் அரசியல் களத்தில் முழு கவனம் செலுத்த உள்ளார். எனவே என் படத்தின் பணிகளை நான் இந்தாண்டுக்குள் முடித்து விடுவேன்.

ரஜினி சாரை இயக்க நான் பயப்படவில்லை. கொஞ்சம் பதட்டம் உண்டு. ஆனால், ஒரு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்பது நிச்சயம்” என்றார்.

Karthik Subbaraj talks about his next movie with Rajinikanth

More Articles
Follows