மீண்டும் ஆலுமா டோலுமா; ஆட ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

மீண்டும் ஆலுமா டோலுமா; ஆட ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith aaluma dolumaசிவா இயக்கிய வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் கடந்த 10 மாதங்களாக படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலை இன்றும் நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அனிருத் இசையமைத்த இப்பாடல் பட்டி முதல் சிட்டி வரை ஹிட்டாகியது.

இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதே அஜித்-சிவா-அனிருத்-கல்யாண் கூட்டணி மீண்டும் அதே போன்ற பாடலுக்கு இணையவிருக்கிறதாம்.

சிவா இயக்கும் தல 57 படத்தில்தான் இப்பாடல் இடம்பெறுகிறது.

சூப்பர் ஸ்டார் இடத்தில் சத்யராஜ்; ஜோடியானார் அமலாபால்

சூப்பர் ஸ்டார் இடத்தில் சத்யராஜ்; ஜோடியானார் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulஅம்மா கணக்கு, வட சென்னை படங்களை தொடர்ந்து தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி வருகிறார் அமலாபால்.

தற்போது முருகவேல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லைலா ஓ லைலா என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் நடிக்க, அமலா பாலே இங்கும் நடிக்கிறார்.

பிசினஸ்மேன் மற்றும் உளவுத்துறை ஏஜெண்டாக என இரு வேடங்களில் சத்யராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க ஜோஷி இயக்கவுள்ளார்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

ஜி.வி. பிரகாஷுடன் கைகோர்க்கும் அட்லி

ஜி.வி. பிரகாஷுடன் கைகோர்க்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atlee gv prakashஇசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை விட நடிகர் ஜி.வி. பிரகாஷ் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள புரூஸ் லி படத்தை பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசரை இன்று 5 மணியளவில் அட்லி வெளியிடவிருக்கிறாராம்.

விக்ரமின் ‘இருமுகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

விக்ரமின் ‘இருமுகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumugan vikramஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்த இருமுகன் நேற்று வெளியானது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமின் படம் வருவதாலும், இரு வேடங்களில் அவர் நடித்துள்ளதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் விக்ரமின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் சென்னையில் 60 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.

செங்கல்பட்டில் ரூ.1.22 கோடியும், கோவையில் சுமார் 80 லட்சமும் வசூல் செய்துள்ளது.

தமிழக அளவில் ரூ 5.2 கோடியை வசூலித்துள்ளது.

மேலும் நேற்று (செப்டம்பர் 8ஆம் தேதி) விடுமுறை நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-ராகவா லாரன்ஸ் சந்திப்பு; என்ன பேசினார்கள்?

ரஜினி-ராகவா லாரன்ஸ் சந்திப்பு; என்ன பேசினார்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini nad ragahavaசூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் அடிக்கடி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில் தற்போது தீடீரென ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறாராம்.

அப்போது பி.வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சிவலிங்கா படம் பற்றி தெரிவித்து, அதற்கான வாழ்த்தையும் பெற்றாராம்.

இவை தவிர்த்து, தன்னை பெற்ற தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டும் பணியை பற்றியும் பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

விஜய்யுடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்; இயக்குனர் இவரா?

விஜய்யுடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay stillsவிஜய் நடித்து வரும் படங்களை போலவே, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சுந்தர் சி இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தை இந்நிறுவனம் தயாரிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

மேலும் இப்படத்தை தெறி இயக்குனர் அட்லி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

More Articles
Follows