துரு துருவென ரெடியாகும் ‘துருவ நட்சத்திரம்’.; ரிலீஸ் அப்டேட் இதோ

துரு துருவென ரெடியாகும் ‘துருவ நட்சத்திரம்’.; ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் யாரின் கண் பட்டதோ கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ‘துருவ நட்சத்திரம்’ படம் அப்படியே கிடப்பில் உள்ளது.

இதில் நாயகியாக ரீத்துவர்மா நடிக்க இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 2018-லேயே திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டனர்.. ஆனாலும், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இதனையடுத்து சமீபத்தில் ‘விரைவில் ஜான் (விக்ரம்) உங்களை சந்திப்பார்’ என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

மேலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ரீ-ரெக்கார்ட்டிங்கில் பணியாற்றி வருவதாக பதிவிட்டு இருந்தார்.

இந்தப் படத்தை மே 3ம் வாரம் (19 தேதி) திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Chiyaan Vikram’s Dhruva Natchathiram to be released in theatres in THIS month?

‘லால் சலாம்’ படத்தில் ரஜினியுடன் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘லால் சலாம்’ படத்தில் ரஜினியுடன் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. நடிகை ஜீவிதா ராஜசேகர் 25 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இப்போது, ​​லால் சலாம் படத்தின் நட்சத்திரக் குழுவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணு விஷாலுடன் நடிகர் செந்தில் இடம் பெரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

This legendary comedian is the new addition to the star cast of ‘Lal Salaam’

அட்லியின் அடுத்த படத்தில் எதிர்பாராத மாற்றம்? – ரசிகர்கள் ஏமாற்றம்

அட்லியின் அடுத்த படத்தில் எதிர்பாராத மாற்றம்? – ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஜவான்’ வெளியாகும் என்பதை அட்லீ சில மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினார். ஷா ருக் கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக பாலிவுட்டின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மிகவும் பிஸியாக இருக்கும் சஞ்சய் தத்தின் பவர்ஃபுல் கேமியோவை உள்ளடக்கிய முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட தாமதமாவதாக சொல்லப்படுகிறது. உலகமெங்கும் பெரிய அளவில் படத்தை படக்குழு பிரமோட் செய்ய இருப்பதாலும் படம் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பு இருக்கு.

An unexpected change in Atlee’s next movie? – Fans disappointed

தாய்லாந்தில் இருந்து தாய்நாடு பறந்து வரும் சிலம்பரசன்

தாய்லாந்தில் இருந்து தாய்நாடு பறந்து வரும் சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘பத்து தல’.

இந்த படத்தில் மற்றொரு நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ் நடிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இதில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள சிம்பு இன்று இந்தியா திரும்புகிறார்.

வரும் சனிக்கிழமை மார்ச் 18 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மேடையில் ஏ ஆர் ரகுமான் live performance செய்ய உள்ளதாக கூறப்படுகிறது

Actor Silambarasan returning from Thailand to India today

A grand celebration awaits for him on March 18th at #PathuThala Audio Launch

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், சந்திரமௌலி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அஜ்மல் தாஷீன் இசையமைக்க, விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இப்படத்தை ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Aishwarya Rajesh’s ‘Soppana Sundari’ release date Announcement

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்த தெலுங்கு நடிகர்

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்த தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கேப்டன் மில்லர்’ தனுஷின் கேரியரில் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது.

இந்த வார தொடக்கத்தில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இணைந்தார். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் விறுவிறுப்பாக தற்சமயம் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் படப்பிடிப்பில் இணைந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. தற்போது நடந்து வரும் ஷெட்யூலில் போர் காட்சிகளை படமாக்கி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

New addition to the sets of Dhanush starrer ‘Captain Miller’!

More Articles
Follows