‘துருவ நட்சத்திரம்’ இந்தத் தேதியில் ரிலீஸ் ஆகிறதா ?

‘துருவ நட்சத்திரம்’ இந்தத் தேதியில் ரிலீஸ் ஆகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 இல் ஆரம்பிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளி கொண்டே போனது .

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் குறித்து கடந்த மாதம் கவுதமும், விக்ரமும் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்களை முடித்து, மே 19 அன்று துருவ நட்சத்திரம் வெள்ளித்திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை. இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

‘Dhruva Natchathiram’ to hit the screens on this date?

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி சூட்டிங் விபத்துக்கு பிறகு மீண்டும் பணிகளில் இறங்கியுள்ளார் . படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் ஆண்டனியே இயக்கிய ‘பிச்சைக்காரன் 2’ இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் அதே தேதியில் ‘பிச்சகடு2’ என்ற பெயரில் வெளியாகிறது. சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிச்சைக்காரன்/பிச்சகாடு’ படத்தின் தொடர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony officially announces festive release date of ‘Pichaikkaran 2’

மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவி ஜெயலட்சுமி காலமானார்

மறைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவி ஜெயலட்சுமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், தெலுங்கு திரையுலகின் மிகவும் போற்றப்பட்ட நடிகர் கே.விஸ்வநாத்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், பிப்ரவரி 3 ஆம் தேதி தனது 93 வயதில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

கணவர் இறந்து 24 நாட்களுக்கு பிறகு அவரது மனைவி ஜெயலட்சுமியும் உயிர் பிரிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இவர் வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டு வந்தார்கள். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

பல தெலுங்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஸ்வநாத்தின் அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்தார்கள்.

விஸ்வநாத்

director K.Viswanath’s wife Jayalakshmi passes away

காரைக்காலில் ‘சைரன்’.; ஜெயம் ரவிக்கு நினைவு பரிசு வழங்கிய மாமன்ற கலைஞர்கள்

காரைக்காலில் ‘சைரன்’.; ஜெயம் ரவிக்கு நினைவு பரிசு வழங்கிய மாமன்ற கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘சைரன்’ படத்தை இயக்கி வருகிறார் ஆண்டனி பாக்யராஜ்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்

இந்த படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்து சில நாட்களாகவே காரைக்கால் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

இந்த படக்குழுவினருடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார் ஆண்டனி பாக்யராஜ். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் காரைக்கால் நகரில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் சன்னதிக்கு சென்று சனீஸ்வர பகவானை தரிசித்துள்ளார் ஜெயம் ரவி.

அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றத்தின் சார்பில் ஜெயம் ரவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Jayam Ravi was given a memorial prize by Karaikal District Artists

ராதிகா தயாரிப்பில் விஜய் உடன் கைகோர்க்கும் எஸ்.ஏ சந்திரசேகர்

ராதிகா தயாரிப்பில் விஜய் உடன் கைகோர்க்கும் எஸ்.ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என்றால் அது எஸ் ஏ சந்திரசேகர் தான்.

ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு அதிரடியான பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மொழிகளிலும் இவரது புரட்சி கருத்துக்களுக்கு மார்க்கெட் இருந்தது.

இவருக்கு தற்போது 80 வயதாகும் நிலையிலும் படத்தில் கதையின் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

சிம்புவுடன் எஸ்ஏசி இணைந்து நடித்த ‘மாநாடு’ படம் நல்ல பெயரை பெற்று தந்தது

சமீபத்தில் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ‘கிழக்கு வாசல்’ என்ற டிவி சீரியலில் எஸ்.ஏசி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த டிவி சீரியலை பிரபல நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்த ரேஷ்மா, ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில் நடித்த அஸ்வினி ஆகியோரும் இந்த டிவி சீரியலில் நடிக்கின்றனர்.

SA Chandrasekar to act in radhikaa production for kizhakku vasal serial

அக்ரஹாரத்து மாமி கூட பண்ணினியா.?; பி்ரபுதேவா-வை அந்தரங்க மேட்டருக்குள் இறக்கிய ஆதிக்

அக்ரஹாரத்து மாமி கூட பண்ணினியா.?; பி்ரபுதேவா-வை அந்தரங்க மேட்டருக்குள் இறக்கிய ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

சமீப காலமாக படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. ஆனால் இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

சார்லி சாப்ளின் 2, தேவி 2, பொன் மாணிக்கவேல், தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை என அனைத்தும் தோல்வியை சந்தித்தன.

தற்போது AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பஹீரா BAGHEERA என்ற டத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா.

இந்த படம் வரும் மார்ச் 3ல் திரைக்கு வர இருக்கிறது.

பஹீரா

காதலின் பெயரால் இளைஞர்களை ஏமாற்றும் பெண்கள் பற்றிய கதைதான் இந்த படம் என தெரிய வருகிறது.. ஆனாலும் படத்தில் மோசமான தரக்குறைவான வசனங்களும் ஆபாச காட்சிகளும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

ஏறக்குறைய ஒரு பிட்டு படம் ரேஞ்சுக்கு தான் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார் என்பதை காட்சிகளை பார்க்கும்போதே தெரிகிறது.

ஏற்கனவே படத்தின் இரண்டு ட்ரைலர்கள் வெளியானது நிலையில் தற்போது ஸ்னீக் பிக் ரிலீஸாகியுள்ளது.

இதில் அக்ரஹாரத்து மாமி மேட்டர் பண்ணினியா.? போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோவில் பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Sneak Peek from @PDdancing ‘s #Bagheera ?
▶️

பஹீரா

Adhik who brought down Prabhudeva into the intimate matter

More Articles
Follows